logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பசுமை பட்டாசுகளுடன் வண்ணமய தீபாவளி : பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!

பசுமை பட்டாசுகளுடன் வண்ணமய தீபாவளி : பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!

தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் தான். அதிக சத்தம் இல்லாத குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகளை வெடிக்கக் வேண்டும் எனவும், 

மருத்துவமனைகள், கோயில்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது. தற்போது சந்தைகளில் எண்ணற்ற பசுமை பட்டாசுகளை (crackers) விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வெடித்து மகிழும் பட்டாசுகளை எவ்வாறு கவனமாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம். 

twitter

ADVERTISEMENT
  • பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இருப்பது அவசியமாகும். 
  • வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானதாகும். எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டுக்குள் பட்டாசுகளை பற்ற வைக்கக் கூடாது
  •  பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. 

இந்த தீபாவளி எந்த நட்சத்திர தம்பதிகளுக்கெல்லாம் தலை தீபாவளி தெரியுமா!

  • மத்தாப்புகளை கொளுத்தும்போது உடம்பில் இருந்து தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்கவாட்டில் இருந்து கொளுத்த வேண்டும். 
  • சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களின் கைகளில் கிடைக்காதபடி பாதுகாப்பாக பட்டாசுகளை வைக்க வேண்டும்

twitter

  • பட்டாசு வெடிக்கும் போது காட்டன் ஆடைகளையே அணிய வேண்டும். காலில் கண்டிப்பாக செருப்பு அணி வேண்டும். 
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் மற்றும் மண்ணை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பட்டாசு புகையினால் கண் எரிச்சல், கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல் இருந்தால் கண்களை உடனடியாக சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும். 
  • தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சுத்தமான தண்ணீரில் காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். லேசாக தண்ணீரை ஒற்றி எடுத்துவிட்டு தீக்காயத்திற்கான க்ரீமை மேலே தடவி விட வேண்டும். 
  • சிசுக்கள், முதியோா், நோயாளிகளை கவனத்தில் கொண்டு மருத்துவமனை, முதியோா் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை (crackers) வெடிக்காமல் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

twitter

  • மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். 
  • பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு  அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும்.  
  • ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினை கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்டகம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. 

பாரம்பரிய ஆடைகளுடன் மேட்சாக எடுத்துச் செல்ல சில சிறந்த கிளட்ச் பைகள் !!

  • வெடிக்காத வெடிகளைத்தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது
  • வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில்கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.
  • வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும் போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துகள்  ஏற்படுவதை கூட தடுக்கலாம். 

twitter

ADVERTISEMENT
  • ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி  அணிந்துகொள்வது நல்லது.
  • வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்க வேண்டாம். 
  •  எரிந்து முடித்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீருள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணில் முக்க வேண்டும். 
  • வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்கவேண்டும்.
  • அதிகம் சத்தமுள்ள பட்டாசுகளை (crackers) வெடிக்காதீர்கள். ஏனென்றால், அவை உடலையும், மனதையும் பாதிக்கும். காதுகள் கூட செவிடாகக்கூடும். 

இரண்டே வருட இடைவெளியில் இரண்டாவது குழந்தைக்குத் தயார் ஆன பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

25 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT