இரண்டே வருட இடைவெளியில் இரண்டாவது குழந்தைக்குத் தயார் ஆன பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்!

இரண்டே வருட இடைவெளியில் இரண்டாவது குழந்தைக்குத் தயார் ஆன பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்!

பாபி சிம்ஹா (bobby simha) அனைவருக்கும் பிரியமான ஒரு நடிகர். ஜிகர்தண்டா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பதை விட மிரட்டி இருந்தார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதன் பின்னர் இறைவி படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைகேற்ப அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.

2015ம் ஆண்டு தன்னுடன் உறுமீன் திரைப்படத்தில் நடித்த ரேஷ்மி மேனன் (reshmi menon) என்பவரை காதல் செய்து திருமணம் செய்தார் பாபி சிம்ஹா. சில அழகான நடிகைகள் இப்படித்தான் காதல் திருமணத்தில் செட்டிலாகி விடுவார்கள். அப்படி நாம் மிஸ் செய்த ரேஷ்மி மேனனை மனைவியாக கேட்ச் செய்தவர் பாபி சிம்ஹா.       

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் ! ஆச்சர்யம் தரும் புகைப்படம் !                                                               

Instagram

2015ல் திருமணம் முடிந்த உடன் 2017ம் ஆண்டு முத்ரா என்கிற பெண் குழந்தைக்கு தாயும் தந்தையும் ஆனார்கள் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன். இப்போது இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தையும் பிறக்க இருக்கிறது.

முதல் குழந்தை பிறந்து இரண்டே வருடங்களில் இரண்டாவது குழந்தையை ஈர்ன்றெடுக்க போகிறார் நம் அழகி ரேஷ்மி மேனன். தற்சமயம் இரண்டாவது குழந்தைக்கான வளைகாப்பு மிக சிறப்பாக பாபி சிம்ஹா வீட்டில் நடந்து முடிந்துள்ளது.                                                                       

தனியான கர்ப்பிணி பெண்-கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் கார்த்திக் சுப்புராஜ்

instagram

அதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் ரேஷ்மி மேனன் என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னை புன்னகைக்கச்செய்து, புதிய அர்த்தம் கொடுக்கும் இந்தக் குட்டி தேவதையுடன் இன்னொரு தேவதை சேரப்போகிறார். ஆசிர்வாதமாக உணருகிறேன், பேபி நம்பர் 2, உனக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்' என சந்தோஷத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

காதலர்கள் ரேஷ்மி மற்றும் பாபி சிம்ஹா மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் !                                          

instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!