நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் கட்டி உணவாகப் பயன்படுத்தலாம். முளைக்கட்டிய பயறு வகைகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது தற்போது சாண்ட்விச் போன்ற உணவுகளிலும் முளைகட்டிய பயறு வகைகளை பயன்படுத்துகின்றனர்.
பயறுகளை முளைக்கட்டுவது எப்படி?
பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல. பயறுகள் அல்லது தானியங்களை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பயறுகளை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்துவிடவேண்டும். அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட (sprouted lentils) ஆரம்பித்துவிடும்.
பாதாமி பழத்தின் பக்க விளைவுகளையும் படிக்கவும்
பெரும்பாலும் இவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காயவைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கி சாப்பிடலாம். முளைகட்டிய பயறுகளை அதிகம் வேகவைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்துவிடும்.
முளைகட்டிய பயறுகள் – சத்துக்கள் மற்றும் நன்மைகள்
- முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் ஏ, பி, சி, கே இவற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. இவற்றில் புரதச்சத்துஅதிகமாக உள்ளது.
- நியாசின், தையமின் போன்ற சத்துகளுடன் ஆன்டிஆக்ஸிடென்டுகளும் இவற்றில் அதிக அளவு உள்ளன.
- மேலும் ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் இவற்றில் நிறைந்து உள்ளன.
மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள்!
- முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவும்.
- வைட்டமின் ‘இ’ சத்து இவற்றில் அதிகமிருப்பதால் கருப்பை, சினைப்பையை சீராக இயங்கச்செய்யும்.
- பாசிப்பயறு – முளைகட்டிய பாசிப்பயறில் (sprouted lentils) அதிக புரதச்சத்து இருக்கிறது. இது வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். சருமப் பளபளப்புக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
- வெந்தயம் – நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முளைகட்டிய வெந்தயத்தை ஒரு கிண்ணம் அளவுக்கு சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். ளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதனை சாப்பிடலாம்.
ஸ்டார்டர் முதல் – மெயின் டிஷ் வரை:செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை குழம்பு,செய்வது எப்படி?
- உளுந்து – உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும். மேலும் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.
- கொள்ளு – முளைகட்டிய கொள்ளு உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பையைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது. கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறை சாப்பிடுவது நல்லது.
- வேர்க்கடலை – உடல் மெலிவாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர உடல் எடை கூடும். மேலும் உடல் வலுப்பெறும்.
- கம்பு – முளைகட்டிய கம்பு உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.
இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!
- பச்சைப்பயறு – முளைகட்டிய பச்சைப்பயறை சாப்பிட்டால் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.
- கொண்டைக்கடலை – முளைவிட்ட கொண்டைக்கடலையை (sprouted lentils) தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன.
குறிப்பு – முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!