கல்வி மற்றும் தொழில் சிறக்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை: பூஜைகள் செய்ய ஏற்ற நேரங்கள்!

கல்வி மற்றும் தொழில் சிறக்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை:  பூஜைகள் செய்ய ஏற்ற நேரங்கள்!

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை (puja), ஆயுத பூஜை நாளாகும். 

முப்பெருந்தேவியரை 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி பண்டிகையாகும். முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

கொலு நிவேத்தியம் – நவராத்திரி பூஜை பலகாரங்கள்

இந்த பண்டிகையின் போது உடல் வலிமை தரும் துர்க்கா தேவி, வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை தரவல்ல மஹாலட்சுமி, அறிவை தரவல்ல கல்வியின் தேவதையான சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெற பூஜை செய்கின்றோம்.

pixabay

ஆயுத பூஜை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. 

நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பூஜைகள் (puja) நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

சரஸ்வதி பூஜை

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்த சரஸ்வதி தேவிவை ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை (puja). சரஸ்வதி பூஜை அன்று அதிகாலை வீட்டை சுத்தம் நீராடுவதை முடித்து விட வேண்டும். பூஜை அறையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.

pixabay

படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணித்து, அதன் முன்னர் மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி முன்னர் வாழையிலையை விரித்து வெற்றிலைப் பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

விஜயதசமி

தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர் விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. 

திருமணத்திற்கு பின் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா! இன்ஸ்டாக்ராமை கலக்கும் ஆல்யா!

மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். 

pixabay

பூஜை செய்ய ஏற்ற நேரம்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை புரட்டாசி 20ம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. 

ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். விஜயதசமி அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்நாள் சாமி கும்பிட்டவர்கள் மறு பூஜை செய்ய நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணிவரை காலை 10.30 மணி முதல் 11 மணிவரை பூஜை செய்யலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!