கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் கும்ப மேளா (kumbh mela) என்பது அனைத்து மதங்களிலும் மிகப்பழமையான மதமான இந்து மத மக்களுக்கான மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டவர்களுக்கான மிக முக்கியமான நாளாக இந்தக் கும்ப மேளா கொண்டாடப்படுகிறது.
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும்போது அசுரர்களை ஏமாற்றி மோகினி வடிவில் வந்த விஷ்ணு தேவர்களுக்கு அமிர்தத்தைத் தர விழைகிறார். இந்த சமயத்தில் அந்த அமிர்தத்தை துளிகள் பூமியில் நான்கு இடத்தில விழுந்தன. அவையே ப்ரயாக் (யமுனை ) , ஹரித்வார் (கங்கை), நாசிக் (கோதாவரி) மற்றும் உஜ்ஜைன் (ஷிப்ரா) ஆகியவை.
நான்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமயங்களில் கும்ப மேளா விழா கொண்டாடப்பட்டாலும் அலகாபாத் இதில் முக்கியமான இடமாகப் பார்க்கபடுகிறது. காரணம் இதில் மூன்று நதிகளின் சங்கமம் ஏற்படுகிறது. அங்கு ஸ்நானம் செய்தால் பலமடங்கு நன்மை ஏற்படும் என்று நம்பிக்கை.
இந்த வருடம் கும்ப மேளா மகர சங்கராந்தி அன்று ப்ரயாக்கில் தொடங்குகிறது. ஜனவரி 14 2019 முதல் மார்ச் 4 2019 வரை இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு யோகிகளும், ஞானிகளும், குருமார்களும், அகோரிகளும் கலந்து கொள்ளும் இந்த புனித நீராடலில் சாமான்ய மனிதர்களும் கலந்து நீராடி முக்திக்கான வழி தேடிக்கொள்ளலாம் என்பதால் அன்று மட்டும் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட வருவார்கள்.
இந்த வருடம் மிக முக்கியமான எட்டு நாட்களில் நீராடினால் பலமடங்கு பலன் பெறலாம் என்கிறது ஆன்மிகம். அது எந்தெந்த நாட்கள் என்பதையும் அன்று எங்கெங்கு நீராடலாம் என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
14 ஜனவரி மகர சங்கராந்தி
இன்றைய நாளில் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த நாள்தான் புனித நீராடலுக்கான ஆரம்ப நாளாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த சாதுக்கள் ஒன்றாகக் கூடி ஷோப யாத்திரை ஒன்றை நடத்துவார்கள். புனித நீராடிய பின்னர் எள்ளும் அரிசியும் தானம் செய்வார்கள். உளுந்து கிச்சடி அல்லது தயிர் போன்ற உணவுகள் பிரசாதமாக வழங்கப்படும். புனித நீராடியவர்கள் இதனை அவசியம் சாப்பிட்டாக வேண்டும்.
21 ஜனவரி தைப்பூச பௌர்ணமி
இது இரண்டாவது முக்கிய நாள். இந்த நாளில் நீராடுவதும் தானங்கள் செய்வதும் ஒருவரின் வாழ்நாள் முழுக்க செய்த பாவங்களைத் தொலைத்து விடுவதாக ஐதீகம்.
31 ஜனவரி பூச ஏகாதசி
இது ஜனவரியில் நடக்கும் மூன்றாவது மற்றும் இறுதி புனித நீராடல் ஆகும். ஒவ்வொருவரின் நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கேற்ப இந்த நீராடல் நடைபெறும். ஏகாதசி என்பது வைணவர்களுக்கு மிக முக்கியமான நாள்.
4 பிப்ரவரி தை அமாவாசை
ஜெயின் தீர்த்தங்கரர் ரிஷப தேவ் தனது விரதத்தை உடைத்து ப்ரயாக்கில் சங்கமமாகிய தினம் என்பதால் இது மிக முக்கியமான புனித நாளாகப் பார்க்கப்படுகிறது.
10 பிப்ரவரி வசந்த பஞ்சமி
இந்தப் பஞ்சமி புனித நீராடல் ஐந்தாவது முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. சரஸ்வதி பிறந்த புனித தினமாக இது பார்க்கப்படுகிறது. இதற்கான மேளா சில நதிக்கரைகளில் கொண்டாடப்படுகிறது.
16 பிப்ரவரி மாசி ஏகாதசி
இது ஆறாவது புனித நீராடல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் தானங்கள் செய்வதன் மூலம் ஒருவர் அனைத்து ஜென்ம பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். பூச ஏகாதசி போலவே இதுவும் முக்கியமான நாள்.
19 பிப்ரவரி மாசி பௌர்ணமி
ஏழாவது நாளான இந்தப் புனித நீராடல் நாளில் விஷ்ணு பகவானே நதியாக மாறுவதாக ஐதீகம். மாசி மாதம் முழுவதுமே புண்ணிய மாதம் என்பதால் இதற்கு முந்தைய நாட்களில் எல்லாம் நீராட முடியாதவர்கள் இந்த நாளில் நீராடும் போது மற்ற ஆறு நாட்களில் நீராடிய புண்ணியம் வந்து சேரும்.
4 மார்ச் சிவராத்திரி
புனித நீராடலில் எட்டாவதும் மிக புனிதமானதுமானது ப்ரயாகில் நடக்கும் இந்த நாள்தான். இந்த நாளுக்காகத்தான் தேவர்களும் காத்திருக்கிறார்களாம். இந்த நாளில் புனித நீராடி விட்டு தானங்கள் செய்து திரும்பும் பக்தர்களுக்கு சிவனும் பார்வதியும் அருளை வாரி வழங்குவார்கள் முக்தி தருவார்கள் என்பது ஐதீகம்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.