logo
ADVERTISEMENT
home / அழகு
கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா !  சில அழகு குறிப்புகள்!

கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!

வெயில் காலம் வந்து விட்டது. இப்போதே சூரியன் தனது வெப்பத்தால் நம்மை முதலில் சுட்டு அதன் பின் நம் சருமத்தை எரிக்கவும் செய்கிறது! இதற்காக “வாட் எ பர்பெக்ட் ஜாப்” என்று நம்மால் சூரியனை புகழவெல்லாம் முடியவில்லை.

அடிக்கும் வெயிலில் எத்தனை SPF கொண்ட க்ரீம்கள் பயன்படுத்தினாலும் நேரடி வெயிலால் சருமம் டேன் (Tan) ஆகிறது தடுக்க முடியவில்லை. இதற்காக கொஞ்சம் வீட்டிலிருந்தே சில முயற்சிகள் செய்வதன் மூலம் வெளியில் செல்லும்போது சுடும் சூரியனும் நம்மிடம் எதுவும் செய்யாது.

பன்னீர், ரோஜா இதழ், வெட்டி வேர் இவைகளை பயன்படுத்தி நம் முகத்தை குளிர வைப்பதோடு ஒளிரவும் வைக்கலாம். பன்னீரில் ரோஜா இதழ்கள் மற்றும் வெட்டி வேரை மிதமாக கசக்கி ஒரு மணி நேரம் வரை ஊற விடுங்கள். அதன் பின்னர் கசக்கிய ரோஜா இதழ் மற்றும் வெட்டி வேர் சாறு இந்த நீரில் இறங்கி நிறம் மாறி இருக்கும். இந்த நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரியுங்கள். வெயிலில் வெளியே செல்லும் முன்னரும் சென்று வந்த பின்னரும் இந்த நீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுங்கள். சருமம் மிளிரும்.

ADVERTISEMENT

மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !

இதனை போலவே காய்ச்சாத பால் மற்றும் ரோஜா இதழ் கொண்டு உங்கள் முகத்தை பாதுகாக்கலாம். ஒரு கையளவு ரோஜா இதழ்களை ஒரு கப் பாலில் கசக்கி விடவும். பால் ரோஜா நிறத்திற்கு மாறும். அதன் பின்னர் இந்த கலவையோடு ஒரு சில சொட்டுக்கள் தேன் விட்டு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். உங்கள் சருமம் மின்னும் பேரழகை வெளிக்காட்டும்.

இறந்த செல்களை நீக்க இந்த ஒயின் கலந்த பேஸ்ட் உதவும். ஆலோவீரா ஜெல் மற்றும் ஒயினை சம அளவு கலந்து கொண்டு முகத்தில் தடவுங்கள். சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் கழுவி விடுங்கள். கற்றாழையின் புத்துணர்ச்சி மற்றும் இறந்த செல்களை நீக்கிய புத்துணர்வு இரண்டுமே உங்கள் முகத்திற்கு உத்திரவாதம்.

ADVERTISEMENT

பட்டை வெயிலால் கருமையான உங்கள் முகத்தின் நிறத்தை மீது கொடுக்கும் அருமையான மருந்து. கடலை மாவு இரண்டு ஸ்பூன், அரிசிமாவு 1 ஸ்பூன், பட்டை அரை ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் இந்த கலவையை ஒன்றாக கலந்து அதனுடன் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு விடவும். பின் இந்த பசையை முகத்தில் தடவுங்கள். அரை மணி களைத்து முகம் கழுவுங்கள் இதனால் முகம் கருமை நீக்கி பளபளப்பாகும்.

எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தயிர் கலந்து ஒரு பேக் தயாரித்து அதனை முகத்தில் தடவி அரை மணி கழித்து கழுவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

ADVERTISEMENT

தினமும் சமைப்பது உங்கள் வேலை என்றால் தக்காளியை நறுக்கும்போது அதில் வீணாகும் சாறை எடுத்து அதனுடன் தயிர் கலந்து முகத்தில் தடவியபடியே சமையுங்கள். பின்னர் முகத்தை கழுவி விடுங்கள். இதனால் உங்கள் முகம் வெயில் தந்த நிறத்தை பொன்னிறமாக மாற்றும்.

மஞ்சள் கிழங்கு எடுத்து அதனை பொடியாக்கி நீரில் கொதிக்க விடுங்கள். இந்த நீரை மாலை வேளைகளில் ஆவி பிடியுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்குவதோடு சருமம் பளபளப்பாக மின்னும்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

ADVERTISEMENT

முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
17 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT