அடுத்த அடி எடுத்து வைத்து முன்னேற விரும்பும் பெண்களுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு தருவதில் முதலிடத்தில் இருப்பது பாலிவுட்.
இயக்குனராக கங்கனா ரணாவத் எடுத்த அவதாரம் பெரும் வெற்றி பெற்றது. ஏற்கனவே பல பெண் இயக்குனர்கள் பாலிவுட்டில் இருக்கிறார்கள். ஆனாலும் நடிகையாக பல வ்ருடங்கள் அனுபவம் பெற்றவர்கள் இயக்க வருவதில்லை. அதில் முதல் படி எடுத்து வைத்த கங்கனா மணிகர்ணிகா படத்தின் மூலம் பெரும் வெற்றி பெற்று விட்டார்.
மேலும் பாலிவுட்டில் சுட்டி பெண் ஆலியா முதல் தீபிகா படுகோன் அனுஷ்கா ஷர்மா என பலரும் தயாரிப்பு துறையில் இறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ராயும் ( Aishwarya rai ) இயக்குனர் ஆகும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடைசியாக இவர் நடித்த பேன்னி கான் படம் எதிர்பாத்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இவர் தமிழில் பொன்னியின் செல்வனில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரபல பப்ளிகேஷன் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராய் நான் திரைக்கு வந்து பல வருட அனுபவம் ஆகிவிட்டது. எனது அனுபவத்தில் திரைத்துறையில் இயக்கம் மற்றும் தயாரிப்பு இரண்டும் அதிக பொறுப்புகள் வாய்ந்த கடினமான இடம் என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் திரைப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் இயக்குவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அது என் மனதில் எப்போதும் இருக்கும் ஒரு ஆசை. நான் நிச்சயம் ஒரு படத்தை இயக்குவேன்.முன்பெல்லாம் அதற்கான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது அதனை பற்றி யோசிக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். மகள் ஆராத்யா வளர்ப்பு அவரது நேரமின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் இப்போது அவர் வளர்ந்து விட்டதால் ஐஸ்வர்யாவால் படம் இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து சக நட்பு நடிகர்கள் ஐஸ்வர்யாவிடம் தயாரிப்பு மற்றும் இயக்கம் பற்றி விளையாட்டாக கேலி செய்வதாகவும் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கூடிய விரைவில் வரலாம் என்றும் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மீண்டும் திரையில் இணைந்து நடிக்க போவதாக செய்திகள் கூறுகின்றன. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சாஹிர் லூதியான்வியின் சுய சரிதம் படமாக்க படுகிறது அதில்தான் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா இணைய போகிறார் மேலும் இவர்களுடன் டாப்ஸி பன்னுவும் இணைவார் என எதிர்பார்க்க படுகிறது. இன்னமும் இது பற்றிய அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.