ரியால்ட்டி ஷோவில் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை கஜோல்.. வைரலாகும் வீடியோ!

ரியால்ட்டி ஷோவில் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை கஜோல்.. வைரலாகும் வீடியோ!

இந்தி நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் “மின்சாரக்கனவு ” என்ற படத்தில் நடித்து இருந்தார். 

அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார். இந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஜோல், எனக்கு சினிமா மீதான மோகம் குறையாது. 

அதேசமயம் எனது குடும்பத்தையும் அக்கறையுடன் வழிநடத்தி கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகளை கவனித்துக்கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். 

instagram

பல நேரங்களில் நல்ல படங்களை தவறவிட்டு இருக்கிறேன், அதற்காக பல நேரங்களில் அழுததும் உண்டு. எனவே தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை கஜோல் சமீபத்தில் ஷாருகான் நடித்த “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

மேலும் படிக்க - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குழப்பம் : சித்ராவுடன் பிரச்சனை.. உண்மையை உடைத்த குமரன்!

தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.  இவர் 1999ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 

இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல், அஜய் தேவ்கனுக்கு  “நைஸா” என்ற மகளும் மற்றும் என்ற “நக்” என்ற மகனும் உள்ளனர். கஜோல்– அஜய் தேவ்கான் ஜோடி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

instagram

ஒரு புறம் சினிமா, நடிப்பு என பிசியாக இருந்தாலும் இருவரும் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவதால் கவனத்துடன் உள்ளனர். அவ்வப்போது கொடுப்பதுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க - விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?

சமீபத்தில் தனது மகள் பிறந்தநாளை கொண்டாடிய கஜோல் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இளமையாக காணப்படும் கஜோலிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என கமெண்ட்ஸ் செய்திருந்தனர். 

மேலும் பேட்டி ஒன்றில் உங்கள் மகளுக்கு நீங்கள் நடித்த படங்களில் பிடிக்காத படம் எது என்ற கேள்விக்கு, விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி' படம் என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம் என கூறினார். 

அந்தப் படத்தில் நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படத்தின் இறுதியில் இறந்துவிடுவேன். மிகவும் உருக்கமான படம் அது. படத்தின் இறுதியில் நான் மரணமடைகிற காட்சியின்போது அவள் அலறியபடி வெளியே ஓடிவிட்டாள் என கூறியிருந்தார்.

 

twitter

இந்நிலையில் தனியார் டிவி நடத்தும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கஜோல் அவரது கணவர் அஜேய் தேவ்கானை கன்னத்தில் அறையும் பிரமோவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். பரபரப்பாக செல்லும் ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அஜய் தேவ்கான் மற்றும் நடிகை கஜோல் அவர்கள் வந்து இருந்தார்கள். அவர்களிடம் கலகலப்பான கேள்விகளை சல்மான் கேட்கிறார்.

மேலும் கஜோல் - அஜய் தேவ்கானுக்கு குறும்புத்தனமான ஒரு போட்டியை சல்மான் வைக்கிறார். அந்த போட்டியில் குழப்பி போன கஜோல் திடீரென தன்னுடைய கணவர் அஜய் தேவ்கனை கன்னத்தில் அறைகிறார். 

இந்த வீடியோவை இன்றைய நிகழ்ச்சிக்கான பிரமோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க - சீரியல் நடிகை ஆலியா மானசாவிற்கு வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!