logo
ADVERTISEMENT
home / Bollywood
பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு போட்டோ ஷூட் ! குழந்தையை உலகிற்கு காட்டிய எமி ஜாக்ஸன் !

பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு போட்டோ ஷூட் ! குழந்தையை உலகிற்கு காட்டிய எமி ஜாக்ஸன் !

எமி ஜாக்சன் என்றாலே வித்தியாசம்தான் என்கிற புது பெயர் இப்போது அவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த அளவிற்கு எமி ஜாக்சன் பெண்களின் வாழ்வில் போட்டு வைத்திருக்கும் மரபு சங்கிலிகளை உடைத்தெறிந்து காட்டி இருக்கிறார்.

தாய்மை அடைதல் என்றாலே திருமணம் மூலமாகத்தான் நடைபெறும் என்கிற ஒரு நம்பிக்கைகளை சக உலகிற்கு முன்னால் உடைத்தார் எமி ஜாக்சன் (emi jackson) . அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் அதனால் அவருக்கு அது சுலபம் என்கிற பேச்சு எழுந்தது. ஆனாலும் எமி தொடர்ந்து அதனை கண்டுகொள்ளாமல் அடுத்த அடிகளை எடுத்து வைத்தார்.

எமிக்கு குழந்தை பிறந்தாச்சு! தாய்மை தருணத்தை முதன்முதலாக குழந்தையோடு பகிர்ந்த எமி ஜாக்சன்!

திரைப்பட வாய்ப்புகள் இருக்கும்போதே லண்டனில் காதலர் ஜார்ஜ் பெனாய்டோவை சந்தித்து காதலில் விழுந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்படும் முன்னரே கர்ப்பமானார் எமி. இதனை மூடி மறைக்காமல் இந்த தருணத்தை நான் கொண்டாடுகிறேன் என்று உலகிற்கு தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் எமி.

ADVERTISEMENT

அதன் பின்னர் தன்னுடைய தாய்மை அழகை உலகிற்கு விதம் விதமான புகைப்படங்கள் மூலம் வெளியே காட்டினார் எமி. வீங்கிய வயிறு பெண்ணின் அழகை ஒரு போதும் குலைப்பதில்லை என்பதே அவரது எண்ணமாக இருந்தது. தாய்மை ததும்ப நிறைமாத கர்ப்பிணி ஆகும்வரையிலும் புகைப்படங்களை வெளியிட்டார்.                                                     

கடந்த 24ம் தேதி எமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு கையால் மார்போடு குழந்தையை அணைத்து தாய்ப்பால் ஊட்டியபடி கணவரின் நெற்றி முத்தத்தை ஏற்று கொண்டிருக்கும் எமியின் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் மூலம் உலகப்பிரபலம் ஆனது.                                                                                        

தாய்ப்பால் ஊட்டும் புகைப்படம் அரிதிலும் அரிதாகவே நடிகைகளிடம் இருந்து வெளிப்படும். அதுவும் தமிழ் நடிகைகளிடம் வாய்ப்பே இல்லை. ஆனால் எமி அதனையும் வெளிக்காட்டினார்.

தற்போது அடுத்த கட்டமாக பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகன் ஆண்ட்ரியாசிற்கு போட்டோஷூட் நடத்தி தன்னுடைய குழந்தையின் முகத்தை உலகிற்கு காட்டி இருக்கிறார்.                                                                      

ADVERTISEMENT

பார்க்கும்போது அழகாக இருக்கிறது. ஆனாலும் ஒரு வார குழந்தையை அதன் இயல்பு தாண்டி புகைப்படத்திற்காக போட்டோ எடுக்க சில கோணங்களை முயற்சித்திருப்பது மட்டும் நெருடலாக இருக்கிறது. ஆனாலும் பெற்ற அன்னை அவரை விடவா நமக்கு அக்குழந்தையின் மேல் அக்கறை வந்து விடப்போகிறது!

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
30 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT