அப்போ அந்த' பொண்ணுங்க கதி - ட்ரோலில் சிக்கிய ஆர்யா ! வைத்து செய்த நெட்டிசன்கள் !

அப்போ அந்த' பொண்ணுங்க கதி - ட்ரோலில் சிக்கிய ஆர்யா ! வைத்து செய்த நெட்டிசன்கள் !

நடிகர் ஆர்யா அதே மதத்தை சேர்ந்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். கஜினி முகம்மது படத்தில் இருந்து காதலிக்க ஆரம்பித்த ஆர்யா சாயிஷா காதல் கடந்த மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதி இஸ்லாம் மதப்படி திருமணத்தில் முடிந்தது..      


அதே கையோடு ஆர்யா போட்ட சில டிவீட்கள் தான் இப்போது ட்விட்டரில் ட்ரோல் ( troll ) செய்யப்பட்டு வலம் வருகின்றன.


சினிமாக்களில் காதலிக்க தெரியாத நபர் போல நடிக்கும் ஆர்யாவிற்கு நண்பர்கள் உதவுவார்கள். இந்த ட்ரோல்களுக்கு யார் பதில் சொல்வார்கள் என தெரியவில்லை.


திருமணம் முடிந்து போட்ட முதல் டீவீட்டிலேயே நெட்டிசன்கள் ஆர்யாவை கலாய்க்க தொடங்கினர்.                      


 ஒரு பிரபல தமிழ் சேனல் சார்பாக அதன் பிராண்ட் அம்பாசடர் ஆன ஆர்யா 16 பெண்களில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக வாக்களித்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


அதில் 16 பெண்களும் ஆர்யாவை ஏன் நேசிக்கிறார்கள் என்பதையும் எவ்வளவு தூரம் இவர்கள் ஆர்யாவை நேசிக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.                     arya1


arya6
                                                                                                              


  


 


arya4


arya5


 


arya3


 


arya2arya1மனிதர்களை குரங்காட்டிகளாக்கும் சில ரியாலிட்டி ஷோக்கள் போலவே இதிலும் அந்த பெண்களை அழ வைத்து விரும்ப வைத்து பின்னர் எலிமினேஷனில் விலக வைத்து என உளவியல் ரீதியாக பாதிக்கப்பட வைத்த எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் அந்த நிகழ்ச்சி குறித்துதான் நெட்டிசன் நண்பர்கள் ஆர்யாவை ட்ரோலில் தெறிக்க விட்டுள்ளனர்.


16 பெண்களில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்து பின்னர் இறுதியாக மூவரை முடிவு செய்து அவர்கள் வீட்டிற்கே சென்று பெண் பார்க்கும் படலம் நடத்தி பின்னர் திருமணத்திற்கான உடைகள் வரை தேர்ந்தெடுக்க வைத்து இறுதியாக சீதாலக்ஷ்மியை அவர் திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆர்யா தான் இதில் யாரையும் திருமணம் செய்ய போவதில்லை என்று அறிவித்தார்.யாரைத் திருமணம் செய்தாலும் மற்றவர் மனம் பாதிக்கப்படும் என்றொரு வெற்றுக் காரணத்தையும் கூறினார்.  இது அந்த நிகழ்ச்சியில் கையெழுத்திடும்போதே ஆர்யாவிற்கு தெரியாதா என்ன? அதன்பின்னர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த ரசிகர்களும் ஏமாந்து போக கொஞ்ச நாள் ஆர்யா அமைதியானார்.


இப்போது இந்த திடீர் திருமண நிகழ்வால் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை அனைவருக்கும் நினைவு வர ஆர்யாவை பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்து விட்டனர்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.