நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது.
முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள் (virali manjal) .
விரலைப் போன்று நீளமாக இருப்பதால் இதற்கு விரலி மஞ்சள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. விரலி மஞ்சளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
pixabay
- மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.
- நம் அன்றாட உணவில் விரலி மஞ்சளை சேர்த்துக்கொண்டால் ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.
- சிலருக்கு மூக்கடைப்பு பிரச்னையால் இரவில் தூக்கம் வராது. அவர்கள் விரலி மஞ்சள் (virali manjal) கிழங்கை தீயில் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு சரியாகும்.
மேலும் படிக்க – சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?
- விரலி மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருக்கிறது. இதனால் வீட்டின் வாசற்படிகளில் மஞ்சளை கட்டிவிடலாம் அல்லது இந்த மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பது விடலாம். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.
pixabay
- உடல் சூட்டால் ஏற்படும் வேனல் கட்டி, வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யும் சக்தி விரலி மஞ்சளுக்கு உள்ளது. கட்டி உள்ள இடங்களில் பத்துப் போட்டால் விரைவில் குணம் உண்டாகும்.
- மஞ்சளையும் (virali manjal) , நெல்லிக்காயையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை அரைத்துப் பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
மேலும் படிக்க – பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த யோகார்டின் ஆரோக்கிய மற்றும் சரும பாதுகாப்பு நன்மைகள்!
- மஞ்சள் மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்து அரைத்து மூன்று மாதத்துக்கு ஒருமுறை என தொடர்ந்து ஏழு நாள்கள் சாப்பிட வேண்டும். இதனால் மஞ்சளில் இருக்கும் கிருமிநாசினி தண்மை குடலை சுத்தப்படுத்த உதவும்.
- மாலை நேரத்தில் விரலி மஞ்சள் தூள் கலந்த பாலை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்.
- விரலி மஞ்சள், குப்பைமேனி இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து உடலில் பூசிவந்தால் சருமப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.
pixabay
- லுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் விரலி மஞ்சள் தூளுக்கு உண்டு என ஆய்விகள் நீரூபிக்கின்றன.
- சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். இதற்கு அரைத்த மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால் மெள்ள மெள்ள கட்டி சரியாகும்.
- விரலி மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
- அருகம்புல்லுடன், விரலி மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்து வர வியர்க்குரு பிரச்சனைகள் அறவே நீங்கிவிடும்.
மேலும் படிக்க – பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !
pixabay
- பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளை சற்றுக் கூடுதலாக சேர்த்து கொள்வது நல்லது. இதனால் கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.
- சம அளவு மஞ்சளையும், மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!