புதிதாக ஹீல்ஸ் அணிபவரா? உங்கள் கால்களை பாதுகாப்பதற்காக சூப்பர் வழிகள்!

புதிதாக ஹீல்ஸ் அணிபவரா? உங்கள் கால்களை பாதுகாப்பதற்காக சூப்பர் வழிகள்!

அன்ன நடை சின்ன இடை இது தான் தற்போதைய பேஷன். பெண்கள் பெரும்பாலும் பேஷனை நோக்கி செல்வர்களாகத் தான் இருக்கின்றோம். ஹீல்ஸ்(heels) அணியும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். காரணம் சரியாக பொருத்தமில்லாத ஹீல்ஸ்(heels) நமக்கு பல்வேறு பிரச்சணைகளை ஏற்படுத்தும். குறிப்பாக குதிங்கால் வெடிப்பு, மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி என பல உபாதைகளை ஏற்படுத்தும்.


சரியான ஹீல்ஸ்(heels) தேர்ந்தெடுத்த அணியவில்லை என்றால் நமது பாடு திண்டாட்டம் தான்.


how-to-wear-heels-feel-comfortable004
சரியான அளவை தேர்ந்தெடுத்தல்
ஹீல்ஸ் ஷூ அணியும் முன்பு சரியான அளவுள்ள காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்கள் முழுவதையும் சரியாக அளவெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதம் மூடும் வரை கால்களை நன்கு அளவெழுத்துக் கொள்ளுங்கள். இல்லை யெனில் ஹீல்ஸ்(heels) அணிந்ததும் உங்கள் பாதம் வெளியில் தெரியும்.


பொருத்தமான காலணி
ஹீல்ஸ்(heels) அணியும் போது பாதம் மற்றும் முன்னங்கால் நன்கு பொருந்தும் வகையான வை தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஷூ தேர்ந்தெடுக்கும் போதும் முன்னங்கால் பகுதி நன்கு கூர்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் முன்னங்காலிற்கு நல்ல இடைவேளையும் நடப்பதற்கு இலகுவாகவும் இருக்கும்.


how-to-wear-heels-feel-comfortable003
ஷூ வை தேர்ந்தெடுங்கள்
பெரும்பாலும்  ஹீல்ஸ்(heels) வாங்கும் போது ஷூவை தேர்ந்தெடுங்கள். ஷூ உங்கள் பாதத்திற்கு நல்ல கிர்ப்பை தரும். நடப்பதற்கும் அவசரமாக பிரயாணம் செல்வதற்கும் ஏற்றதாக ஷூ இருக்கும். ஆனால் ஹீல்ஸ் ஷூ வாங்கும் போது இரண்டு கால்களும் சரியான அளவில் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு கால் சின்னதாகவும்  ஒரு கால் பெரியதாகவும் இருக்கும். இது போன்ற பிரச்சணைகளை ஷூ வாங்கும் போதே தவிர்ப்பது நல்லது.


போட்டுப் பார்த்து வாங்கவும்
ஷூ வாங்கும் போது சரியான பொருத்தமான ஹீ்ல்ஸ் தானா என்பதை கடையிலேயே போட்டு பார்த்து வாங்கவும். கடையிலேயே போட்டு பார்த்து நன்கு நடந்து பார்த்து சரியான ஹீல்ஸ்(heels) ஷூ வை தேர்ந்தெடுக்கவும்.


how-to-wear-heels-feel-comfortable005
தரமான ஹீல்ஸ்(heels)
நல்ல தரம் வாய்ந்த கம்பெணி ஷூ வை பயன்படுத்துவது நல்லது. தரமற்ற மிகவும் விலை குறைந்த ஹீல்ஸ்(heels) ஷூ வை பயன்படுத்தினால் உங்கள் கால்கள் மிகவும் பாதிக்கப்படும். உங்கள் உடல் எடையை முழுவதும் தாங்கக்கூடிய ஹீல்ஸ்(heels) ஷூ வை தேர்ந்தெடுப்பது நல்லது.


கால்களுக்கு பாதுகாப்பு
ஹீல்ஸ்(heels) அணியும் போது உங்கள் பாதம் பாதிக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் காலின் முன்னங்கால் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் கால்களுக்கு என்று பிரத்தியேகமான விற்கப்படும் பிளாச்தரிகளை வாங்கி பயன்படுத்தவும். இதனை கால்களில் ஒட்டிய பிறகு ஹீல்ஸ் ஷூ வை பயன்படுத்தலாம்.


ஹீல்ஸ் தேர்ந்தெடுக்கும் போது மேற் சொன்ன விடயங்களை மனதில் கொண்டு சரியான முறையில் உங்கள் காலிற்கு பொருத்தமான காலனியை தேர்ந்தெடுத்து பின் விளைவுகளை தவிர்ந்து உங்கள் கால்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லை எனில் பல்வேறு பிரச்சணைகள் உங்கள் உடலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனைக்கு செலவிடும் தொகையை குறைந்து வளமாகவும் பேஷனாகவும் வாழ இதை கவனத்தில் கொண்ட செயல்படுங்கள். பேஷனோடு சிறப்பாக மகிழ்ச்சியாக வாழுங்கள்.


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!


கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube, shutter stock


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo