logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிரபலமான கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு எடுத்துக் கொண்ட காலம் தமிழ் நடிகைகள் சரித்திரத்தில் கொஞ்சம் அதிகமான காலமாகவே கருதப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (aishwarya rajesh) முதல் முதலில் தமிழில் அறிமுகம் ஆன திரைப்படம் நீதானா அவன் என்னும் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வெளியான சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறி விட்டது. அதன் பின்னர் ஐஸ்வர்யாவிற்கு கை கொடுத்தது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று கொடுத்தது.

செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !

ADVERTISEMENT

Youtube

அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நாயகியாக நடிக்க ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரம்மி திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்க ஆரம்பித்தார். அந்த படத்தில் இவர் விஜய் சேதுபதியின் நண்பரின் காதலியாக வந்திருப்பார்.

அதற்கடுத்த படங்களான பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, செக்க சிவந்த வானம் வரை விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் இனைந்து நடித்தார். ஜோடியாக சில படங்களிலும் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஒரு படத்திலும் நடித்திருந்தார். சமயங்களில் இவர் நடித்த திரைப்படங்களை விடவும் இவர் மீதான கிசுகிசுக்கள் அதிகமாக இருந்ததாக சொல்லப்பட்டது.

சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு தலைவர் ரஜினிகாந்த்… தர்பார் திரை விமர்சனம்!

ADVERTISEMENT

Youtube

இதனை தவிர கனா போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தான் வேண்டும் என தனித்தன்மை பெற்ற நடிகையாக முன்னேறி இருந்தார். வடசென்னை போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தது. தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பல விருதுகளையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷின் இளமை பருவம் எத்திராஜ் கல்லூரியில் கழிந்தது.. 1990ல் பிறந்தவர் ஐஸ்வர்யா. இவர் முதன் முதலில் மானாட மயிலாட எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமை காட்டி தன்னுடைய முகத்தை வெளியுலகத்துக்கு அறிமுகம் செய்தார். இதுதான் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி அனைவரும் அறிந்த செய்தி.

ADVERTISEMENT

என்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்!

Youtube

அறியாத செய்தி ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் மெகா ஹிட் கொடுத்த நடிப்பு குடும்பத்தின் வாரிசு என்பதுதான். ஐஸ்வர்யா ராஜேஷில் இருக்கும் அப்பாவான ராஜேஷ் மிக சிறந்த நடிகராம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். இவரது அப்பா ராஜேஷ் 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் 1983ல் நடித்த ஆனந்த பைரவி திரைப்படம் மெகா ஹிட் கொடுத்திருக்கிறது.

ADVERTISEMENT

ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா தெலுங்கில் வெற்றி கதாநாயகன் என்பதை தவிர ஐஸ்வர்யாவின் தாத்தா அமர்நாத் அந்த கால நடிகராக இருந்திருக்கிறார். அதைப்போலவே நடிகை ஐஸ்வர்யாவின் அத்தை ஸ்ரீ லக்ஷ்மியும் தெலுங்கில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருந்திருக்கிறார். இதுவே ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய பின்னணி.

வழக்கமாக தமிழ் நடிகைகள் தங்களை அரச பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்று கூறி கொள்வது வழக்கம். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷோ ஒரு வெற்றிகரமான நடிப்பு குடும்பத்தின் வாரிசு என்று தன்னை ஒரு போதும் சொல்லி கொண்டதே இல்லை. மிகவும் சிம்பிளான குடும்பம் தன்னுடைய குடும்பம் என்னும் பிம்பத்தை தான் சினிமா வட்டாரத்தில் காட்டி கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த அடக்கம் மேலும் பல வெற்றிகளுக்கு வழி வகுக்கட்டும்.

மதுமிதாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள் !

 

ADVERTISEMENT

Youtube

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

09 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT