தாய்மை அடைந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது - எமி ஜாக்ஸன்

தாய்மை அடைந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது - எமி ஜாக்ஸன்

சமீபமாக திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகை என்று இணையதளம் முழுக்க பேசப்பட்டவர் எமி ஜாக்ஸன். சில தொடர் த்ரில்லிங் நிகழ்வுகளுக்கு பின்புதான் எமி தான் தாயாக போவதை உணர்ந்திருக்கிறார்.


இவர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில்தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனாலும் திருமணம் பற்றிய தகவல்கள் எதையும் இவர்கள் தெரிவிக்கவில்லை. கிரீஸ் நாட்டில் இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று முன்பே எமி கூறியிருந்ததார்.


இதற்கிடையில் தான் தாய்மை அடைந்திருப்பதாக எமி தனது ரசிகர்களுடன் இந்த விஷயத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொண்டார்.


இந்த விஷயம் உறுதியான போது நான் உயர்ந்த இடத்தில இருந்து சத்தமாக கத்தி இதனை பற்றி அனைவரிடமும் தெரிவிக்க நினைத்தேன். ஆனால் இன்று அன்னையர் தினம் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே என்று நான் காத்திருந்தேன் என்று அவர் இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார்.


ஆலியாவை அப்படி வளர்க்கவில்லை' - அம்மா சோனி; 'லவ் யூ ரன்பீர்' மகள் ஆலியா !தனது பரிசுத்தமான காதல் பற்றி அவர் குறிப்பிடுகையில் உன்னை விட நான் வேறு யாரையும் இவ்வளவு நேசிக்கவில்லை. சுத்தமான மரியாதையான காதல் நம்முடையது. நமது குட்டி லிப்ராவை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை பிறப்பவர்களை லிப்ரா என்று அழைப்பார்கள். தனது குழந்தை பிறக்க போகும் அதுவாகத்தான் என்பது வரை கணித்து சந்தோஷப்பட்டிருக்கிறார் எமி.

பொதுவாக நடிப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்தால் கூட குழந்தை பேற்றை தள்ளி போடுவார்கள். காரணம் அதன் பின்னர் பழையபடி நடிக்க வாய்ப்புகள் வராது என்பதால். ஆனால் எமியோ திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகி அதனை கொண்டாடியும் வருவது அவரது காதலின் பால் அவர்கொண்ட நேசத்தை கூறுகிறது.


தனது தாய்மை பற்றி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த எமி (emi) தான் தாயாக போவது தனக்கு முன்கூட்டியே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். தாய்மை அடைதலில் முதல் 12 வாரங்கள் கடுமையாக இருக்கும் என்பது எனக்குத்தெரியும் ஆனாலும் முதல் ஆறு வாரங்கள் நான் தாயாக போகிறேன் என்கிற எந்த அறிகுறியும் எனக்கு ஏற்படவில்லை. ஆகவே எனக்கே தெரியவில்லை.


நான் ஸ்ரீலங்கா, இந்தியா , நியூயார்க் என பயணித்தபடியே இருந்தேன். ஆனாலும் கொஞ்சம் சிரமப்பட்டேன். அதன்பின்புதான் நான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்ததும் நான் அதனை சுலபமாகவே எடுத்துக் கொண்டேன். எதையும் நான் கட்டுப்படுத்த நினைக்கவில்லை.


ஆனால் குழந்தை வெளியே வந்தபின் அவனோ அவளோ அவர்களோடுதான் நான் எல்லா பக்கமும் செல்வேன். பயணிப்பேன். என்னை பார்த்துக் கொள்ள எனக்கு ஆதரவு தர எனது குடும்பத்தார் இருக்கின்றனர். அது நிச்சயமாக முக்கியமான ஒன்று. நான் மிக அதிர்ஷ்டம் வாய்ந்தவள் என்று கூறியிருக்கிறார்.மேலும் இந்த தாய்மை எனும் பதத்தை தான் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக அணுகி அனுபவிக்கப் போவதாகவும் அதற்காக தனது நடிப்பு தொழிலுக்கு விடுமுறை விட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். உங்கள் தாய்மை பொங்கும் அந்த தருணம் முழுமையடைய நாங்களும் வாழ்த்துகிறோம் எமி.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


யெஸ்! நான் கொஞ்சம் கொடுமைக்கார மனைவிதான்! உண்மையை ஒப்புக்கொண்ட ப்ரியங்கா சோப்ரா !


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.