பிக் பாஸ் சீசன் மூன்று பல நபர்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதில் முக்கியமானவர் ஷெரின். தமிழில் துள்ளுவதோ இளமையில் நடித்து இளைஞர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் ஷெரின். அதன் பின்னர் ஒரு சில படங்களோடு நடிப்பை தொடரவில்லை.
அதற்கு அவரது சொந்த காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் அவர் டிஜே யாக மாறினார். நடிகையாக சினிமா இண்டஸ்ட்ரியில் தாக்கு பிடிக்க செய்ய வேண்டிய காம்ப்ரமைஸ்களை விட டிஜே பணி என்பது முகம் காட்டாமல் திறமைக்கு மட்டுமே வருமானம் என்பதற்கான வழி.
நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !
Hotstar
ஷெரீனுக்கும் இது பிடித்து போயிருக்கவே டிஜே ஆனார். பின்னர் தன்னுடைய தனிமையான நேரங்களை சற்று நேரம் மறந்திருக்கவே அவர் பிக் பாஸ் நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார். இது பிக் பாஸ் சீசனில் அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொன்ன விஷயம்.
பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் மீது க்ரஷ் இருந்தாலும் அதனை நாகரிகமான முறையில் மட்டுமே வெளிப்படுத்தி தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி கண்ணியமான நட்பாகவே அதனை மாற்றி கொண்டார் ஷெரின் (sherin) இதுவே அவரை இறுதி நிமிடம் வரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்தது.
ஒரு சிறந்த காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசன் !
Hot star
ஒரு கட்டத்தில் வனிதா தர்ஷன் ஷெரின் (sherin) உறவை தவறாக பேச வார்த்தைகளின் வீர்யம் தாங்காமல் முகம் சிவக்க உதடு துடிக்க ஷெரின் உணர்ச்சிப்பிழம்பாக மாறிய போது அவரது உள் உணர்வுகள் மக்களுக்கு போய் சேர்ந்தது.
வனிதா வெளியேறிய பிறகு மீண்டும் தர்ஷனுடன் பேசிக்கொண்டிருந்த ஷெரினிற்கு வேண்டுமென்றே பிக் பாஸ் ஒரு வேலை கொடுத்தார். உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் கடிதமாக எழுதுங்கள் அதனை யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாக்குறுதி தர உற்சாகமாக ஓடி சென்று எழுத தொடங்கினார்.
சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இவ்வளவு அழகா ! வெளியாகாத புகைப்படங்கள் !
Hotstar
தர்ஷனுக்கு என்பதை சொல்லவும் செய்தார். அதன் பின் என்ன நினைத்தாரோ முதல் கடிதத்தை கிழித்து பிளஷ் செய்து விட்டார். இரண்டாவது கடிதம் எழுத உத்தரவிட்டதும் ஒரு பக்கம் முழுக்க எழுதி தள்ளி அதனை கிழித்து விட்டார். ஆனால் அதனை குப்பைத் தொட்டியில் இருந்த எடுத்த தர்ஷன் மீண்டும் ஒரு பாகம் விடாமல் ஒட்ட வைத்தார்.
முகேனின் படைப்புத் திறன் இதில் ஒருங்கிணைய கிழிக்கப்பட்ட லெட்டர் ஒன்றானது. அதில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது பற்றி அறிந்து கொள்ள மக்கள் ஆவலாக இருந்தாலும் அதனைப் பற்றி டிவி அதிகம் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
Hotstar
பிக் பாஸ் 105 நாட்களுக்கு பின்னர் வெளியேறிய ஷெரின் ஒவ்வொரு ஊடகமாக பேட்டி அளித்து வருகிறார். அதில் தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் என்ன இருந்தது என்பது பற்றி அவர் தெரிவித்திருக்கிறார். நமக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் நான் உனக்காக எப்போதும் இருப்பேன் என்றும் உனக்கு என்ன தேவை என்றாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததாக ஷெரின் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தவிர லாஸ்லியா கவின் பிரிவால் வாடி இருந்த போது தான் மிக நெருக்கமாக லாஸ்லியாவிடம் பழகி ஆறுதலாக இருந்ததையும் அவர் கூறினார்.
Hot star
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!