எமிக்கு குழந்தை பிறந்தாச்சு! தாய்மை தருணத்தை முதன்முதலாக குழந்தையோடு பகிர்ந்த எமி ஜாக்சன்!

எமிக்கு குழந்தை பிறந்தாச்சு! தாய்மை தருணத்தை முதன்முதலாக குழந்தையோடு பகிர்ந்த எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் (emi jackson) தமிழக ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்தி திரைப்பட ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகை. எந்திரன் 2.0 வில் ரஜினிக்கு போட்டியாக இன்னொரு ரோபோவாக அழகாகவே நடித்திருந்தார். மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழுக்கு வருகை தந்த எமி ஜாக்சன் சில கால நடிப்பு வாழ்க்கைக்கு பின்னர் லண்டனுக்கு சென்றார்.

அங்கே ஜார்ஜ் பெனாய்டோ என்கிற தொழிலதிபரை உளமாரக் காதலிப்பதாக உருகி உருகி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்த போது இந்திய இளைஞர்கள் பலரின் இதயம் உடைந்துதான் போனது!

அதன்பின்னர் அடுத்த அதிர்ச்சியாக திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனை உலகின் கூரையின் மேல் நின்று சந்தோஷமாக அனைவருடனும் பகிர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு கலாச்சாரத்தை சேர்ந்த எமிக்கு (amy jackson) திருமணத்திற்கு முன்னர் குழந்தை பெறுவது பெருமையான ஒன்றாகவே இருந்தது.

எப்படியோ மாட்டிகிட்டேன் குட்டி செவுத்துல முட்டிகிட்டேன்!சிச்சுவேஷன் சாங் பாடும் Losliya!                                                                                                  

Instagram

அதனைத் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க தன்னுடன் தன்னுடைய குழந்தையும் தனது வயிற்றில் வளர்ந்து வருவதை புகைப்படங்களாக மாற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். தன்னுடைய அழகை பற்றி கவலைப்படாமல் தைரியமாக தன்னுடைய வீங்கிய வயிறை புகைப்படமாக்கி உலகில் உள்ளோருக்கெல்லாம் தன்னுடைய தாய்மையைப் பற்றி பெருமையாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

சமீபத்தில் நடந்த பேபி ஷவரின் போது அந்த நாட்டு ஸம்ப்ரதாயப்படி பலூன் உடைத்ததன் மூலம் நீல கலர் பேப்பர்கள் பறக்கவே அவருக்கு பையன் பிறக்க போவதாக அனைவரும் நம்பினார்கள்.

மினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா ! இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப் !

இதுக்கப்புறம் கல்யாணம் தான்.. விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் நயன்தாரா ரகசிய தீர்மானம்!

View this post on Instagram

Our Angel, welcome to the world Andreas 💙

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

பேபி ஷவரின் சம்பிரதாய நம்பிக்கைகள் பொய்த்துப் போகாமல் எமி ஜாக்சன் ஆண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். குழந்தைக்கு Andreas என பெயரும் வைத்து விட்டார்கள் இந்த மாடர்ன் பெற்றோர்கள்!

தன்னுடைய முதல் குழந்தையை மார்போடு அணைத்து எமி பாலூட்ட தன்னுடைய மனைவிக்கு நெற்றி முத்தம் தருகிறார் எமி ஜாக்சனின் கணவர் ஜார்ஜ். எமியின் கையில் மருந்துகள் ஊசி மூலம் ஏறிக்கொண்டிருக்கின்றன.

பல்வேறு வலிகளுக்கிடையே பெற்றெடுத்த குழந்தையை எமி முதன் முதலாக வெளியுலகுக்கு காட்டி இருக்கிறார். அதுவும் எந்த நடிகையும் செய்யாத முதல் தாய்ப்பால் தருணங்களை அவர் புகைப்படமாக மாற்றி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பார்க்கவே நெகிழ்வாக இருக்கிறது..

டேக் கேர் எமி.. 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் செய்திகளையும் படிக்கவும்

 

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!