90ஸ் கிட்ஸ்களுக்கென்றே ஆசிர்வதிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றன. அதைத்தான் அவ்வவ்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதனைப் போலவே ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் சன் டிவி (sun tv) தொகுப்பாளினி பெப்ஸி உமா (pepsi uma).
90களில் தொலைபேசி என்பதே அபூர்வமான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவராலும் விரும்பப்பட்ட பிரபலம் பெப்ஸி உமா. இவருக்கு ஏன் இந்தப்பெயர் வந்திருக்கும் என்கிற யோசனை எனக்கும் இருக்கிறது. அனேகமாக அவர் அதிகமாக நீல நிற புடவை உடுத்துவார். அந்த காலத்தில் அதற்கு பெயர் பெப்ஸி ப்ளூ . அதனால் கூட அவருக்கு இந்தப் பெயர் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.
உண்மையில் அவர் நடத்திய நிகழ்ச்சியின் விளம்பரதாரர் பெப்ஸி நிறுவனத்தினர். நிகழ்ச்சிக்கு பெயர் பெப்ஸி உங்கள் சாய்ஸ் அதனால் தான் அப்படி ஒரு அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் உமா. இவரது தமிழும் குரல்வளமும் சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..!
Youtube
அப்போதைய சினிமா நடிகைகளை விட அழகில் சிறந்தவராக பெப்ஸி உமா இருந்ததும் ஒரு காரணம். சிறு வயது தொகுப்பாளினிதான் என்ற போதும் மாடர்ன் உடைகளை அவர் அணிந்ததில்லை. புடவைகள் தான் இவரது சாய்ஸ். பாந்தமான தோற்றத்தில் அழகான புடவைகளில் தெளிவான உச்சரிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் பெப்ஸி உமா.
இப்போதைய தொகுப்பாளினிகள் (anchor) எவருமே இவரது இடத்தை இன்று வரை பிடிக்க முடியவில்லை. இவரது குரலைக் கேட்பதற்காகவே பல வாரங்கள் காத்துக் கிடைக்கும் இளைஞர் பட்டாளம் இருந்தனர். அவர்கள் அந்த காலத்திலேயே பெப்ஸி உமாவிற்காக கட்டவுட் வைத்தவர்கள். இதை விட ஆச்சர்யமான செய்தி ஒரு நடிகைக்கான கோயில் எழுப்பிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் கேரளாவில் ஒரு தமிழ் தொகுப்பாளினிக்காக கோயில் கட்டப்பட்டது என்றால் அது பெப்ஸி உமாவிற்காக மட்டும்தான். ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய பெண் யார் என்றாலும் அதிலும் பெப்ஸி உமாவே வருகிறார். தொடர்ந்து 15 வருடங்கள் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தினார்.
இதனாலதான் நான் ஆர்யா கல்யாணத்துக்கு வரல… மனம் திறந்த நடிகை பூஜா !
Youtube
இப்போதைய தொகுப்பாளினிகள் சினிமா வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்க பெப்ஸி உமாவோ தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வந்தவர். ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா எனப் பல ஜாம்பவான்கள் கேட்டும் நடிக்க மறுத்தவர் நம் பெப்ஸி உமா.
குழந்தைகளுக்கும் பிடித்தமான பெப்ஸி உமாவையே மனம் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒரு சிறுவனுக்கு பெப்ஸி உமா என்றால் கொள்ளைப் ப்ரியமாம். பேசக்கூட முடியாத அந்த சிறுவன் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை உமா தானாம். இதனை அறிந்து அந்த சிறுவனை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் உமா.
அப்போது அந்த சிறுவன் உமாவின் பெயரை எழுதிக் காட்டி அவரை நெகிழ வைத்தானாம்.இத்தனை பேருக்கு பிரியமான பெப்ஸி உமா நடுவில் சில காலம் ஜெயாடிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது ஒரு நிறுவனத்தின் இயக்குனர் ஆக இருக்கிறாராம்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!