கடவுளின் தேசமான கேரளாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களின் மொழியை போலவே அவர்களும் மெல்லினமானவர்கள். அதிலும் மிக முக்கியமாக தெரிந்த ஒரு விஷயம் மேக்கப் போடாமலும் மினுமினுக்கும் அழகு கொண்டவர்கள் கேரளப் பெண்கள். (Kerala)
பெண்களை கண்டு பெண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு இயற்கையான வனப்புடன் திகழும் கேரள பெண்களின் அழகு ரகசியம் சிலவற்றை உங்களுக்காக ரகசியமாக கொடுக்கிறோம். நீங்கள் அதனை பயன்படுத்தி மினுமினுக்கும் தேகம் மற்றும் ஜொலிக்கும் முக அழகை பெறுங்கள்.
கேரள உணவு முறை
ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு. கேரளாவில் ப்ரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நிறம் மாற்றி பாலிஷ் செய்யப்படாத கேரளா அரிசியை மாதத்தில் சில நாட்கள் எடுத்துக் கொள்வது உங்கள் அழகை மேலும் கூட்டும்.
பால்
கேரள பெண்களின் உடல் வனப்பிற்கு பெரிதும் உதவுவது பால்தான். முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அவைகளை மூடி விடும் குணம் பாலிற்கு உள்ளது. மேலும் முகத்தின் நிறம் மங்காமல் காக்கும்.
முல்தானி மெட்டி
கேரளாவில் மரங்கள் நிறைய உண்டு. அவர்களுக்கு இயற்கையான பல உயர்தர பொருள்கள் ஏற்க கூடிய விலையில் கிடைக்கும். அதில் ஒன்றுதான் தூய்மையான சந்தனம்.
இந்த சந்தனத்தை முல்தானி மெட்டியோடு கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவி காய விடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி நிறம் மேலும் கூடும். மேலும் கரும்புள்ளிகள் வராமல் முகம் பளிங்கு போல மின்னும்.
தேவையற்ற முடிகளை அகற்றும் கேரளா ரகசியம்
முகத்தில் உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் சில பெண்களுக்கு இருப்பது சகஜம்தான். இதனை நீக்க நாம் பார்லர் செல்கிறோம். கேரள பெண்களோ ஒரு ஸ்பெஷல் கலவையை உபயோகித்து முடிகளை நீக்குகிறார்கள்.
நல்லெண்ணை, கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் முகத்தை கழுவுகையில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடுகிறது.
தேங்காய்
ஊருக்கெல்லாம் தெரிந்த அந்த ஒரே ரகசியம்தான். கேரள பெண்களை மிக அழகாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் மற்றும் அது சார்ந்த பொருள்கள்தான்.
குளிக்கும் முன்பு வெயில் படும் இடமெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு போட்டு குளிப்பதால்தான் இவர்கள் தேகம் மின்னுகிறது. அதுவும் பெரும்பாலான பெண்கள் ஆற்று நீரில் குளிப்பதால் அதில் உள்ள மினரல்கள் உடலில் ஏறுகின்றன.
கேரளாவெங்கும் அதிகமாக காணப்படும் தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே ! அதில் இருந்து வரும் தேங்காயை பால் எடுத்து அதனை தலை மற்றும் உடல் முழுதும் தடவுகின்றனர். அதன் பின்னர் குளிக்கின்றனர். இதனால் தேங்காயின் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு போகிறது. மேலும் தேங்காயின் வழவழப்பை போலவே கேரள பெண்களின் மேனியும் பளபளப்பு கூடுகிறது. கூந்தலும் 60 வயது ஆனாலும் மறைக்காமல் கருகருவென நீளமாக வளர்கிறது.
என்ன கேரளா ரகசியங்களை அறிந்து கொண்டீர்களா.. எங்க தேங்காய் வாங்க கிளம்பிட்டிங்க போல !
முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!
கொளுத்தும் வெயிலில் உங்கள் முகத்தை குளுகுளுன்னு வைத்துக்கொள்வதற்கான சூப்பர் டிப்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.