முடிவுக்கு வந்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுடன் இணைந்து வீடியோ வெளியிட்ட குமரன்!

முடிவுக்கு வந்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுடன் இணைந்து வீடியோ வெளியிட்ட குமரன்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ், வில்லிகளே இல்லாமல் கூட்டுக் குடும்பத்தின் நிகழ்வுகளை எதார்த்தமாக பதிவு செய்கிறது. 

இதனால் இந்த சீரியலுக்கு எக்கச்சக்க வரவேற்பு. மூன்று மருமகள்கள் இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். ஆனாலும் மூன்று ஜோடிகளுக்கும் தனித்தனியாக முக்கியத்துவம். 

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன் (kumaran), ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. 

twitter

கதிராக குமரனும், முல்லையாக சித்ராவும் மிகவும் நேர்த்தியாக தங்கள் கதாபாத்திரங்களை நடித்து வருகின்றனர். இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். 

மேலும் இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். 

மேலும் படிக்க - ஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..

அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே நடனம் என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அருமையாக ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்குள் சில முரண்பாடுகள் எழுந்ததால் எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.

மேலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இது வெறும் வதந்தி தான் என கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவரும் மோதலில் தான் உள்ளார்கள் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

twitter

இதுகுறித்து சமீபத்தில் பேசியிருந்த சித்ரா, ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். தற்போதும் நண்பர்களாக தான் இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கும். 

நான் ஒவ்வொரு மிகவும் சாகசமாக பழகுவேன். யாராவது என்னை காயப்படுத்தினாலும் அவர்களுடன் நான் ஜாலியாக தான் பேசுவேன் இது தான் என்னுடைய கேரக்டர். ஆனால் ஒரு சில பேருக்கு அது வேற மாதிரி இருக்கும். ஒரு சிலர் கொஞ்சம் ரசர்வ்ட்டாக இருப்பார்கள். 

மேலும் படிக்க - விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?

அதனால் கூட இருக்கலாம். ஆனால் எனக்கும் குமரனுக்கு பிரச்சனை வந்து சண்டை நடந்தது என்பது எல்லாம் கிடையவே கிடையாது. வெளியில் எங்களுக்குள் போல ஏதோ பெரிய பிரச்சனை இருப்பது போல கிளப்பி விடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

twitter

இந்நிலையில் இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குமரன் (kumaran), சித்ராவுடன் இருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் நீங்கள் நினைப்பது போலவும், வெளியில் பேசிக் கொள்வது போலவும் பெரிய சண்டை எல்லாம் கிடையாது. எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள்தான். நாங்கள் இன்னும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். 

 
 
 
View this post on Instagram
 
 

" Whatever Happens stay Positive!!stay calm!!! Nothing is permanent. " We r still friends and working on our friendship for better. @chithuvj

A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan) on

எங்களுக்குள் இருப்பது நண்பர்களுக்கு இடையே இருக்கும் சிறு சிறு சண்டை தான் என்றும் கூறியுள்ளார். எனவே வெளியில் செல்வதை எல்லாம் நம்பவேண்டாம். 

இப்போது கொடுத்து வருவது போல தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் எனவும் அந்த வீடியோவில் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் என்ன நடந்தாலும் பாசிட்டிவாகவும், அமைதியாகவும் இருங்கள். 

எதுவும் நிரந்தரம் கிடையாது. நாங்கள் இருவரும் இன்னும் நண்பர்களாக தான் இருக்கிறோம். எங்களது நட்பை மேலும் வளர்க்க முயற்சி செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள குமரன்(kumaran), சித்ராவை டேகும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க - சீரியல் நடிகை ஆலியா மானசாவிற்கு வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!