பனிக்காலம் வந்தாலே வறட்டு இருமல், சளி பிரச்சனை ஆகியவை பாடாய்படுத்திவிடும். பனிக்காலத்தில் தொண்டைகட்டு, காய்ச்சல், இருமல், சளி போன்றவை எளிதில் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளி பிடிக்கும்.
பனிக்காலங்களில் வறட்டு இருமல் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் மிகப் பெரும் தொல்லையாகவே அமைந்துள்ளது. காய்ச்சல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும், ஜலதோஷம் அதிகபட்சம் ஏழு நாட்களில் சரியாகிவிடும்.
ஆனால் இருமல் என்பது நெஞ்சு பகுதியில் உள்ள சளி எப்பொழுது இறங்குகின்றதோ அப்பொழுதே சரியாகும். இருமல் (dry cough) அனைவருக்கும் மிகவும் கஷ்டம் தரக்கூடிய ஒரு பிரச்சினையாகும். குறிப்பாக வறட்டு இருமல் நம்மை பெரும் அவதிக்கு உள்ளாகும்.
pixabay
அதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் ஆவி பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதையெல்லாம் விட இருமல் பிரச்சனையை இயற்கை முறையிலேயே தீர்த்து விட முடியும். அதை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு வீட்டு வைத்தியம் தான் சிறந்த தீர்வைத் தரும்.
மேலும் படிக்க – குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!
தேனுடன் ஏலக்காய்
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் – 5,
தேன் – 2 ஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை மிக்சியில் பொடித்து, பின் அதனை சலித்து எடுத்து வைத்திருக்க வேண்டும். தேனுடன் 1/4 சிட்டிகை அளவு ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும். இப்போது தேனையும், ஏலக்காய் பொடியையும் நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். ஏலக்காய் சளியை கரைத்து வெளியேற்றும் தன்மைக் கொண்டது.
pixabay
துளசி டீ
தேவையான பொருள்கள் :
துளசி இலைகள் – 10,
கிராம்பு – 3,
ஏலக்காய் – 3,
தண்ணீர் – 500 லி,
தேன் – 1 ஸ்பூன்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கு வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் துளசி இலைகள், கிராம்புகளை சேர்க்கவேண்டும். பின்பு ஏலக்காய் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும். பின்பு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க – குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!
பின்பு நன்றாக கலக்கி தேன் சேர்த்துக் கொள்ளவும். சூடாகவே குடிக்க ஆரம்பித்து விடவேண்டும் ஓரிரு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும். துளசியில் உள்ள நற்குணம் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி (dry cough) அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது.
pixabay
பாலுடன் மஞ்சள் தூள்
தேவையான பொருட்கள் :
பால் – 1 க்ளாஸ்,
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்,
பனங்கல்கண்டு – 1 ஸ்பூன்,
மிளகு – 1/2 ஸ்பூன்.
செய்முறை :
பாட்டி அடிக்கடி சொல்லும் வைத்தியமே பாலுடன் மஞ்சள்தூள் கலந்து சாப்பிடுவதுதான். பொதுவாகவே, குளிர்காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து கூடவே பனங்கல்கண்டு கலந்து சாப்பிட்டு வர பல நோய் தொற்றுகள் (dry cough) வராமல் காக்கலாம்.
பாலை காய்ச்சி அதனுடன் மஞ்சள் தூள், பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி அதனை தேனில் கலந்து மூன்று முறை சாப்பிட்டு வர இரண்டு நாளில் சளி மாயமாகும்.
மேலும் படிக்க – பிரசவத் தழும்புகள் உங்கள் மனதிற்கு கவலை அளிக்கிறதா? தீர்வுகள் இதோ !
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!