சென்னை திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடல் கடந்த 19ம் தேதி அன்று திடீரென வைரலானது. காரணம் அங்கு இரவு நேரத்தில் கடல் திடீரென நைட் லாம்ப் போட்டது போன்ற நீல வண்ணத்தில் மிளிர்ந்தது.
விடுமுறை என்பதால் மக்கள் மாலையில் இருந்து அங்கே குழுமி இருந்தனர். இரவு ஆரம்பித்ததும் கடல் ஒரு அழகிய நீல வண்ணத்தில் மின்னியது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். உடனடியாக வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் இது பரவவே மக்கள் அங்கே வேகமாக படையெடுத்தனர்.
சாண்டிக்கு பிறந்த பொண்ணு சும்மா நிக்குமா! நடனமாடும் மழலை தேவதை லாலா !
டாய்னப்லெட்ஜெஸ் என்கிற ஒரு விதமான கடல் பாசி தான் இந்த நீல நிறத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. தனக்கு ஆபத்து என்று வரும்போது இந்த கடல்பாசி ஒருவித நீல வண்ணத்தை உமிழுமாம். அதனால் இதனை உண்ண வந்த உயிரினங்கள் திசை திருப்பப்படுகிறது.
சிறு மீன்கள் இந்தப் பாசி வகையை உண்ண வரும்போது இந்த ஒளியினை அது உமிழ்கிறது. அதனால் ஈர்க்கப்பட்ட பெரு மீன்கள் அங்கே வரும் சமயம் சிறு மீன்கள் பெரு மீன்களுக்கு இரையாகின்றன. கடல் பாசிகள் தப்பிக்கின்றன.
எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!
Bioluminescence observed in Chennai, ECR beach.. pic.twitter.com/dBPjNMrMLw
— Pramod Madhav (@madhavpramod1) August 19, 2019
இப்படி ஒரு காரணம் கூறப்பட்டாலும் அண்மையில் பெய்த மழையால் கடலில் கழிவுகள் சேர்ந்திருக்கலாம் என்றும் அதில் இருந்த நைட்ரஜன் பொருள்களால் கடல் இந்த நிறத்தை உமிழ வேண்டி வந்திருக்கலாம் என்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையமான NCCR விஞ்ஞானி பிரவாக் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
கடந்த வருடம் மும்பை beachல் இதே போல நடந்ததாகவும் சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் குழு இதனை நேரில் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.