logo
ADVERTISEMENT
home / Family
‘செக்ஸ்’ வாழ்க்கை ரொம்ப போரடிக்குதா?.. இத ‘டிரை’ பண்ணி பாருங்க!

‘செக்ஸ்’ வாழ்க்கை ரொம்ப போரடிக்குதா?.. இத ‘டிரை’ பண்ணி பாருங்க!

ஒரே மாதிரி சில விஷயங்கள தொடர்ந்து பண்ணிட்டே இருங்க. என்ன வாழ்க்கை இதுன்னு ஒருகட்டத்தில உங்களுக்கே சலிப்பா இருக்கும். ஒண்ணும் இல்ல உங்களுக்கு பிரியாணி ரொம்ப புடிக்கும்னு தெனமும் மதியம் பிரியாணி சாப்பிட்டா என்ன ஆகும்? ஒரு வாரம் ஆர்வமா இருக்கும். அதுக்கு அப்புறம் உங்களுக்கே வெறுப்பா இருக்கும். டெய்லி பிரியாணியானு எரிச்சலாகி எங்கடா நல்ல தயிர்சாதம் கெடைக்கும்னு பார்த்துட்டு இருப்பீங்க.

இனிப்புன்னு சொன்னாலே எனக்கு உசுருன்னு சொல்வீங்க ஆனா உங்க வீட்ல நெறைய ஸ்வீட் இருந்து உங்களுக்கு ஸ்நாக்ஸ்ஸா அதையே உங்க
வீட்ல தெனமும் திங்க சொல்லி குடுத்தா? ஆள விடுங்கன்னு எங்கேயாவது ஓடி போயிருவீங்க. இதேபோல வீட்ல மாங்காய் காய்க்கிற சீசன் இல்ல
வேற ஏதாவது காய் காக்கிற சீசன்னா உங்க வீட்டு கூட்டு,பொரியல், அவியல், குழம்பு இப்படி எல்லாத்துலயும் அந்த காய் இருக்கும்.இதுவே
தொடரும்போது வீட்டு சாப்பாடுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிட ஆரம்பிச்சுருவீங்க.

இதுமாதிரி தான் உங்க தாம்பத்திய வாழ்க்கையும் ஒரேமாதிரி டெய்லி செக்ஸ்(Sex) வச்சுக்கறப்ப கொஞ்ச நாள்ல உங்கள அறியாமேயே ஒரு சலிப்பு
வந்துரும். இது கொஞ்சம் கொஞ்சமா உங்க தாம்பத்திய வாழ்க்கைய அழிக்க ஆரம்பிச்சுடும். பெரும்பாலான தம்பதிகளுக்கு கல்யாணமாகி ரெண்டு,மூணு
வருஷத்துக்குள்ள வாழ்க்கை வெறுத்து போறதுக்கு காரணமும் இதுதான். இதுல இருந்து உங்களையும், உங்க வாழ்க்கையையும் மீட்டெடுக்க இந்த
மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள டிரை பண்ணா போதும். உங்க செக்ஸ்(Sex) வாழ்க்கை என்னைக்குமே மகிழ்ச்சியா இருக்கும்.

ADVERTISEMENT

படுக்கையறை(Bedroom)

ஒரே மாதிரி படுக்கையறையில்(Bedroom) தினமும் செக்ஸ் வைத்துக்கொண்டால் அது ஒரு கடமை போல ஆகிவிடும். உங்களிடம் இளமைத்துடிப்பு இருக்கும்வரை வேண்டுமானால் படுக்கையறை(Bedroom) உங்களுக்கு இனிக்கலாம். வேலை, அலுவலகம் குழந்தை என கூடுதல் பொறுப்புகள் வரும்போது அதற்குப் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கும். இதனால் படுக்கைக்கு சென்றால் எப்போது தூங்கலாம் என்றுதான் யோசிக்கத் தோன்றும். இதனை மாற்ற உங்கள் படுக்கையை பூக்களால் அலங்கரிப்பது, ஜன்னல் திரைச்சீலைகளை மாற்றுவது, நறுமணம் தவழும் வகையில் வாசனை ஊதுபத்திகளை ஏற்றி வைப்பது போன்ற முயற்சிகளை செய்யலாம். படுக்கையை சற்று இடம்மாற்றி போடுவது கூட உங்களுக்கு ஒரு மாற்றத்தை அளிக்கும்.

கார் பின்சீட்,பால்கனி

ADVERTISEMENT

எப்போதும் செக்ஸ் என்றால் பெட்ரூம்(Bedroom) தான் என்றில்லாமல் உங்கள் காரின் பின்சீட், பால்கனி, மொட்டைமாடி, கிச்சன் ஹால், டைனிங் ஹால், குளியலறை என சற்று வித்தியாசமான இடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு மாற்றத்தை கொடுப்பதுடன் உங்களுக்கு புதுவிதமான கிளர்ச்சியை உண்டு பண்ணக்கூடும். இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். திடீரென யாராவது உங்களை அதுபோன்ற கோலத்தில் பார்த்து விட்டால் உங்களுக்கு ஒருமாதிரி இருக்கும். அதோடு இதுபோன்ற இடங்களில் மீண்டும் செக்ஸ் வைத்துக்கொள்ள உங்களுக்கு தோன்றாது.

விதவிதமாக

ADVERTISEMENT

எப்போதும் ஒரே பொஷிஷனில் இல்லாமல் சற்று வித்தியாசமான முறைகளை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் துணை இதற்கு மறுப்பு
தெரிவித்தால் இதமாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். உனக்கு பிடிக்கவில்லை என்றால் மறுமுறை இதுபோல செய்ய மாட்டேன் என வாக்குறுதி அளியுங்கள். வித்தியாசமான முறைகள் உங்கள் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, மீண்டும் மீண்டும் உங்களை செக்ஸில் ஈடுபடத் தூண்டும்.

ரொமான்ஸ்

இருவரும் சேர்ந்து குளிப்பது, உணவு சமைப்பது, நடனம் ஆடுவது, படங்கள் பார்ப்பது ஆகியவை உங்கள் இருவர் மத்தியில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த மாதிரி தருணங்களில் உங்கள் துணையின் விருப்பு,வெறுப்புகளை புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி உங்கள் இரவுகளும் இனிமையாக மாறக்கூடும்.

ADVERTISEMENT

நேரம்,காலம்

செக்ஸ்(Sex) என்றால் இரவில் மட்டும் தான் என பழங்காலமாக இராமல் உங்களுக்கு எந்த நேரம் ஆர்வம் அதிகமாக உள்ளதோ அந்த நேரங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். ஒரேமாதிரியான நடைமுறைகள் சீக்கிரம் போரடித்து விடக்கூடும். எனவே உங்கள் இருவருக்கும் வேலை அதிகம் இல்லாத நாட்களில் அல்லது திடீர் தனிமை கிடைக்கும் நேரங்களில் செக்ஸ் வைத்துக்கொள்வது திரில்லாக இருப்பதுடன் உங்களுக்கு மனமகிழ்ச்சியையும் அளிக்கக்கூடும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

08 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT