பெண்களுக்கென்று பிரத்யேகமாய் கொண்டாட ஒரு நாள் வேண்டுமா? தன் வாழ்க்கையில் பெண் எப்படி அனைத்து விதங்களிலும் காரண காரணியாகவும், அர்த்தம் நிறைந்தவளாகவும் இருக்கிறள் என்று உணர்ந்தவர்கள், தினமும் கொண்டாடும் ஒரு நாள் இந்த மகளிர் தினம் என்று கூறலாம்.
எனினும், அவளை இந்த அகிலமே போற்ற ஒரு நாள் தேவை தான்! இதனை மறுக்க முடியாது. அப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அர்த்தமாய், ஆதாரமாய் இருக்கும் பெண்களை போற்றி வாழ்த்த எண்ணினால், இங்கே உங்களுக்காக ஒரு சுவாரசியமான மகளிர் தின வாழ்த்து (women day quote/wishes) தொகுப்பு!
மனதை கவரும் மகளிர் தின வாழ்த்துக்கள்! (Happy Womens Day)
1. கட்டுப்பாடோடு வாழ
தெரிந்தவர்கள் பெண்கள்..
அக்கறை பாதுகாப்பு
என்று அவர்களின் முயற்சிக்கும்
சிந்தனைகளுக்கும் தடை போட்டு
பெண்களை ஊனமாக்கிவிடாதீர்கள்
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
2. சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம் என்ற
எண்ணத்தை உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே ஆட்சி செய்யும்
அளவிற்கு முன்னேறியவர்கள் பெண்கள் ..
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
3. பெண்ணாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழிகளே!
நாம் பெண்ணாகபிறந்ததில்
நமக்கு பெருமை ..
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
4. இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்
மகளிர் தின வாழ்த்துகள்!
5. பெண்ணே,
உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்!
6. ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து
குழந்தையாய் தருபவள் பெண்!
தன் வயிறு காய்ந்தாலும் மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள் பெண்!
எப்போதும் பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகிறாள் பெண்!
பெண்ணே, உனக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!
7. மகிழம் பூவாய் உன் மனம் மணக்கட்டும்..
ஆயிரம் தொல்லைகள் உன்னைச் சுற்றி வந்தாலும்
மத்தாப்பூவாய் நீ மலர்ந்து சிரி..
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
8. பிரச்சனைகள் உனைக் கண்டு
பிடரியில் கால் பட பயந்து ஓடட்டும்.
யாருக்கு இல்லை கவலைகள்
சிரி, உன்னைச் சுற்றி சந்தோஷ சாம்ராஜ்யம் உருவாக்கு..
வாழ்வது ஒரு முறை தானே
பெண்ணே, அகிலம் உன்னால் வாழட்டும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
9. அன்பெனும் மந்திரம் ஓதப் பழகு
அன்பெனும் அன்னம் வாரி வழங்கு
அன்பெனும் உடைகள் உடுக்கக் கொடு
அன்பால் உலகை அணைத்துக் காட்டு.
அன்பே நீ தானே பெண்ணே
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
10. பொறாமை விடு, அகம்பாவம் அழி
அறிவைப் பெருக்கு, ஆற்றலை உயர்த்து.
அன்பை அழிப்போரை, அடித்தும் திருத்து.
கண்ணீர் விட்டு காலம் களையாதே
சோம்பியிருந்து சோர்ந்து போகாதே
சட்டத்தின் துணையோடு எங்கும் சமாதானம் நிகழ்த்து
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
பெண்கள் தின வாழ்த்துக்கள் (Womens Day Wishes In Tamil)
Pixabay
11. உன் பூங்கரங்களில் தான் புவியே இருக்கிறது பெண்ணே,,,,,
பெண்கள் தின வாழ்த்துக்கள் பெண்ணே உனக்கு!
12. அன்பு – இந்த அழகான சொல்லுக்கு முதல் அர்த்தம் அம்மா!
எப்போதும் சீண்டி தோல்விகளில் தூண்டி தன்னை நமது
முதல் குழந்தையாகவே காட்டிக் கொள்வாள் தங்கை!
நம்மில் பாதியாய் நம் கரம் பற்றிநம்மை முழுமையாக்குபவள் மனைவி!
நம் வாழ்வின் அடையாளமாய், அங்கீகாரமாய், வசந்தம் தரும் தேவதையாய் மகள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
13. பெண்கள் இல்லாத உலகம் நிச்சயம் சாத்தியப் படாது.
பெண்கள் இல்லாத வாழ்க்கை, நிச்சயம் வாழ்க்கையாயிருக்காது.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
14. அழகான பெண், ஆணித்தரமான பெண்
இளமையான பெண், ஈரமான பெண்
உண்ணதமான பெண், ஊமையான பெண்
எச்சரிக்கையான பெண், ஏக்கமான பெண்
ஐயமான பெண், ஒழுக்கமான பெண்
ஓலையில் உள்ள பெண், ஔவையார் போல் பெண்
உயிரெழுத்தை போல் உயிரை உருவாக்கும் பெண்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..
15. மலரின் மறுபிறப்பாய் அவதரித்து, மணப்பெண்ணை அடிவைக்கும் போது
மாமன், மாமி, நடத்தி மனமறிந்து கட்டிய மணவாளன் தேவையறிந்து,
பெற்ற மழலையின் நலனை முன்னிறுத்தி
மயக்கும் புன்சிரிப்பில் மதிமயங்கி
தனக்கென ஏதும் எண்ணாது மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்
மாதந்தோறும் இடைவிடாது மணக்கும் மலர் அன்றோ பெண்.!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
16. மார்ச் எட்டு மட்டும் என்ன சிறப்பு!
மண்ணுலகில் பெண்ணை படைத்திட்ட பிறகு
மாளவனும், பிரம்மனும் கூட தன்
மஞ்சத்தில் நிம்மதியாய் உறங்குகிறானே! அம்மேதகு
மகளிருக்கு வருடத்தில் ஒரு நாள் என்ன
மண்ணுலகம் இயங்கும் வரை
மறவாது கொண்டாடுவோம் மகளிர் தினம்.!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
17. வாழ்க பாரதம் பல்லாண்டு, அதில் ஒளியாய்,
வீசட்டும் மகளிரின் இன்றியமையா தொண்டு.!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
18. மென்மையான பெண்மையே உறுதி கொண்ட மனதினாய்
உள்ளம் பூக்கும் அன்பினாய்,
சேவை செய்யும் மனிதமே உன்னையன்றி உலகம் இயங்குமா ?
சிறிய விதைக்குள் மாமரம் போல உனக்குள் எத்தனை உருமாற்றம்
பெருமை கொள்கிறேன் பெண்ணாக
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
19. தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி..
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
20. வாழ்த்தும் மனம், பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை, எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி, ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு, தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும், தடம் பதித்து முன்னேறு..
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்கள் தின பொன்மொழிகள் (Womens Day Messages)
21. பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு..
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
22. அமுதூட்டி வளர்த்த தாயாய்
ஈகையின் மகிமையை இளமையில் ஊட்டிய தமக்கையாய்..
பெண்மையின் மேன்மையை இயன்றவரை கற்பித்த தோழியாய்
மனமறிந்து வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை பகிரும் மனைவியாய்..
இறுதிக்காலத்தின் இடையூறு தீர்க்க காலச்சென்ற தாயின் மறுபதிப்பாக மகளாய்
மன அழுத்தத்தின் மருந்தாகும் மழலையாய்.
ஒவ்வொரு மனிதனையும் அடையாளப்படுத்திய அனைத்து மகளிருக்கும்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
23. வேதனைகளை சாதனையாக்கி சங்கடங்களை சருகாக்கி
வெற்றிப்படி ஏறும்
அன்னையரே சகோதரிகளே தோழிகளே
உங்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்!
24. பெண்ணே அதோ பார்
உலக மகளிர் தின விழாவின்
தோ”ரணங்கள்” ஆடிக்கொண்டிருக்கின்றன.
கொஞ்ச நேரம் உற்றுப்பார் அந்த ஊமை ரணங்களை.
மி்ன் மி்னி பூச்சியல்ல நீ.
மி்ன்னணு யுகத்தின் சுடரேந்தி நீ.
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
25. அறிவே அழகு, ஆற்றலே ஆயுதம்
சக்தியே துணை வரும், உடற்கூறோ ஒப்பனைகளோ
நம்மை உயர்த்திவிடப் போவதில்லை
சுயத்தை இழக்காத, எதுவும் தான் மகிழ்வு எனும் உள்ளுணர்வு
பெண்களிடம் தோன்றும் வரை
மகளிர் தினம் வேணும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
26. இறைவன் படைத்தவற்றில், இறைவனுக்கு நிகரற்ற இனம் பெண்
இல்லம் தோறும் இன்ப மழை பொழிபவள் அவள்
அனைத்தையும் அடுத்தவர்க்காய் அர்பணித்தவள் ..,
அன்பை மட்டுமே எதிர் பார்ப்பவள்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஊக்கமளிக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் (Motivating Womens Day Quotes In Tamil)
Pixabay
27. அன்பை அள்ளித் தரும் அன்னையாய்
பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்
சகல நேசங்களையும் கொட்டிடும் சகோதரியாய்
அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்
பெரிதுவக்கும் பண்புகளில் பெரியம்மாவாய்
சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்
அன்னைக்கு அடுத்தபடியாக அண்ணியாய்
இவை அனைத்திற்கும் மேலாக
கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய்
தோள் கொடுக்கும் தோழியாக
உள்ளத்தில் மட்டுமல்ல, உணர்வில் மட்டுமல்ல
உயிரிலும் கலந்திருப்பது நீங்கள் தான்
28. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்”
என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்ததாய்,
பெருமையுடன் எண்ணிக் கொண்டு,
இந்த “அகில உலக மகளிர் தினத்தில்”
அனைத்து மங்கையர்க்கும், இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
29. கருவில் அரும்பி உருவம் தரித்து
பருவம் அடையுமுன் பலபல பக்குவங்கள் பதறாமல் பெறுபவள்!
அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற வண்ணத் தேர்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
30. எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் உன்னத படைப்பு, பெண்கள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
31. அகத்தில் அன்புடனும், புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும், பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
32. பொறுமைக்கு இலக்கணமாய் புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய் அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
அன்னையும் அவளே, சகோதரியும் அவளே ..,
தோழியும் அவளே, காதலியும் அவளே ..,
மனைவியும் அவளே, மகளும் அவளே
உலகில் உள்ள அனைத்து உறவுகளும் அவள் கொடுத்தவையே
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
33. இன்பங்களின் தொழிற்சாலை பெண்..,
இன்னல்களின் மயானமும் அவளே
அன்பென்ற வார்த்தையின் அகராதி அவளே
அவள் தெய்வம் போன்றவள் அல்ல..,
கண்முன் தோன்றிய கடவுள் அவள்
பூமியில் பிறந்த தேவைதை அவள்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
34. தன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களிற்காக வாழும்
ஒரே இனம் அவள்
அவளுடன் ஒப்பிடமெழுகுவர்த்தி கூட தகுதியற்றது
பெண் என்றும் அடிமை அல்ல..,
இந்த அகிலம் தான் அவளின் அடிமை..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
35. மதிக்கப்படுதல் – புரியப்படுதல்
நேசிக்கப்படுதல் – உரிமை பெறுதல்
என்ற நான்கைத்தான் ஒரு பெண்
பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு
மார்ச் 8 மட்டுமன்று, மாதமெல்லாம் மகளிர் தினம்தான்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
36. சூழல்கள் எதுவானாலும் சுற்றம் யாரானாலும்
நிலைகள் நித்தம் மாறினாலும் நிம்மதி பெரும் சவாலானாலும்
தடை பல முன் வந்தாலும் தானே தன் சக்தியால்
வெற்றிகள் பெற்றெடுத்து வையகம் வாழ்வித்தும் வரும்
பெண்களுக்கு இத்தினத்தில் வாழ்த்து சொல்லி மகிழ்வோம்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
பெண்களை மேன்மைபடுத்தும் வரிகள் (Inspiring Womens Day Quotes In Tamil)
37. கள்ளிச் செடிகளை களைந்து எறியுங்கள்
பெண் மலர்கள் எங்கும் பூக்கட்டும்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
38. ஒருநாளே பெண்களுக்கு ஒதுக்கினர் ஆண்கள்
‘உலகப் பெண்கள் தினம்’
“ஒருநாள் இது மாறும், ஒதுக்கலாம் ஆண்களுக்கு”
உலகப் பெண்கள் இனம்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
39. பெண்ணே உன்னை கண் என வைத்தார்கள்!
பத்திரமாக பார்த்துக்கொள்வதற்கல்ல! சிறைபிடிக்க!
முடங்கிவிடாதே!
பாரதிகண்ட புதுமைபெண்ணாய்
பொங்கி எழு!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
40. பெண்ணென்பார் பாவியர் அவரே உன்னைப்
பேதையென்றும் பழிப்பார்
பூவென்பார் பெண்ணே பின்னர் பூவுக்குள் புகுந்த நாகம் என்றும்
புண்ணாக்கும் வகையில் பேசிடுவார்
தாயாகச், சேயாக, தங்கையாக, தாரமாக தரைமீது பொறுமை மிக்க பூவையாக
பெண்ணே நீ படைக்கும் பாத்திரங்கள் பாரினில் பரிசுத்தம் ஆனவை!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
41. நதியும் பெண்ணாய், நாடும் தாயாய்
நிலவும் குமரியாய், நீல்கடலும் அவளாய்
மொழிகளில் நீயாய், முப்பெரும் தேவியாய்
பூக்களுக்கும் பெயராய், பூமியும் இவளாய்
மகளிர் தினம் மட்டுமல்ல, மானுடம் உள்ளமட்டும்
வாழ்த்துகின்றோம் பெண்ணே உன்னை!
வாழ்த்துகின்றோம் முன்னே உன்னை!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
42. கருதனில் மங்கையராய் பிறந்து, வயற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டி, முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையருக்கு, மகளிர் தினம் ஒரு இனிய சமர்பணம்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
43. ஒரு பாதி நிலம், ஒரு பாதி நீர்
ஒரு பாதி ஆகாயம், ஒரு பாதி காற்று
ஒரு பாதி நெருப்பு எனநம்மின் பஞ்ச பூதங்களிலும் சரி பாதி அவள்
அவளின் இயக்குதலில் அவளைப் பற்றிச் சுழன்றபடியிருக்கிறது நம் பூமி!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
44. எப்போதாவது அவளுக்கு ஒரு துணை தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு விரல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு தோள் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு சொல் தேவை
அப்போது மட்டும் அவளுக்கான நம்மைக் கொடுப்போம்
மற்றபடி அவள் தனியள், மகளிர் தின வாழ்த்துகள்!
45. தினம்,தினம் மகளிர் தினம் தான் கொண்டாடுகிறோம்.
தாயாக,தாரமாக, மகளாக.சகோதரியாக சிநேகிதியாக,
சித்தியாக,அத்தையாக பாட்டியாக ,அக்கம் பக்கத்தினராக,
ஆனாலும் விடியவில்லை. அடிமைத்தனம் போகவில்லை.
வானம் வசப்படும் நமக்கு நாமே ஆறுதல் தருகிறோம்.
தள்ளி நின்று சமுதாயத்தை வெறுக்கின்றோம்.
வானம் வசப்பட்டது. வாழ்வு வசப்படவில்லை.
விரைவில் அந்த விடியல் நமை நோக்கி!
மகளிர் தின வாழ்த்துகள்!
46. ‘அவர்கள்’ கேட்கிறார், அதுஎப்படி.. ஆணும் பெண்ணும் சமமாமே
அது எப்படி..
நாங்கள் சொல்கிறோம் நிறுக்கும் தராசில் நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும் ஒன்றல்ல ஆனால் சமம்!
மகளிர் தின வாழ்த்து.
ஊக்கமளிக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் (Encouraging Quotes For Women)
Pixabay
47. பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது
உண்மையான மாற்றம் வரும் அப்போது
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
48. உலகப் பெண்கள் தினம்பற்றி – மிக உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம் தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்- ஏனாம் மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக- பெரும் சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே?
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
49. உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
50. பெண்மையும் போற்றவில்லை, அடிமைத்தனமும் மாறவில்லை.
ஆண்கள் பார்வையும் குறையவில்லை. பண்போடு பார்க்கவும் முடியவில்லை.
போதை பொருளாக காண்பதையும் விடவில்லை,
திறமையை விட வாழும் கலையை கற்க மறந்தோம்.
பிறருக்காகவே வாழவேண்டும் என்றல்லவா பிறந்தோம்.
ஆனால், இனி பெண்மை சிறக்கும் மாந்தர்குலம் தழைக்கும்.
தமிழ் மண்ணின் பெருமை தென்றலாக மணம் வீசும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
51. ஒவ்வொருபெண்ணும் சுமக்கிறாள் ரு குடும்பத்தை!
“பாசம்“ பிடித்த பண்பாட்டுச் சுமை! பரம்பரையாக!
பெண்களின் சுமையைக் குறைக்க, போராளிகள் தொடங்கிய
மகளிர் தினம், இப்போது வணிக தினமாகிவிட்டது!
52. நெருக்கமான உயிரில் கலந்த காதலியாக, இதயம் கனிந்த மனைவியாக,
ஈன்றெடுத்த தாயுமானவளாக, தோள் கொடுக்கும் பாசமுள்ள தோழியாக
சண்டையிடும் சகோதரியாக,
இப்படி பல உறவுகளில் ஆழ்ந்து உலகமதில் பதிந்திருக்கும்
உன்னதமான ஆச்சரியமாக தினம் தினம் கணப்பொழுதில்
உருமாறும் மகளிர்.. ஆண்டவனின் அதிசய படைப்பு
53. மகத்துவம் வாய்ந்த மனிதப்பிறவியில்
முதன்மை பெறுகிறவர்கள் பெண்கள் தான்.
இந்த உலக இயக்கத்தில் பலவகையில்
ஆதாரா சிருஷ்டியாக பெண்கள் தான் உள்ளனர்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
54. நீரின்றி உயிரில்லை, நீயின்றி அணுவில்லை
அணுவின்றி எவையுமில்லை, பெண்ணினமே நீ வாழி!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
55. பெண் என்பவள் வாழை மரம் போல்
தன்னை வெட்டுபவர்களுக்கும் இலகாகுவாள்
தன்னை கட்டுபவர்களுக்கும் இலகாகுவாள்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
56. சூரியன் இன்றி பூமி சுழலாது
பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
உடன் வேலைப்பார்ப்பவர்களுக்கான வாழ்த்துக்கள் (Womens Day Wishes For Colleagues)
57. உற்றத் தோழியாய், உயர்குடும்பத் தலைவியாய்
நற்றமிழ்ச் செல்வியாய், நலம்பாடும் சகோதரியாய்
உற்றதுரைக்கும் உயர்கனிமொழியாய், கற்றதனைத்தும் கடைப்பிடித்து
கடமையாற்றும் காரிகையாய், வாட்டம் போக்குகின்ற வண்ணப் புதுமலராய்
காட்சியில் திகழும் கனகத் திரளாய் விளங்கும் புதுமைப் பெண்களை
வாழ்த்திப் போற்றுவோம் மகளிர் நன்னாளில்!
58. அமுது படைப்பதில் ஔவையாய்
அன்பு செலுத்துவதில் அன்னை தெரசாவாய்
வீரத்தில் வேலு நாச்சியாராய் விவேகத்தில் அன்னை இந்திராவாய்
சரித்திரமும், சாதனையும், உயர்ந்த சாதனைகள் படைக்கும்
உலக மங்கையர் அனைவரையும்
உளமாற வாழ்த்தி நம் உளங்களிப்போம் மகளிர் நாளில்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
59. சரித்திரம் படைத்த பல பெண்மைகளுக்கும்
புதிய சரித்திரம் படைக்கப் போகும் பெண்மைகளுக்கும்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.. தோல்விகள் பல உங்களை மிக
எளிதாக கடந்து போகலாம், துவண்டு விடாதீர்கள்
உங்களை தங்கமாய் புடம் போட வந்த
படிக்கட்டுகள் காத்திருங்கள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
60. சிரிக்கிறாள் என்பதற்காக பெண்ணை ச்சீ என்காதீர்கள்
மொறைக்கிறாள் என்பதற்காக அவளை மோசக்காரி என்காதீர்கள்
ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு அன்னை தெரசா ஒரு கிளியோபாட்ரா
இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
61. தென்னை எத்தனை உயரம் வளர்ந்தாலும் -அது ஒரு புல் இனமே,
பெண்மை எத்தனை கடினமானவள் என்றாலும் அவள் ஒரு பூ இனமே,,
கண்ணாக மதிக்கப்பட வேண்டிய போற்றுவோம்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
62. நாட்டில் மண்ணும் காக்க பட வேண்டும்
பெண்ணும் காக்க பட வேண்டும் !
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
63. எல்லோர் வீட்டிலும் இறைவனின் பிரதிநிதியாய் அன்னை..
எல்லோர் வாழ்விலும் உள்ளன்பின் பிரதிநிதியாய் தோழி..
எல்லோர் வீட்டிலும் தனக்கே பிரதிநிதியாய் மனைவி..
‘எங்கெங்கு காணினும் சக்தியாடா’
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
64. என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்
65. குளிர்பானம் முதல் அசைன்மெண்ட் வரை
பகிர்ந்து கொண்டு காதல் முதல் கவிதை வரை
அத்தனையும் விவாதித்து,
அழகான சட்டை எடுப்பது முதல், முறையாக ஆங்கிலம் கற்றது வரை
என்னுடன் வந்த என் தோழிக்கு
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
66. பெண்கள் எதிர்பார்பதெல்லாம் சின்னதாய் ஒரு சிரிப்பும்,
சினேகமாய் ஒரு பார்வையும், அக்கறையாய் சிறு நலம் விசாரிப்புகளும் மட்டுமே.
ஆகவே பெண்கள் தினம் கொண்டாட வேண்டுமென்றால்
அனுதினமும் கொண்டாடுவோம்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
கார்பரேட் பெண்களுக்கு வாழ்த்துக்கள் (Womens Day Corporate Messages)
Pixabay
67. வாழ் நாள் சாதனைக்கு வாழும் நாளை சோதனையாக்கி
முறை வாசல் முதல் பிறை வாசல் வரை
அடுக்களையில் ஆரம்பித்து அணு உலை வரையிலும்
அரிசியில் கல் எடுத்தும் அரசியலில் கால் பதித்தும்
கணவன் முதல் கணினி வரையில்
சாதனை படைக்கும் பெண்ணே,
உனக்கு, மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
68. கண்ணியம் மிக்க
பெண்ணியத்தைப்
போற்றுவோம் எந்நாளுமே!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
69. இல்லற இன்ப நுகர்வுக்கும்
இல்லப் பணிகளுக்குமே
இறைவனின் படைப்பென
இகழப்பட்ட மகளிர் குலம்
ஓரணியாய்த் திரண்டெழுந்து
உலகையே விழிக்கவைத்த
உன்னத நாள் மார்ச் எட்டு!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
70. தேவதைகள் எப்போதும் அருகில் இருக்கிறார்கள்..
தனியே ஒருதினம் தேவையில்லை
எனினும் மகளிர் தின வாழ்த்துகள்!
71. அலுவலகத்தில் அரசியாய் ..
இல்லத்தில் இல்லத்தரசியாய்
பொறுமைக்கு பெருமை சேர்த்து
முடியாது என்பது கிடையாது என
அயர்ச்சியை பின் வைத்து முயற்சியை முன் வைத்து
வாழ்க் கை எனும் பரமபத விளையாட்டில் ஏணியில் ஏறி
முழு மூச்சுடன் செயல்படும் பெண்ணே
உனக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
72. சமுதாயத்தை கட்டும் கட்டிட அதிகாரியோ ?
உன் சக்தியின் பின்னணி தான் என்ன ?
உன்னை மெச்ச நினைக்கின்றேன், வார்த்தைகள் இல்லை !
பொறமை பட நினைக்கின்றேன் மனம் இல்லை
உன்னை போல் செயல் பட நினைக்கின்றேன் செயல் பட முடியவில்லை!
போட்டியிட சக்தி இல்லை !
நீ இல்லையேல் நாங்கள் இல்லை !
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
73. பெண்மையின் மகத்துவத்திற்கு தலை வணங்குகின்றோம்
புது மங்கையாய் சாதிக்க பிறந்தவளே!
சோதனையும் சாதனையாய் மாத்தும் தாரகையே!
உந்தன் வரவு மண்ணிற்கு புதிய எழுச்சி
நீ செய்யும் ஒவ்வன்றும் நன்மையின் புரட்சி
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
74. மங்கையராய் நீ பிறக்க என்ன தவம் செய்ததது இந்த அழகிய வையகம்
வீட்டிலே முடங்காமல் உலகையே உன் கைக்குள்ளே அடக்கும் ஆற்றலால்!
அனைவரையும் அசர வைத்தவளே சமையலிலே பல வித ருசியும்
கலையிலே எண்ணிலடங்கா பல்கலையும் விளையாட்டு துறையுளும் கணினி வளர்ச்சியுளும்
நாட்டின் பொறுப்பில் இருக்கும் அரசியல் கடலிலும் மூழ்கி முத்தெடுத்துவளே
உனக்கு என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
75. பெண்ணே, நீ இருக்கும் இடத்தில் வானவில்லின்
வர்ணஜாலங்கள் குடிபுகுந்து வண்ணமயாக்குகிறது!
நீ அனைத்து துறைகளிலும் வைரமாய் ஜொலிக்கிறாய்
மங்கையாய் நீ பிறந்து இந்த உலகையே
பெருமையடைய செய்கின்றாய்!
மங்கையர் தின வாழ்த்துக்கள் தோழிகள் அனைவருக்கும்
76. மங்கை உன் வளர்ச்சி வேங்கை போல் சீறுவது எமக்கு மகிழ்ச்சியே !
சுமக்கும் குடும்பமும் சுமையென இகழாதே !
அகவையில் அணுஅளவும் அகம்பாவம் கொள்ளாதே
அடங்கவும் வேண்டாம் ஆடவும் வேண்டாம்!
அன்பால் அடக்கு, ஆடவன் ஆடவே மாட்டான் !
மங்கையர் தின வாழ்த்துக்கள் !
மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Quotes For Wife)
77. அவள்தான் நமது உலகம் அவளோ
தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட
பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள்
அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில்.
அனைத்தும் மாறித்தான் போய்விட்டன
அவளது.. ஒரு கண்ணில் சூரியன், ஒரு கண்ணில் நிலவு
இரண்டு விழிகளையும் மூடி அவள் உறங்கியதே இல்லை
அவளது பெயரில் பாதி..இப்போது கணவனுடையது
அவளது உயிரில் பாதி இப்போது குழந்தைகளுடையது
அவளின்றி அசையாது ஓரணுவும் ஒரு நிமிடமாவது
அவளுக்காகத் துடிக்கட்டும் நம் இதயம்
மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகள்!
78. காற்றே போ இன்று என் இனியவளுக்கான நாள்.
அன்பு என்றால் தாய்மை ஆவாள்
அவள் என்றால் மங்கை ஆவாள்!
மணம் என்றால் மனைவி ஆவாள்!
இரவு என்றால் நிலவு ஆவாள்!
79. அழகு என்றால் ஆவாள்! பிறப்பின் பிறப்பிடம் அவள்!
பிறப்பில் மங்கையான பிறந்து! வளர்ப்பில் தோழியாக மலர்ந்து!
பின் மனைவி என்னும் புனைபெயர் கொண்டு இறுதியில்
வாழும் கடவுளாக நிகழ்வில்“அம்மா” என்னும் சிறப்பு பெயர்
பெறும் என் இனியவர்களுக்கு
என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!
80. தோழிகளுக்கும் என் முதல் காதலி இனிய தாய்க்கும்!
மற்றும் என் இனியவளுக்கும்!
என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!
81. சொந்தங்களைப் பிரிந்து, கைபிடித்த காரணத்தால்
உலகின் கடைசி வரைகூட வரும் என் மனைவி
தேவதையாய் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள்..
என்னவளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
82. நடக்கும் வரை கை கொடுத்து நடந்த பின்
தன்னம்பிக்கை கொடுத்து!
பிறப்பில் தான் ஆன் பெண் என்ற வேற்றுமை
வளர்ப்பில் அன்பு எனும் ஒரே கோட்ப்பாடு தான் என
ஒற்றுமையை கடைப்பிடித்து தசவதாரமாய்
தரணியில் நடை போடும் பெண்ணே !
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
83. அன்பு மனைவிக்கு
தரணி பார்த்த தாரகையே! தூரிகை தீட்டா ஓவியமே!
போராடும் வர்கத்தின் பிரதிநிதியே! கொஞ்சம் இளைப்பாறவும் கற்றுக்கொள்!
என் வாழ்வில் நீ என்றும் நிறைந்திருக்க விரும்புகிறேன்!
என்னவளுக்கு, இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
84. நில்லாமல் சுழலும் நாயகியே!
இல்லம் சிறப்பிக்கும் இல்லத்தரசியே!
சமையல் கலை வல்லுநரே!
வீட்டில் பரிவுகாட்டும் செவிலியரே
பொருளாதாரம் மேம்படுத்தும் பணியாளரே!
செவிசாய்க்கும் சிநேகிதியே,
பரிணாமங்கள் பல கண்டு, அவதாரம் பல பூண்டு
என் வாழ்வின் நீண்ட பயணத்தின் அர்த்தமாய் நீ!
என் மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!
85. என் வாழ்வில் நீயும் ஓர் முக்கிய அங்கம்!
உன்னை நேசிக்க மறவாதே! உன்னக்காக நேரம் ஒதுக்கு!
உரக்கம் தெய்வக்குற்றம் அல்ல! தயங்காமல் தூங்கி ஏழு!
பிடித்ததை செய்ய தயங்காதே! பிள்ளைகளை தாண்டிய உலகம் பார்
உனக்கென இருக்கும் ஒரு உலகத்தில் நீயும் கொஞ்சம் உனக்காக வாழ்ந்து பார்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
86. ஒப்பனையில்லா தேகம் அழகு. அங்கும் இங்கும் தெரியும்
நரை மயிர் பேரழகு!
கண்ணில் கருவலயம் தனி அழகு! தேகத்தில் ஏற்ற இறக்கங்கள்
வளர்ச்சியின் அடையாளங்கள் உன்னை அப்படியே என்றும் நான் விரும்ப
என் வாழ்க்கையின் அர்த்தமாய், ஆதாரமாய் நீ!
என் உயிர் உற்சாகமாய் இயங்க காரனமானவளுக்கு
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
அம்மாவுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Quotes For Mother)
Pixabay
87. உவமை இல்லாததாய்
பெண்மையின் தாய்மை
அது இல்லையெனில் ஏது
ஆண்மையின் ஆளுமை?
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
88. நல்லோர் தீயோர் பாராது
நலம் பயக்கும் நதிகளுக்கு
நங்கையரின் பெயர் வைத்திருக்கும்
நம் நாட்டில்
நம்புங்கள், நம்மைப் பெற்றவளும்
தெய்வம்தான் என்று!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
89. விடுதலையின் வெற்றி சுதந்திரதினம்
வியர்வையின் வெற்றி மே தினம்
அன்பின் வெற்றி அன்னையர் தினம்
அகில உலக மங்கையரின் வெற்றி
அகம் மகிழும் இந்த மகளிர் தினம்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
90. ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
91. ஆயிரந்தான் கவிசொன்னேன், அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே!
காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு ஓங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமப் போனேனோ?
எனக்கொண்ணு ஆனதுன்னா ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா?
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
92. நீல வானுக்கு கீழே தழைக்கும் நிலம் போலே
உன் நிழலுக்கு கீழே பிழைக்கிறோம்
வானின்று வரும் மழையால் துளிர்க்கும் உயிர்போலே
உன் வலியுடன் பிறக்கும் கருணையால் துளிர்க்கிறது மனிதம்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
93. இந்த உலகத்திற்கே உயிர்களை உருவாக்கிக் தரும் உன்னதம்!- தாய்மை!
தன்னுயிரை பணயம் வைத்து என்னுயிரை உருவாக்கிய
புனிதம்! – அம்மா!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
94. உள்ளார வருந்தும் கணங்களில்
மடி சாய்ந்து அழ முடிகிறது அவளிடம்
தேவதைகள் எப்போதும்
என்னைச் சுற்றியே இருக்கிறார்கள்..
என் வாழ்வில் நிறைந்திருக்கும் அனைத்து பெண் உறவுகளுக்கும்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
95. தெய்வங்களுக்கு ஒரு தினம்!
உலகைப் படைப்பவள் தெய்வம் தானே.
அடுக்களையே அலுவலகமாய்,
குடும்பத்தின் தேவையே தன் தேவையாய்,
குழந்தைகள் விருப்பமே தன் விருப்பமாய்,
மற்றவர்களுக்காக தன்னை மாற்றி,
தன்னைத் தொலைத்து மெழுகாய் வாழும்
அம்மாவுக்கு, மகளிர் தின வாழ்த்துக்கள்!
96. நம் இல்லத்தின் மணம் வீசும் மல்லிகை
இதோ பல ரூபங்களில்
சமுதாயத்திற்கு சத்துள்ள சான்றோனை படைக்க
சவால்களை சாட்டையடிகளை தகர்த்து
சாதனைகளை படைக்க உன்னதமான உடலும்
உறுதியான மனமும், உயர்வான எண்ணங்களும்
வலிமையான ஊக்கமும், உரம் என உரத்தை சோற்றுடன்
சேர்த்து ஊட்டிய என் அன்னைக்கு
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
மேலும் படிக்க – உங்கள் வெற்றிக்கு உறமாக இங்கே சில பிரபலங்களின் பொன்மொழிகள்!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!