பிக் பாஸில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அபிராமி : கதறி அழுத ஷெரீன், லாஸ்லியா!

பிக் பாஸில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அபிராமி : கதறி அழுத ஷெரீன், லாஸ்லியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன், சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா தனது கருத்தை நிலைநிறுத்த தற்கொலை முயற்சி செய்யததால் வெளியேற்றப்பட்டார். எனினும் இந்த காட்சிகள் திரையிடப்படவில்லை. மதுமிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார். சென்னையை பூர்வீகமாக கொண்ட அபிராமி (abirami) வெங்கடாச்சலம் கலாஷேத்திரா மாணவி ஆவார். 

கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு மதுமிதாவுக்கு அப்படி என்ன நடந்தது? விளக்கம் விளக்கம் ..!

twitter

பரதநாட்டியத்தில் தேர்ந்த கலைஞராக அனுபவம் பெற்ற அபிராமி, அதை தொடர்ந்து கலை துறையில் கால்பதித்தார். ஆரம்ப நாட்களில் பலரையும் கவர்ந்து வந்த அபிராமி, பிறகு தன்னுடைய ஹைப்பர் அளவுக்கு எகிறும் கோபங்களாலும், அடிக்கடி அழும் குணத்தாலும் விமர்சனங்களை பெற தொடங்கினார். ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி, அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டு பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து முகெனிடம் நெருங்கி பழகத் தொடங்கிய அவர், திடீரென அவரை காதலிப்பதாக கூறினார். பலமுறை இதை நிகழ்ச்சியில் அவர் வெளிப்படையாக அவர் காதலை தெரிவித்துள்ளார். 

காதலில் விழுந்த அபிராமி!

கமல்ஹாசனிடமும் வெளியே சென்றாலும் நான் மாறமாட்டேன் என நேரடியாக கூறியுள்ளார் அபிராமி (abirami). இந்நிலையில் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, முகென் - அபிராமி காதல் முடிவுக்கு வந்தது. அவர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்திய வனிதா, அபியை முகெனுக்கு எதிராக பேசவைத்தார். அபிராமி தான் காதலித்தாக சொன்னாரே தவிர முகென் எங்கும் கண்ணியம் தவறவில்லை. எப்போதும் நீ எனக்கு நல்ல தோழி, உன் நட்பை நான் மதிக்கிறேன் என்று முகென் கூறி வந்தார். இதனால் முகெனுக்கு பாராட்டுக்கள் கிடைக்க காரணமாக இருந்தார் அபிராமி. 

அபியிடம் ரகசியத்தை உடைத்த முகென்..லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி: மீரா விளக்கம்

twitter

அதை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக போட்டியாளர்களால் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வந்தார் அபிராமி. மூன்று வாரங்களாக அவரை பார்வையாளர்கள் காப்பாற்றி வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் எழுந்த சர்ச்சை காரணமாக தற்கொலைக்கு முயன்ற மதுமிதா வெளியேற்றப்பட்டார். இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என போட்டியாளர்கள் நினைத்தனர். ஆனால் கமல், இந்த வாரமும் எவிக்‌ஷன் இருக்கும் என்பதை உறுதி செய்தார். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த காரணத்தால் அபிராமி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா .. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!

லாஸ்லியா, சேரன் உறவில் விரிசலா?

இதனிடையே நேற்றைய எபிசோடில் சேரனுக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை முதல் விவாதப்பொருளாக எடுத்தார் கமல். சேரப்பா இப்போ வேறப்பாவா? என்று கமல் நாசுக்காக கேள்வி கேட்டார். லாஸ்லியா, சேரனை அப்பா என்ற உறவு முறையில் சேரப்பா என்று அன்புடன் அழைப்பார் சேரனும் அவரை மகளாக நினைத்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக லாஸ்லியா கவின், தர்ஷன், சாண்டி, முகென் கேங்குடன் சேர்ந்து இருந்தார். இதனால் இருவருக்கும் சற்று விரிசல் ஏற்பட்டது. இதனால் கமல் இந்த கேள்வியை முன்வைத்தார். 

twitter

அப்போது பேசிய சேரன், லாஸ்லியா மீது எப்போதுமே அன்பு இருக்கும் என்றும், நண்பர்களோடு இருக்கும்போது அப்பா தேவையில்லை என்று ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். சேரப்பா வேறப்பாஇல்லை, எனது மகளும் வேறு மகள் இல்லை என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய லாஸ்லியா, பிக்பாஸ் டாஸ்க்குகளில் தான் சரியாக விளையாடாததாக காரணம் காட்டி இரண்டு முறை சிறைக்கு அனுப்பப்பட்ட போது, ​​சேரன் தனக்கு ஆதரவாக இல்லை எனவும் மாறாக தனக்கு எதிராக நின்றதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட கமல், சேரனின் அறிவுரையால் தான் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்று லாஸ்லியாவிடம் கூறினார். இதனை கேட்ட லாஸ்லியா அமைதியாக இருந்தார். 

வத்திக்குச்சி வனிதா!

இதனை தொடர்ந்து வத்திக்குச்சி யார் என்று கமல் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, கவின், தர்ஷன், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகியோர் கற்பூரங்கள் என்றும் வனிதா வத்திகுச்சி என்று கூறினார். கமலுடன் இணைந்து கஸ்தூரியும் வனிதாவை கலாய்த்தார். இதனால் வனிதாவின் முகம் சுருங்கியது. இதனால் மீண்டும் ஒரு பிரளயம் வெடிக்கும் என்று நினைத்தால், மாறாக வனிதாவை புகழ்ந்து தள்ளினார் கஸ்தூரி. பின்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுமிதா வெளியேறிவிட்ட காரணத்தினால், பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றார் கமல். அந்த டாஸ்க்கில் மதுமிதாவிற்குப் பிறகு அடுத்தடுத்த இடங்களை ஷெரீன் மற்றும் தர்ஷன் பிடித்திருந்தனர். 

twitter

வீட்டின் தலைவரானார் ஷெரீன்

இவர்களில் யாருக்கு அதிக ஆதரவு என்று கேட்ட போது, ​​தர்ஷன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஷெரீன் பெயரை முன்மொழிந்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் ஷெரீன். இந்த வார தலைவரான ஷெரீனை யாரும் நெலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. எப்போதும் போல, போட்டியாளர்களை சிறிது நேரம் கலங்கடித்து விட்டு, கவின் மற்றும் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல். பின்னர் முகெனும், அபிராமியும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு, வெளியேறுவது யார் என்ற எதிர்பார்ப்பை போட்டியாளர்களிடையே அதிகப்படுத்தினார். 

வெளியேறிய அபிராமியின் முதல் பதிவு!

பிறகு அபிராமி (abirami) எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார் கமல். அபிராமி சிறிதும் கலங்காமல் அதனை ஏற்றுக்கொண்டு வெளியேற தயாரானார். தனது தோழியின் வெளியேற்றத்தால் கதறி அழுதார் லாஸ்லியா. முகென் உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு அபிராமி வெளியேறினார். அபிராமி வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வந்துவிட்டேன் பாரதி கண்ட புதிய பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வெளியேகியுள்ள முதல் புரோமோவில் அடுத்தவார எலிமினேஷன்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்கிறார். கடந்த வராம் நடைபெற்ற பிரச்சனைகளின் போது சேரன் அப்பா எதுவும் பேசவில்லை, என்னிடம் கூட எதுவும் சொல்லவில்லை என்பதால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று கூறுகிறார். மற்றொரு புறம் சேரன் கஸ்தூரியிடம் லாஸ்லியா என்னை எதற்காகவும் நாமினேட் செய்ய மாட்டார் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே என்னை நாமினேட் செய்ய மாட்டேன் என லாஸ்லியா தன்னிடம் தெரிவித்துள்ளதாக சேரன் கூறுகிறார். உடன் வனிதாவும் இருக்கிறார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன