100 நாட்கள் வரை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் (biggboss3) நிகழ்ச்சி தற்போது 57 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கடந்த வாரத்தில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் எவிக்ஷன் மூலமாக நடிகை அபிராமி குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸில் முதல்முறையாக நாமினேஷனில் சாண்டி, தர்ஷன் : இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
இந்நிலையில் இந்த வாரத்திற்கான (biggboss3) நாமினேஷனில் சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற எபிசோட் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்..” என்ற பாடலுடன் தொடங்கியது. இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் “அம்மா நான் போயிட்டு வரேன்” என்ற பெயரில் பள்ளியை மையமாக வைத்து நடத்துமாறு கூறப்பட்டது. இதற்கு கஸ்தூரி பள்ளி ஆசிரியராகவும், சேரன் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.
பிக் பாஸில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அபிராமி : கதறி அழுத ஷெரீன், லாஸ்லியா!
மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகள் போல உடையணிந்து இருந்தனர். இந்த டாஸ்க்கில் வனிதா உட்பட அனைத்து போட்டியாளர்களும் பள்ளிக் குழந்தைகளாகவே மாறி, பள்ளியில் குழந்தைகளுக்கிடையே நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவுப்படுத்தினர். சாண்டி வழக்கம் போல காமெடி செய்து கொண்டிருந்தார். இதனை தொடந்து மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லி கொடுக்கும் பணியில் சேரன், கஸ்தூரி ஈடுபட்டிருந்தனர். அபோது ரைம்ஸ் ஒன்றை தமிழில் பாடி கொண்டே நடனமாடி லாஸ்லியா அசத்தினார்.
இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதேபோல் நிலா சம்பந்தமான பாடல் ஏதாவது ஒன்றை பாடுமாறு கஸ்தூரி கூற, நிலா காயுது… என்றபாடலை பாடினார். ஒரு பள்ளி சிறுவன் இவ்வாறெல்லாம் பாட மாட்டான் என்பது ரசிகர்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கஸ்தூரி ஆசிரியை அல்ல சத்துணவு ஆயா என சாண்டி கலாய்த்தார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சத்துணவு ஆயா என்றால் அவ்வளவு கேவலமா? என கேள்வி கேட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் (biggboss3) மாணவர்கள் அனைவருக்கும் வாத்து பாடல் ஒன்றை சொல்லிக் கொடுக்கும் போது தன்னை ’வாத்து’ என்று குறிப்பிட்டு கஸ்தூரி பேசியதாக பிரச்னையை கிளப்பினார் வனிதா. மேலும் கஸ்தூரி தன்னை குண்டு என கூறிவிட்டதாக சண்டை போட்டார். 18 வயது பையனுக்கு அம்மா எப்படி இருப்பேன், என்னை பாருங்கள் என்று மற்ற போட்டியாளர்களிடம் வனிதா முறையிட்டார். பிறகு இருவருக்கும் எழுந்த பிரச்னையை அடுத்து, வனிதாவிடம் மன்னிப்பு கோரினார் கஸ்தூரி.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!
பின்னர் ஷெரீனிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார் சேரன். அப்போது டாஸ்கில் ஈடுபட்டிருக்கும் போது கஸ்தூரி மறைமுகமாக வனிதாவை தாக்கிய பேசியதால் அவர் பெஸ்ட் பெர்ஃபாமருக்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என்றும், மாணவியாக இருக்கும் ஒருவர் ஆசிரியரை எதிர்த்து பேசியதால் வனிதாவும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என்றார். பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் பிக் பாஸ்.
இதில் முகென், தர்ஷன், சாண்டி ஆகியோர் பகிர்ந்துக்கொண்ட பள்ளிக் கால கதைகள் கலகலப்பூட்டின. அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு பெண்ணை காதலித்ததாக கவின் கூறினார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது லவ் லெட்டர் எழுதி ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டேன். மறுநாள் காலை வழக்கம்போல கிளாஸுக்கு சென்ற போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நாம் கொடுத்த லவ் லெட்டர் பற்றி அந்த பெண், டீச்சரிடம் புகார் கூறியதால் செமையாக அடி வாங்கியதாக அவர் தெரிவித்தார். போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகளாகவே இந்த டாஸ்கில் மாறி இருந்தனர்.
#Day59 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/4NuwPRxER3
— Vijay Television (@vijaytelevision) August 21, 2019
இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில், ஸ்கூல் டாஸ்க் தொடர்வதாகவே காட்டப்பட்டுள்ளது. ஷெரீன், லாஸ்லியா பாடங்களை ஒப்புவிக்கின்றனர். அப்போது எதுவும் புரியாதது போல சாண்டி தலையை சொரிகிறார். பின்னர் வரும் சாண்டி கட்டை, நெட்டை, குட்டை என பேசுகிறார். இதனை தொடந்து வரும் வனிதா எதுவும் பேசாமல் நிற்கிறார். அப்போது என்னமா ஆச்சு என சேரன் கேட்க, கொஞ்சம் டென்ஷன் ஆயிடுச்சு சார் என கூறுகிறார். இன்றும் வனிதாவால் பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.