பல முக்கியமான செயல்களுக்கு ஆரம்பமாக இருப்பது ஏப்ரல்தான். கோடை காலம் தொடங்கும் மாதம். புது வருடங்களை ஆரம்பிக்கும் மாதம் என ஏப்ரல் (april) எப்போதும் சிறப்பானது. இந்த மாதத்தில் நிலவு பூமிக்கு அருகே வருவதாக நம்பிக்கை இருக்கிறது. இந்த மாதத்தில் பிறந்த பெண் நிலாக்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஏப்ரல் மாதத்தை இரண்டாக பிரித்தால் ஏப்ரல் 1ல் இருந்து 19 வரை ஏரிஸ் எனும் மேஷ ராசிக்குள் சிலர் அடங்குவார்கள். ஏப்ரல் 20ல் இருந்து மே 20வரை ரிஷப ராசிக்குள் சிலர் அடங்குவார்கள். இரு வேறு ராசிகள் கொண்டவர்கள் ஒரே மாதத்தில் பிறப்பதால் அவர்களுக்குள் உள்ள குணாதிசியங்கள் சில வித்தியாசப்படும்.
ஏப்ரல் மாதம் பிறந்த இந்திய நிலாக்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராய் !
சென்சிடிவ் ஆனவர்கள்
மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள் ஏப்ரல் நிலாக்கள் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவது இவர்கள் வழக்கம். அது மட்டுமல்ல தன்னோடு பழகுபவர்களின் மைண்ட் வாய்ஸை உணர்ந்து கொள்வதில் திறமையானவர்கள். இதனால் இவர்கள் மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். கவுன்செல்லிங் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் தான் தோழி, வழிகாட்டி எனும் பதத்திற்கு பொருந்துபவர்கள்.
ஆத்ம வலு அதிகமாக இருப்பவர்கள்
இவர்கள் எதற்காகவும் பயப்பட மாட்டார்கள். எப்போதும் சவால்களையும் ரிஸ்க் அதிகமாக உள்ள வேலைகளை செய்வதிலும் விருப்பம் அதிகம் இருக்கும். நீங்கள் எதிலும் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது என்பது வெறுமனே வாழ்ந்து மடிவது என்பது இவர்களின் பழமொழியாக இருக்கும். இவர்கள் உள்ளுணர்வு அற்புதமாக வேலை செய்யும். போர்வை ஜென்ம புண்ணியங்கள் கை கொடுக்கும். தொடர்ந்து எல்லா விஷயங்களிலும் மனது சொல்வதை கேட்டால் ஆத்மாவின் குரல் இவர்களுக்குள் ஒலிக்க தொடங்கும்.
ஈர்ப்பு சக்தி பெற்றவர்கள்
ஏப்ரல் நிலாக்களுக்கு எப்போதும் அடுத்தவரை கவர்ந்திழுக்கும் சக்தி அதிகம். அழகான தோற்றம் மற்றும் குழந்தை மனது எப்போதும் இவரை மற்றவர்கள் தேடும் நிலைக்கு கொண்டு போகும். மற்றவரை மயக்குவதில் எப்போதும் சிறந்தவர்கள் ஆனாலும் இவர்களுக்கு அது தெரியாது. இவர்களுடைய ஆராவின் அற்புதம் அது. ஏப்ரல் நிலாக்களை கண்டாலே காதலில் விழும் காரணம் இதுதான்!
நட்பின் சிகரம்
நட்பென்பது காதலை விட முக்கியம் என்று நினைப்பார்கள். ஒருமுறை இவர்களது நண்பர்களாகி விட்டால் அவ்வளவு எளிதில் உங்களை விட்டு விலக மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்தால் மட்டுமே நட்பில் இருந்து வெளியேற முடியும். நண்பர்களுக்கு நேர்மையாக நடப்பவர்கள் ஏப்ரல் நிலாக்கள். இவர்களோடு நம்பி நட்பை தொடங்கலாம்.
காதலை காதலிக்கும் தன்மை
ஏப்ரல் நிலாக்கள் பெரும்பாலும் நியாயமான காதலுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். பருவ வயதை விட பக்குவப்பட்ட பிறகு இவர்களுக்கு ஏற்படும் காதல் நீண்ட நாள் நிலைக்கும். யோசித்து காதலை ஏற்கும் இவர்கள் அதன் காலம் நீண்டகாலமாக இருக்குமாறு பார்த்து கொள்வார்கள். காதலை மதிக்கும் இவர்கள் எதற்காகவும் அது மரிக்க விடமாட்டார்கள். காதல் உணர்வு இறந்து போனால் இவர்களும் இறந்து போன மாதிரிதான்.
உங்கள் தனித்துவத்தை கண்டறியுங்கள்!
நிதானம் அற்றவர்கள்
ஏப்ரல் நிலாக்களுக்கு கொஞ்சம் பொறுமை இருக்காது. எதிலும் அவசரம் இருக்கும். புரிதலை மறுப்பார்கள். காரணம் தான் செய்ய கூடிய வேலை சரியானது என்பதில் தெளிவாக இருப்பதால் வைப்பதை விட செயல்படுத்தி காட்டலாம் என நினைப்பார்கள். ஆனாலும் இரண்டாவது பாதியில் தண்ணீரை சல்லடையில் நிறுத்தும் வரை பொறுமை காக்கும் அற்புதமானவர்களாக மாறுவார்கள்.
எதிரி ஆனால் அவ்வளவுதான் கதை
ஏப்ரல் நிலாக்கள் மிக கருணை உடையவர்கள். நேசத்தை மதிப்பவர்கள் என்றாலும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் நிகழ்த்தி விட்டாலோ ஏமாற்றி விட்டாலோ அவர்களை இவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். முக்கியமாக துரோகிகளை மறக்கவே மாட்டார்கள். நம்பிக்கையை காப்பாற்றாதவர்களை தூக்கி எறிவது இவர்களின் இயல்பு.
ராஜாக்களை உருவாக்கும் ராணிகள்
ஏப்ரல் நிலாக்கள் வெகு சீக்கிரம் எதனையும் கற்று கொள்வார்கள். மேலும் புதுமையான செயல்களை செய்வார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆகவே உடன் இருப்பவர்களை உயரமான இடத்தில் வைத்து பார்க்க நினைப்பார்கள். ராஜாக்களை உருவாக்கும் ராணிகளாக ஏப்ரல் நிலாக்கள் இருப்பார்கள்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
பிறந்த மாதத்தின் அடிப்படையில் பெண்களின் குணாதிசயங்கள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.