logo
ADVERTISEMENT
home / Bollywood
த்ரிஷாவுக்கு திருமணம் – முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா

த்ரிஷாவுக்கு திருமணம் – முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா

இது சினிமா ரசிகர்களுக்கான சிறப்பு தீனி (cinibits)

உருகிய காதலால் உணர்ச்சிவசப்பட்ட ஜோடி

கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் விஷால் நடிகை அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய வட்டத்தினர் ,முன்னிலையில் விஷால் அனிஷாவிற்கு மோதிரம் அணிவிக்கையில் சற்று உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தம்பதிகள் நலமோடு வாழ்க.

அரெஸ்ட் ஆவாரா ஐஸ்வர்யா தத்தா

ADVERTISEMENT

பிக் பாஸ் நெகட்டிவ் விமர்சனங்களால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவரது காதலர் கோபி நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருப்பது வெளியான நிலையில் இரு நாட்களுக்கு முன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஐஸ்வர்யா மற்றும் நளினி ஆகியோர் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது. பிக் பாசில் ஐஸ்வர்யாவை நுழைத்து அதில் உள்ள புகழின் பேரில் வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதிக்க கோபி திட்டம் போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் பங்கு இருப்பது நிரூபிக்கப்படுமாயின் அவர் அரெஸ்ட் செய்யப்படுவார் என தெரிய வருகிறது.

கடவுளின் வரம் நெகிழும் சௌந்தர்யா

தனது இரண்டாவது கணவர் விசாகனுடன் விளையாடி மகிழும் மகன் வேத் பற்றி சௌந்தர்யா ட்வீட் செய்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம் என அவர் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இறைவன் உங்களுக்கு தந்த அருளை எல்லோருக்கும் தருவதாக!

ADVERTISEMENT

நடிப்பை நிறுத்தும் அமீர்கான்

அமீர்கான் என்றால் உயிரையும் கொடுக்கும் ரசிகர்களை பெற்றிருப்பவர் அமீர்கான். இவர் ஹாலிவுட் படமான பாரஸ்ட் க்ரம்ப் பை இந்தியில் ரீமேக் செய்து தயாரித்து நடிக்கிறார். நடிப்பதற்காக பாலிவுட் வந்த அமீர்கான் எதேச்சையாக இயக்கிய படம் தாரே ஜமீன் பர். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தும் அமீர் இயக்குனர் ஆக முடிவெடுத்தால் தான் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

இறுதிப்படம் இதுதான் – இயக்குனர் ராஜமௌலி

மகதீரா படத்தின் மூலம் சரித்திர கதைகளுக்கு ஆரம்பப்புள்ளி வைத்த இயக்குனர் ராஜமௌலி பின்னர் பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவின் பெருமைக்குரிய இயக்குனராக மாறியது மட்டுமல்லாமல் உலக சினிமாவில் இந்தியாவின் தரத்தை உயர்த்தினார். இவர் அடுத்து இயக்க போகும் படம் RRR என்கிற நிலையில் மஹாபாரதம்தான் இவர் இயக்க போகும் படம் என்று பேச்சு எழுந்தது. இதற்கு பதில் அளித்த ராஜமௌலி மஹாபாரதம் இயக்குவது தனது கனவு என்றும் அப்படி அந்த படம் இயக்கினால் 10 பாகங்களாக வெளிவரும் என்றும் அதுவே தனது இறுதிப் படமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். உயரிய எண்ணங்களோடு வாழும் ஒருவரால் மட்டுமே தனது முடிவு குறித்த தெளிவோடு வாழ முடியும் என்பதற்கு இயக்குனர் ராஜமௌலி ஒரு உதாரணம்.

நாளைக்கே திருமணம் – த்ரிஷா

ADVERTISEMENT

தன்னைப் பற்றிய வதந்திகளை புறக்கணித்து வாழும் த்ரிஷாவின் தைர்யம் அசாதாரணமானது. நடிகர் ராணாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட போதும் பதில் தராமல் மெளனமாக இருந்தார். தயாரிப்பாளர் வருண் உடனான நிச்சயதார்த்தம் முடிவடைந்த போதும் ஏன் அந்த முடிவெடுத்தார் என்பதை குறிப்பிடாமல் இருந்தார். இப்படிப்பட்ட த்ரிஷாதான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இன்னமும் சரியான நபரை தான் சந்திக்கவில்லை என்றும் அதுமட்டும் நடந்து விட்டால் நாளைக்கே திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி ரசிகர்கள் மனதில் கிலி ஏற்படுத்தி இருக்கிறார்.

முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி எனும் ஒரே படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா . பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் அதிக அளவில் விரும்பும் ஆண்கள் பட்டியலில் பிரபாஸ் மற்றும் மஹேஷ்பாபுவை பின்னுக்குத் தள்ளி விஜய் தேவரகொண்டா முதலிடம் வகிக்கிறார். 2017ஆம் ஆண்டில் இதே பத்திரிக்கையின் கருத்து கணிப்பில் இரண்டாவது இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா அதற்கு அடுத்த ஆண்டிலேயே முதலிடத்தை பிடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புவோம்.

ADVERTISEMENT

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் இன்ஸ்டாக்ராம்

 —-

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

17 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT