அழகு என்றால் நினைவில் முதலில் வருபவர்கள் சினிமா நடிகைகள் தான். மாடல்கள் கூட அதற்கப்புறம் தான்.
உடலை நல்ல வடிவத்துடன் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இவர்கள் பின்பற்றும் முறை மிக சரியான அதே சமயம் ஆரோக்கியமான முறையாக இருக்கும்.
எனவே சில சினிமா நடிகைகள் தங்கள் உடல் எடை குறைப்பிற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பதை நீங்களும் தெரிந்து கொண்டால் உங்கள் எடை குறைப்பை நீங்கள் சிக்கல் இல்லாமல் செய்யலாம்.
பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையும் முதல் ஜீரோ அழகை கொண்டு வந்தவருமான கரீனா கபூர் யோகா வில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். யோகாவில் சூர்யநமஸ்காரம் மட்டும் தினமும் 100 முறை செய்வாராம்.
சூர்யநமஸ்காரம் உடலை சமநிலையில் வைக்கிறது. உடலின் ஒட்டு மொத்த சூட்சும நாடிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால் உடல் மனம் ஆன்மா என மூன்றுமே அற்புதமாக மாறும்.
வேறு சில யோகமுறைகள் உடலை கட்டுடல் போல பராமரிக்க , எடை குறைக்க , செரிமான பகுதிகளை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மே்படுத்தும் வகையில் வடிமைக்க பட்டிருக்கிறது.
இளைஞர்களின் கனவு கன்னிகளான மல்லிகா ஷெராவத் மற்றும் லாரா தத்தா போன்றவர்கள் யோகாவை பரிந்துரை செய்கின்றனர்.
இவரை போலவே ஷில்பா ஷெட்டி மற்றும் தீபிகா படுகோனும் யோகா மூலம் உடலை கட்டுடலாக வைத்திருக்கின்றனர்.
யோகா உடன் உடல் எடை குறைக்க இந்த நடிகைகள் ஒரு ரகசிய பானம் அருந்துகிறார்கள்.
அது மிக விலையுயர்ந்த வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானம் என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையில் அப்படி எதுவும் இல்லை நம்மூர் இளநீர் தான் அந்த ரகசிய பானம் என்கிறார்கள். இளநீரில் அத்தனை மகதுவங்கள் இருகின்றனவாம்.
அதிகமான மினரல் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய இளநீர் உடல் எடை குறைய பெரிய உதவி செய்கிறது. தினமும் அருந்தி வந்தால் விரைவான எடை குறைப்பு சாத்தியமாகிறது.
அதுமட்டும் இல்லாமல் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நண்பனாக இருக்கிறதாம். கரீனா மற்றும் சோனம் கபூர் இருவருமே இளநீரில் இருந்துதான் நாளை தொடங்குகிறார்கள் என்கிறார்கள்.
தீபிகா படுகோனே வோ ஒரு அடி மேலே போய் இளநீரை ஒரு மேஜிக் வாட்டர் என்று குறிப்பிடுகிறார்.
கார்டியோ பயிற்சிகள் உடல் எடை குறைக்க மிக அற்புத மற்றும் ஆரோக்கியமான வகையில் உதவுகிறது. காரடியோ பயிற்சி மூலம் உடல் கொழுப்புகள் விரைவாக கரைகின்றன. பிரியங்கா சோப்ரா ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற நடிகைகள் கார்டியோவை செய்கின்றனர்.
இது தவிர பைலேட்ஸ் எனும் பயிற்சி மூலமும் உடல் எடை அற்புதமாக குறைக்க முடியும். சோனம் கபூரின் விருப்ப பயிற்சி இதுதான். பந்து அல்லது வளையம் போன்றவற்றை பயன்படுத்தி பயிற்சி செய்யும் முறைதான் பைலேட்ஸ் முறை.
உணவு என்று பார்த்தால் அழகையும் வடிவத்தையும் பத்திரமாக பாதுகாக்க குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்கிறார்கள். சமச்சீர் உணவை எடுத்துக் கொள்கிறார்கள். ஆலியா ஜங்க் உணவுகளை தவிர்ப்பது வழக்கமாம்.
அற்புதமான ஆப்ஸ் கொண்ட பிபாஷா மீன் உணவுகளை புரதத்திற்காக சாப்பிடுவாராம். சோனம் கபூர் முட்டை பிரியராம். மற்றபடி வழக்கம்போல பழங்கள் சாலட் போன்ற விஷயங்கள் எல்லா செல்லுலாயிட் celluloid) பெண்களுக்கும் பொதுவானதாம்.
இந்த முறைகளை நீங்களும் பின்பற்றினால் வீட்டில் எப்போதும் டூயட் தான்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி! மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.