logo
ADVERTISEMENT
home / அழகு
கிரீம்களில் இருக்கும் முக்கிய மூலப்பொருட்கள் & அதனால் ஏற்படும் பாதிப்புகள்!

கிரீம்களில் இருக்கும் முக்கிய மூலப்பொருட்கள் & அதனால் ஏற்படும் பாதிப்புகள்!

அழகாக இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்களை விட சிவப்பாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்களே அதிகம். இதற்கு சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கப்படுகிற மதிப்பும்  தான் முக்கிய காரணம். 

திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகும் போது பெண் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதில் இருந்து பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக இருக்க குங்குமப்பூவை சாப்பிடுவது என்று சிவப்பாக இருக்க காட்டும் அக்கறை ரொம்பவும் அதிகம். 

ஒருவருடைய நிறத்தை அவரது உடலில் உள்ள மெலனோசைட்ஸ் உற்பத்தி செய்கிற மெலனின் என்ற நிறமிகள்தான் நிர்ணயம் செய்கின்றன. மெலனின் சுரப்பு அதிகமாக இருந்தால் கருப்பாக இருப்பார்கள். மெலனின் சுரப்பு குறைய குறைய நிறம் வெளுத்து காணப்படும். 

ADVERTISEMENT

pixabay

மெலனினே இல்லாத நிலைக்கு ‘அல்புனிஸம்’ என்று பெயர். நம்முடைய நிறம் என்பது மரபணு சார்ந்தது. கருப்பான நிறத்தை ஓரளவு பளிச்சிட வைத்தல்தான் சாத்தியமே தவிர வெளுத்தல் என்பது சாத்தியம் இல்லை. ஆனால் சமீப காலமாக  ஏகப்பட்ட சிவப்பழகு க்ரீம்களும் (creams), லோஷன்களும் விற்பனைக்கு வர ஆரம்பித்துவிட்டன. 

     மேலும் படிக்க – சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

பெண்களுக்கான க்ரீம்கள் போதாது என்று  தற்போது ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம்களும் விற்பனைக்கு வந்துள்ளன. சிவப்பழகு கிரீம்களில் உள்ள முக்கிய மூலப்பொருட்கள் குறித்தும் அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

ஹைட்ரோகுய்னான்

  • பெரும்பான்மையான ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை மற்றும் பேஸ் கிரீம்களில் ஹைட்ரோகுய்னான்  (Hydroquinone) உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு பிளீச்சிங் ஏஜென்ட் ஆகவே கருதப்படுகிறது. 
  • இது பல்வேறு தோல் பிரச்சனைகளை உண்டாக்க வல்லது. ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஹைட்ரோகுய்னான் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை மருத்துவ ஆலோசனையின்றி வருடக்கணக்கில் உபயோகப்படுத்தினால் ஒகிரோநோசிஸ் என்ற மிக கருமையான நிலை சருமத்துக்கு வர வாய்ப்புள்ளது. 

pixabay

ரெட்டினாயிக் ஆசிட்

ADVERTISEMENT
  • ரெட்டினாயிக் ஆசிட்டில் வைட்டமின் ஏ உள்ளது. இதில் நம்முடைய சருமத்தில் உள்ள மேல்புற லேயர்களை உரிக்கும் திறன் வாய்ந்தது.  ரெட்டினாயிக் ஆசிட் அடங்கிய கிரீம்களை (creams) பயன்படுத்துவதால் கருப்பு நிற சரும செல்கள் வெளியேறி அடியில் இருக்கக்கூடிய வெளிறிய சருமம் மேலே வந்து சற்று வெளுப்பாக தெரிவார்கள். 
  • பெரும்பான்மையான மருத்துவர்கள் இந்த ரெட்டினாய்க் ஆசிட் (Retinoic Acid) கிரீம்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுத்துகிறார்கள். ஏனெனில் இது சருமத்தை பாதிக்கலாம். இதனை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தினால் சருமம் வெந்து சிவந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

கோஜிக் ஆசிட்

  • கோஜிக் ஆசிட் காளான்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த பொருள் அடங்கிய கிரீம்களை பயன்படுத்துவதால் நம்முடைய சருமத்தின் மேல் அடுக்கான எபிடெர்மிஸின் மேலே உள்ள ஸ்ட்ராட்டம் கார்னியம் வரை மெலனின் வராமல் தடுப்பதால் முகம் கருப்பதை தவிர்க்க முடியும். கோஜிக் ஆசிட்டில் வைட்டமின் சி உள்ளது. எனினும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

        மேலும் படிக்க – குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!

அஸ்கார்பிக் ஆசிட் 

  • அஸ்கார்பிக் ஆசிட்  சிட்ரஸ் பழங்களில் மிகுந்து காணப்படுகிறது. இந்த மூலக்கூறுகளை கொண்டு சருமத்துக்கு சிவப்பழகை அதிகரிப்பதற்காக  உபயோகிக்கப்படுகிறது. ஆனால் சென்சிட்டிவான சருமத்துக்கு இது உகந்தது அல்ல.

ADVERTISEMENT

pixabay

லாக்டிக் ஆசிட் 

பால் மற்றும் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கொண்டு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சரும நிறத்தை மேம்படுத்தி காட்ட இது உதவும். இது ஆபத்தில்லாத சிகிச்சை. இதனால் சருமத்தில் ஆரோக்கியமான புதிய மெலனின் இல்லாத செல்கள் உண்டாகி, சருமத்துக்கு பளிச்சென்ற தோற்றம் கொடுக்கும். ஆனால் மற்ற மூலப்பொருட்களுடன் சேர்த்து இதனை பயன்படுத்தும் போது கெடுதல் உண்டாக வாய்ப்புள்ளது. 

ஆர்புடின்  

ADVERTISEMENT

பெரிஸ் என்று சொல்லப்படும், ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி, பியர்பெர்ரி, பிளாக்பெர்ரியிலிருந்து எடுக்கப்படும் ஆர்புடின் மூலக்கூறுகள் சிவப்பு நிறம் மேம்பட உபயோகப்படுத்தப்படுகிறது. இவை அடங்கிய சிகிச்சைகளுக்கு மிகவும் அதிக கட்டணம் கொண்டவை. 

பொதுவாக சிவப்பழகு சாதனத் தயாரிப்புகளில் (creams) கடுமையான பிளீச்சிங் ஏஜென்ட்டுகள் உள்ளன. அவை மட்டுமே சருமத்தை வெளுப்பாக்க முடியும் என்பதால்  உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் சிலருக்கு ஆர்புடின் சிவப்பு தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

          மேலும் படிக்க – பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

சிவப்பழகு சாதனத் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிற இதர ரசாயனங்கழும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இயற்கையான முறையில் சரும நிறத்தை மேம்படுத்துவதே சிறந்த முறையாகும்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

26 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT