கண்ணிற்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்கிற கவிதைக்கு ஏற்றவாறு அந்த காலம் முதலே கண்களுக்கு பெண்கள் மை இட்டு வந்தனர். அது, கண்களுக்குக் குளிர்ச்சி என்ற போதிலும் வைத்த ஒரு மணி நேரத்திலேயே கரைந்து, கண்களின் வெளியே வழிந்து, கண்களின் கீழ்ப்பகுதியெல்லாம் கருமைப் படர்ந்து விட்டிருக்கும். இன்றைக்குக் கண்களை அழகுபடுத்த ஐ லைனர், காஜல், மஸ்காரா(mascara) என்று நிறைய மேக்கப் முறைகள் வந்துவிட்டன.
ஐ லைனர் லிக்விடாக இருந்த வரையில், தங்களால் கண்களையொட்டி சரியான ஷேப்பில் வரைய முடியாது என்றோ அல்லது கண்களுக்குள் போய் விடும் என்று பயந்தோ பல பெண்கள் மையுடன் நிறுத்தி விடுவார்கள். இப்போது ஐ லைனர் ஜெல் டைப்பில் வந்துவிட்டது. எடுத்து கண்களில் போடும்போது கண்களுக்குள் கொட்டாது, வழியாது. இதிலும் போட முடியாதவர்கள், பேனா போன்று இருக்கிற ‘பென் ஐ லைனரா’ல் கண் இமைகளின் மேலே வரைந்துகொள்ளலாம்.
அடுத்தது மஸ்காரா(mascara), இதில் ப்ளூ, க்ரீன், பிரவுன், பிளாக் என்று பல நிறங்கள் இருந்தாலும் பிளாக்தான் எல்லோருக்கும் பொருந்தும். கண் இமைகளை மஸ்காரா போட்டு மேல் நோக்கிச் சுருட்டிவிட்டால் கண்களின் வெள்ளைப் பகுதி அதிகமாகத் தெரியும். இதனால் கண்கள் பெரிதாகத் தெரியும். ‘கண்கள் சிறியதாக இருக்கிறதே’ என்று வருந்துபவர்கள் மஸ்காரா போட மறக்காதீர்கள். கண்களில் எந்த மேக்கப் இல்லாமல் வெளியே போக மாட்டீர்கள் என்று சில நடிகைகளைக் கேட்டபோது, அவர்கள் மஸ்காராவைத்தான் குறிப்பிட்டார்கள். அந்தளவு கண்களுக்கு உடனடியாக ஒரு அழகு, பளிச் லுக் தரக்கூடியது மஸ்காரா. சரி இந்த மஸ்காராவில் நாம் பண்ணக்கூடிய தவறுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்
- இயற்கையாகவே சிலருக்கு ஐ லாஷ் பெரிதாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் திக்கான மஸ்காரா(mascara) போட வேண்டிய அவசியம் இல்லை.
- பெரிய கண் உடையவர்கள் மஸ்காரா(mascara) போட்ட பிறகு அதனை சுருட்டி விட வேண்டாம். ஏனெனில் சிக்க கண் உள்ளவர்கள் மஸ்காரா போட்டு சுருட்டிவிட்டால் கண் பார்ப்பதற்கு பெரிதாக தெரியும். பெரிய கண் உள்ளவர் அப்படி சுருட்டிவிட்டால் கண் இன்னும் பெரிதாக முட்ட கண் போன்று காட்சியளிக்கும்.
- கண் மிகவும் சின்ன தாக உள்ளவர்கள் மஸ்காராவை(mascara) அடர்த்தியாக போடலாம். ஆனால் கண்ணிற்கு மையும் அதிகமாக போட்டு மஸ்காராவும்(mascara) அதிகம் பயன்படுத்தினால் உங்கள் கண்ணின் வெண்மை நிறம் மறைந்து கருமை மட்டுமே தெரியும்.
- மிகவும் பழைய மஸ்காராவை(mascara) தண்ணீர் கலந்து பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
- மஸ்காராவை கண்களில் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட முறை பயன்படுத்துவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற விழாக்களுக்கு சரி, மற்றபடி இரண்டு மேற்பட்ட முறைகளில் பயன்படுத்தினால் அடர்த்தியாக விரைப்பு தன்மையுடன் காணப்படும்.
- தூங்க போவதற்கு முன் மஸ்காரா(mascara) பயன்படுத்துவதை தவிர்க்கவும். தூக்கத்தில் உங்கள் முகம் முழுக்க பரவி கண்களுக்கு உள்ளேயும் போக வாய்ப்பு உள்ளது.
- கண் மை அடர்த்தியாக போட்டால் மஸ்காரா(mascara) மென்மையாக போடுவது சிறந்தது. மை போடாமல் வெறும் மஸ்காரா மட்டும் கூட போடலாம். இது உங்கள் கண்ணிற்கு மேலும் புத்துணர்வை தரும்.
- மஸ்காரா(mascara) பிரஷை மஸ்காராவிற்கு(mascara) மட்டும் பயன்படுத்தவும். ஐ ஷேடோவாக பயன்படுத்த வேண்டாம்.
- ஐ ஷேடோவை தண்ணீர் கலந்து கலர் மஸ்காரா(mascara) பயன்படுத்தும் பழக்கம் அதிகம் பேரிடம் உள்ளது. இதை முற்றிலும் தவர்ப்பது நல்லது.
மேற் சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண்ணிற்கு மேக் அப் போடும் போதும் உங்களே அறியாமல் நீங்கள் செய்யும் தவறுகளை இனி கவனத்தில் கொண்டு மேக் அப் போட்டு தேவதையாக மின்ன ஆரம்பியுங்கள்.
புதிதாக ஹீல்ஸ் அணிபவரா? உங்கள் கால்களை பாதுகாப்பதற்காக சூப்பர் வழிகள்!
துணையுடனான செக்ஸ் உறவில் மார்பகத்தின் இத்தகைய மாற்றங்களை கவனித்ததுண்டா!
புதிதான திருமணம் ஆன தம்பதிகளிடையே ஏன் அடிக்கடி சண்டை வருகின்றது தெரியுமா?
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo