காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..!

புதிய தலைமுறைகள் சேனலில் செய்தி தொகுப்பாளராக வரும் ஒரு சிலருக்கு மட்டும் சின்னத்திரை அதிர்ஷ்டம் கை கொடுக்கிறது. அதில் முதலில் வந்தவர் பிரியா பவானி சங்கர் இரண்டாவதாக வந்தவர் சரண்யா.

விஜய் டிவி தான் இருவரையுமே வரவேற்றது. கல்யாணம் முதல் காதல் வரை பிரியா பவானி சங்கரின் முதல் அறிமுக நாடகம் (serial) அதன் பின்னர் திரைப்படங்களுக்குத் தாவினார் பிரியா பவானி சங்கர் (priya bavani sankar) . சின்னத்திரையில் இருந்து வந்தாலும் வெள்ளித்திரை இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.                                                                              

 

மேயாத மான் திரைப்படம் இவருக்கு முதல் அறிமுகப்படமாக இருந்தது. அந்தப் படத்தின் வெற்றியால் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதனுடன் இப்போது எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் திரைப்படமும் நன்றாக போகவே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராகி இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இவர் 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவரைக் காதலித்து வருவதாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் பிரியா பவானி சங்கரும் ஒரு நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.                                                  

Youtube

என்னதான் வெள்ளித்திரை நடிகையாகவே மாறினாலும் பலகால நண்பர்களை இப்போதும் சந்தித்து மகிழ்வதே பிரியாவிற்கு பிடித்திருக்கிறது. அவரது எல்லா இன்ஸ்டா புகைப்படங்களிலும் தவறாமல் இடம் பெறும் ஒரு நபர் ராஜவேலு.

இவர்தான் ப்ரியாவின் நீண்டகால காதலர் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்துவிட்டதாக ஊடகங்கள் சில சொல்கின்றன.                                                                                  

சமீபத்தில் நீண்ட கால நண்பர்களுடன் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிரியா பவானி சங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதிலும் அவரது காதலர் ராஜவேலு உடன் இருக்கிறார்.

எல்லோரும் என்னை விட்டு சென்ற போதும் நீ மட்டும் எனக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுக்கிறாயே ஏன் என்று பிரியா பவானி சங்கரே உருகி உருகி கேட்கும் அளவிற்கு அத்தனை அன்பானவர் போல ராஜவேலு.

ப்ரியாவின் அப்ரோச் எல்லாவற்றிலுமே இயல்பாக எளிமையாகவே இருக்கும். எதிலும் ஒரு நேர்மையும் நேர்த்தியும் அடங்கி இருக்கும். வெளிப்படைத்தன்மையும் தென்படும்.

அதன்படியே தன்னுடைய வாழ்க்கை முறை மாறினாலும் வாழ்வில் உடன் துணை வருபவர்களை மாற்றாமல் இருக்கும் அவரது இந்த செயலும் தெளிவும் அவரது வாழ்வை மேலும் உயர்த்தும் என்றே தோன்றுகிறது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!