logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டி சென்று வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்!

விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டி சென்று வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்!

முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக அவர் இருப்பதால்தான் எந்த செயலை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபடுவது முதன்மையானது. எழுதும்போது கூட பிள்ளையார் சுழி போட்டோ எழுதத் தொடங்குகிறோம்.’வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

facebook

பிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்புகள்

  • சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் (pillayarpatti) உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம். 
  • சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு திகழ்கிறார் விநாயகர். அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது. வயிறு, ஆசனத்தில் படியாமல் “அர்த்தபத்ம” ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார். 
  • இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்திலும் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்கிறார். ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது விநாயகருக்கு சிறப்பம்சம்.
  • பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

facebook

  • ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது விநாயகருக்கு சிறப்பம்சம்.
  • 1,600 ஆண்டு பழமையான  இந்த கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது போன்று,  விநாயகருக்கும் 6 படை வீடுகள் உள்ளன. இந்த தலத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் ஐந்தாவது படை வீடாக உள்ளது. 
  • இங்குள்ள விநாயகர் சன்னதி குடைவரை கோயிலாகும். விநாயகர்  சதுர்த்தியன்று 18படி அளவில் முக்குறுணி அரிசியால் செய்த ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம்  செய்யப்படுகிறது. இவை கோயிலின் சிறப்புகளாகும்.
  • இத்தகைய சிறப்புகள் கொண்ட பிள்ளையார்பட்டிக்கு சென்று நாம் வழிபடுவதால் அனைத்து விதமான நற்பலன்களையும் நாம் பெறலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று இங்கு வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து பிள்ளையார்பட்டி (pillayarpatti) கற்பக விநாயகரை வழிபட்டால் செல்வம், கல்வி உள்ளிட்ட அனைத்து செல்வங்களும் கிடைக்கும.  

விநாயகர் சதூர்த்தி கொலக்கட்டை செய்வது எப்படி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

  • பிள்ளையார்பட்டியில் (pillayarpatti) விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • விழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை நடைபெறும். இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை,அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 
  • செப்டம்பர் 1ம் தேதி காலையில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கற்பக விநாயகர் அருள் பாலிப்பார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு யானை வாகனத்தில் எழுந்தருளி  உற்சவர் வீதிஉலா வருவார்.

வினை தீர்க்கும் நாயகனே ! விநாயகரிடமிருந்து கற்றுக்கொள்ள 8 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்

ADVERTISEMENT

facebook

  • விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 2ம் தேதி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பக்தர்கள் 16 படியில் செய்த கொழுக்கட்டை படையல் வைத்து வழிபடுவார்கள்.
  • காலையில் குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதை தொடர்ந்து 16 படி அரிசியில் ராட்சத கொலுக்கட்டை படையலிடப்பட்டு பின் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தியகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபாட்டு பலன் பெறுங்கள்!

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

30 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT