டிசி காமிக்சின் அற்புத படைப்புகளில் ஒன்றுதான் பேட்மேன். இது அனைவராலும் விரும்பப்பட்டது. இதற்கான ரசிகர்கள் ஏராளமாக இருப்பதால் இந்த பேட்மேன் பல எண்ணிக்கையில் வரிசை படங்களாக வெளிவந்தன.
இதில் கிறிஸ்டோபர் நோலனால் எடுக்கப்பட்ட பேட்மேன் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதன்பின் அடுத்த பேட்மேன் படம் வருகின்ற 2021ம் தேதி வெளியாகும் என்று இதன் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.முந்தைய பேட்மேன் படங்களில் நடித்த பென் அப்லெக் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்திருந்தார்.
ஆகவே அடுத்த பேட்மேன் ஆக யார் இருக்கலாம் என்கிற இன்ஸ்டாகிராம் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் முதல் பெயர் நிக் இரண்டாம் பெயர் ஜோனஸ் என்று நிக் ஜோனாஸ் தான் அந்தப் படத்தில் நடிக்க விரும்புவதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.இன்னமும் இதற்கான நடிக நடிகையர் பட்டியல் முழுமையாக முடியவில்லை என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறது பேட்மேன் ரசிகர் பட்டாளம்.
சினிமாவில் தன்னை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தனது குருவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாராவது மறுப்பார்களா? ஜோதிகா தன்னை அறிமுகப்படுத்திய எஸ் ஜே சூர்யாவோடு நடிக்க மறுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. உயர்ந்த மனிதன் எனும் படத்தில் அமிதாப் பச்சனும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதே படத்தில் எஸ் ஜே சூர்யாவோடு நடிக்க ஜோதிகாவை அணுகியபோதுதான் அவர் மறுத்திருக்கிறார். பேச்சுவார்த்தை தொடர்கிறது.
நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த செல்வராகவன் சூர்யா ரசிகர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாட்டம்தான். காரணம் என்ஜிகே சினிமா டீசரை அன்றைய தினம் வெளியிடப் போவதாக அக்குழு அறிவித்திருக்கிறது. இந்த திரைப்படம் கோடைவிடுமுறையில் திரையில் காணும்படி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டீசரை பல தியேட்டர்களிலும் வெளியிடப் போவதாகக் குழு அறிவித்துள்ளது.
இந்தி சினிமா ஏக் லட்கி கோ தேகா தொ ஏசா லகா படத்தில் சோனம் கபூருடன் லெஸ்பியனாக நடித்துள்ளவர் நம் ரெஜினா. இப்படி நடிப்பதற்கென தனி தைரியம் வேண்டும். அது ரெஜினா கஸாண்ட்ராவிடம் இருப்பதாக படம் வெளியானபிறகு பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ரெஜினா நம்பிக்கையோடு இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் இவர் திருமணம் நடைபெறுகிறது. கோவையை சேர்ந்த மருத்துவ நிறுவன தொழிலதிபர் விசாகனை மணக்கிறார். இவருக்கும் இது மறு திருமணம் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் தெரிய வருகிறது.
மணிகர்ணிகா படத்தை இயக்கி நடித்திருப்பவர் கங்கணா ரணாவத். படத்தை பாதியில் விட்டு விட்டு கிரிஷ் நகர்ந்து விட அத்தனை முக்கிய முடிவுகளையும் தானே எடுத்து படத்தை இயக்கியதாக கங்கனா கூறியிருக்கிறார். மேலும் இதே குழுவோடு கிரிஷ் ஒரு படம் இயக்கி காண்பிக்கட்டும் என்று சவாலும் விடுத்திருக்கிறார். நிச்சயம் தனது அடுத்த சினிமா படைப்பு இதனை விடவும் சிறந்ததாக இருக்கும் என்றும் ஆணித்தரமாக பதில் கூறியிருக்கிறார்.
அஜித் நடிக்கும் அடுத்த படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் டாப்ஸி நடிக்க நஸ்ரியாவை முதலில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரம் தனது இமேஜை டேமேஜ் செய்யும் என்பதால் நஸ்ரியா அதில் நடிக்க மறுத்து விட்டார். இப்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனது முதல் படத்தின் தலைப்பிலேயே அடுத்த ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. பெண்களின் கனவு காதலனாகி இருக்கும் விஜய் நடிக்கும் அடுத்த தமிழ் படத்திற்கு அர்ஜுன் ரெட்டி எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தனது திறமையை நம்புவதால் வேறு எதை பற்றியும் கவலைப்படாத விஜய் தேவரகொண்டா இதற்கு சம்மதித்திருக்கிறார். இதற்கான பட பூஜை பிரம்மாண்ட அளவில் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறதாம்.துவாரகா எனும் தெலுங்கு படத்தின் ரிமேக் தான் இந்த தமிழ் அர்ஜுன் ரெட்டி.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.