நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லுங்கள்! உங்களை பற்றி நாங்கள் சொல்கிறோம் !

நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லுங்கள்! உங்களை பற்றி நாங்கள் சொல்கிறோம் !

பிறந்த மாதத்தின் அடிப்படையிலான ராசிபலன்கள் பெரும்பாலும் மிக சரியாகவே இருக்கிறதாக பரவலாக பேசப்படுகிறது. இனம் , மொழி, பேதங்களைத் தாண்டி இந்த ராசிபலன்கள் உலகளவில் உள்ள அனைவருக்கும் பொருத்தமாக இருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நாடு ஒரு விதமான ஜோதிட சாஸ்திரங்களை பின்பற்றுகிறது. ஆனால் பிறந்த மாதத்தின் அடிப்படையிலான ராசிபலன்கள் என்பது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்திப் போவதால் இது மற்ற ஜோதிட பலன்களைக் காட்டிலும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் பிறந்த மாதத்தின் ( birth month )அடிப்படையில் பெண்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


ஜனவரி


இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகப் பொறுப்பானவர்கள். லட்சியங்களை நோக்கிய பாதைகளில் பயணம் செய்பவர்கள். எல்லாவற்றையும் தீவிரமாகவே அணுகுவார்கள். தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசத் தயங்குவார்கள். இவர்கள் எண்ண அலைகளுடன் ஒத்துப் போவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள்.பிப்ரவரி


இந்த மாதம் காதலர் மாதம் என்பதாலோ என்னவோ இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் ரொமான்டிக் உணர்வுகளோடு இருப்பார்கள்.இவர்களின் எண்ணங்கள் அவ்வவ்போது மாறிக் கொண்டே இருக்கும். எல்லோரும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியாத வித்யாசமான குணங்கள் இவர்களிடம் இருக்கும்.
மார்ச்


இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு அடுத்தவர்களை வசீகரிக்கும் சக்தி அதிகம் இருக்கும். வலிமையானவர்களான இவர்களால் நேர்மையாக இருப்பார்கள். ஆளுமைத்திறன் கொண்டவர்கள். நிறைய யோசித்து அதன்பின்னர்தான் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பார்கள். எளிய மனிதர்களைப் போல பழகுவார்கள்.ஏப்ரல்


இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்புவார்கள். தங்களை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருப்பார்கள். உதவி என்று கேட்டால் ஓடோடி வருவார்கள். தங்களுக்கு கூட வைத்துக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவுவார்கள். மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டு வருந்துவார்கள். தனிப்பட்ட முறையில் இவர்கள் தங்கமானவர்கள்.மே


இவர்கள் பிடிவாதமானவர்கள். யாரோடும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தனிப்பட்ட கொள்கைகளோடு வாழ்பவர்கள். நேர்மையான இவர்களோடு யாரும் அவ்வளவு எளிதாய்ப் பழகி விட முடியாது. இவர்களைக் காதலிக்க வைப்பதும் கடினமான விஷயம்தான்.ஜூன்


இந்த மாதத்தில் பிறந்த இவர்கள் அதீத ஆர்வம் கொண்டவர்கள். சுறுசுறுப்பாங்க எதையாவது செய்தபடியே இருப்பார்கள். இவர்களிடம் கற்பனைகள் கொட்டிக் கிடைக்கும். உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தும் திறமைசாலிகள். வெளிப்படையானவர்கள். பொறாமை குணங்கள் இருக்கும்.ஜூலை


இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பல்வேறு குணங்களைக் கொண்டிருப்பார்கள். யாருடனும் சண்டையிடவோ வம்புக்கு போகவோ விரும்ப மாட்டார்கள். அமைதி பிரியர்கள், எல்லோருடனும் சரிசமமாகப் பழகுவார்கள். யாரவது இவர்களை ஏமாற்றி விட்டால் மன்னிக்க மாட்டார்கள். யாரையும் ஏமாற்ற இவர்கள் விரும்ப மாட்டார்கள்.ஆகஸ்ட்


இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தனித்துவமானவர்கள். நல்லவர்களாக இருக்கவே விரும்புவார்கள். சுயமரியாதை அதிகம் கொண்டவர்கள். இவர்களுடன் யாரேனும் மோதினால் அவர்களுக்கு தோல்விதான் மிஞ்சும். தன்னோடு பழகுபவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்செப்டம்பர்


இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பானவர்கள் அழகானவர்கள் அடக்கமானவர்கள். இவர்களால் தவறுகளை மன்னிக்கவே முடியாது. கொஞ்ச காலம் பழகிவிட்டு மறப்பது இவர்கள் பழக்கமுள்ள. நீண்ட கால உறவுகளை இவர்கள் விரும்புவார்கள்.அக்டோபர்


இந்த மாதம் பிறந்தவர்கள் உணர்ச்சிவயப்படுபவர்கள். வலிமையான இவர்கள் யாரையும் வெறுக்க மாட்டார்கள். அதே சமயம் ரகசியங்களை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பழகுவதற்கும் நம்புவதற்கும் சரியானவர்கள்.நவம்பர்


இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் உண்மையானவர்கள். இவர்களை போலவே பழகுபவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். போலியாக இருந்தால் இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். மற்றவர்களை காட்டிலும் உயரத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.டிசம்பர்


இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதில் வல்லவர்கள். பொறுமை மட்டும் இருக்காது. ஆனாலும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்கள் கிடைத்தே தீரும்.இந்த ராசிபலனில் உங்கள் ராசியும் உங்கள் குணமும் ஒத்துப் போகிறதா என்று பார்த்து எங்களுக்கு கமெண்ட் செய்யுங்கள்.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.