logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
இந்த தீபாவளி எங்க தீபாவளி!  விஜய் ரசிகர்கள் கொண்டாடும் தளபதி 63!

இந்த தீபாவளி எங்க தீபாவளி! விஜய் ரசிகர்கள் கொண்டாடும் தளபதி 63!

விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இணையும் மூன்றாவது படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை ஆகவே தளபதி 63 என்று அழைக்கின்றனர். (vijay 63)

இவ்விருவரும் இணைந்து தெறி மற்றும் மெர்சல் படங்களை சூப்பர் ஹிட்டாக்கிய நிலையில் இந்த தளபதி 63 ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

ADVERTISEMENT

நயன்தாராவோடு இரண்டாவதாக இணைவது விஜய் மட்டுமல்ல இயக்குனர் அட்லீயும்தான்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நயன்தாராவுக்கு ஒரு கம்பேக் படம் தந்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல விருதுகளையும் அள்ளித் தந்தது.

அதன்பின் இவ்விருவரும் மீண்டும் இணைகின்றனர். அட்லீயுடன் இணையும் யாருக்கும் வெற்றி தான் என்பது போல இந்த மூவரும் இந்த படத்தில் பணிபுரிய ஆரம்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதில் விஜய் பெண்களுக்கு கால்பந்து பயிற்சியாளராக வருகிறார் என கூறப்படுகிறது. இதன் ஆரம்ப கட்ட படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் படப்பிடிப்பில் நடந்த சிறுவிபத்தில் தனது ரசிகர்களை ஓடி சென்று விஜய் காப்பாற்றிய வீடியோ வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 63 படப்பிடிப்பு தளமும் வெளியானது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தை சன் குழுமத்தினர் 65கோடிக்கு சாட்டிலைட் உரிமை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் தளபதி ரசிகர்கள் இதனை ட்விட்டரில் கொண்டாடுகின்றனர்.

இன்றைக்கு ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதும் தளபதி 63 தான்!

அனைத்து மொழிக்கும் 65கோடிக்கு சாட்டிலைட் உரிமை விற்பனையாகி இருப்பதாகவும் தமிழுக்கு மட்டுமே 50-52 கோடி விற்பனை நடந்திருப்பதாகவும் கூறும் ரசிகர்கள் இந்த தீபாவளி எங்கள் தீபாவளி என்று இப்போதே தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயார் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

சில ட்விட்டர் பக்கங்கள் உங்களுக்காக

 

 

 

ADVERTISEMENT

 

 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

ADVERTISEMENT
19 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT