logo
ADVERTISEMENT
home / Health
என்றும் இளமையான தோற்றம் வேண்டுமா ! இந்த ஒரு மூலிகை உங்களுக்கு ஆயிரம் பலன் தரும் !

என்றும் இளமையான தோற்றம் வேண்டுமா ! இந்த ஒரு மூலிகை உங்களுக்கு ஆயிரம் பலன் தரும் !

இயற்கை இந்த பூமியை படைக்க திட்டமிடும் போதே இதில் வாழும் உயிர்களுக்கு உணவையும் திட்டமிட்டே படைத்தது. முதலில் உயிர்களுக்கு தேவையான உணவுகளை படைத்த பிரபஞ்சம் அதன் பின்னரே உயிர்களை படைத்தது. இதில் இருந்து நமது திட்டமிடல்களை நாமும் திருத்தி கொள்ள முடியும்.                                                                          

மனித உயிருக்கு தேவையான உணவுகளை மூலிகைகள் என்று அழைக்கிறோம். பழங்காலத்தில் சித்தர்கள் எல்லோரும் மூலிகைகள் மூலம்தான் உயிர் வாழ்ந்தனர். அவர்கள் கண்டுபிடித்த மூலிகைகள் உணவு மட்டுமே அல்ல மனித உயிர்களை மேம்படுத்தும் மருந்து என்றும் கண்டறிந்த அவர்கள் அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினர்.

இலவசமாக கிடைக்கும் எதையும் நம் மக்கள்    பயன்படுத்தாமலே தூக்கி எறிவது வழக்கம். ஆகவே சில ரகசிய குறிப்புகள் கொடுத்து இந்த நோய்க்கு இந்த மூலிகை மருந்து என்பதை பாடல்கள் வடிவில் கூறினர். அப்படி பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டதுதான் தண்ணீர் விட்டான் கொடி. ஆங்கிலத்தில் இதனை அஸ்பாரகஸ் (Asparagus) என்று அழைக்கின்றனர்.                                                                                                                                                                                                              மழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. உலக சுற்று சூழல் தினம்! இதில் நமது பொறுப்புகள் என்னென்ன..

ADVERTISEMENT

pixabay, shutterstock, pexels

தண்ணீர் விட்டான் கொடி (Asparagus)

தண்ணீர் விட்டான் என தமிழில் அழைக்கப்படும் இந்த தாவர வகை ஆசியா , ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிறது. மித வெப்ப மண்டலத்தை உறுதுணையாக கொண்டவை. ஆனாலும் இப்போது உலகம் எங்கிலும் வளர்க்கப்படுகிறது.                                                      

கொடி வகையை சார்ந்த இந்த செடி மெல்லிய அதே சமயம் கெட்டியான தண்டுகளை உடையது. இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதற்கு சதாவேரி , நீலி செடி, அம்மைக்கொடி போன்ற பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.                                                      

ADVERTISEMENT

 

வரலாறு

எகிப்திய கல்லறை சிற்பங்களை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்த தாவரம் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து வருகிறது. இந்த மூலிகையின் சுவை கசப்பு. ஜீரண கோளாறுகளை சரி செய்யும். தூக்கத்தை தூண்டும். இந்திய மருத்துவத்தில் இதனை உடல் குளிர்ச்சிக்காக உபயோகம் செய்கின்றனர். பால் உணர்வை தூண்டி உடல் வலுவை ஏற்றுகிறது. தசை சுருங்குவதனை நிறுத்துகிறது.                                                                                                       

ADVERTISEMENT

வகைகள்

இந்த மூலிகை செடி தட்பவெப்பத்திற்கேற்ப நான்கு வகைகளில் வெளியாகிறது.                                                                         

 • பச்சை நிற தண்ணீர் விட்டான்
 • வெண்மை நிற தண்ணீர் விட்டான்
 • பர்பிள் நிற தண்ணீர் விட்டான்
 • காட்டு தண்ணீர் விட்டான்

 

 

ADVERTISEMENT

ஊட்டச்சத்து விபரங்கள்

pixabay,pexels,shutterstock

ஆரோக்கியத்திற்கான பயன்கள்

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளதால் தண்ணீர்விட்டான் கொடி மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். சில முக்கியமான நன்மைகளை இங்கே பார்க்கலாம்.                                        

ADVERTISEMENT

வயது முதிர்வை தடுக்கிறது

இந்த தாவரத்தில் இருக்கும் க்ளூடோதியோன் எனும் உட்பொருள் கிளைசின் , அமினோ அமிலம் மற்றும் க்ளுமாட்டிக் அமிலம்-சிஸ்டின் போன்ற மாலிக்யூல்களை கொண்டது. இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது உடலில் ஆக்சிடேஷன் குறைதல் நடைபெறுகிறது. இதனால் உடல் வயதாவது தடுக்கப்படுகிறது. அதனை போலவே இதில் உள்ள க்ளுடல்தியோன் உடலில் உள்ள பிரீ ரேடிகல் களை எதிர்க்கிறது. அதன் மூலமும் உடல் வயதாவது தடுக்கப்படுகிறது.                

புற்று நோயை எதிர்க்கிறது

ஆக்சிடேஷன் மற்றும் நீண்ட நாள் செல்களில் ஏற்படும் உள்வீக்கங்கள் காரணமாக பலவிதமான புற்று நோய்கள் ஏற்படுகின்றன. தண்ணீர் விட்டான் கொடி அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி இன்பிளேமேட்டரி கொண்டிருப்பதால் புற்று நோய்களை எதிர்க்கிறது. முக்கியமாக நுரையீரல், குடல், சிறுநீரகம், மார்பகம், கருப்பை மற்றும் ப்ராஸ்டேட் ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இதயத்திற்கு நன்மை

தண்ணீர் விட்டான் கொடியில் உள்ள பி வைட்டமின் போலேட்கள் இதய நோய் வராமல் காக்கிறது. மெத்திலேஷன் எனப்படும் சுழற்சிக்கு போலேட்கள் முக்கிய பங்கை தருகின்றன. நமது மரபணுக்களை படியெடுப்பதில் இது மிக முக்கியமான ஒன்றாகும். உடலில் உருவாகும் ஹோமோசிஸ்டின் அமினோ அமிலத்தை இந்த தாவரம் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் இதய நோய்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது

தண்ணீர் விட்டானில் உள்ள போலேட், கரு உருவாவதில் இருந்து வளர்வது வரைக்கும் உதவி செய்கிறது. குறைபிரசவங்களை தடுத்து குழந்தை முழுமையான வளர்ச்சியை அடைந்த பின்னரே பிரசவம் நடக்க பேருதவி செய்கிறது. பிறவி குறைபாடுகளை நீக்குகிறது.

ADVERTISEMENT

தண்ணீர் விட்டான் தாவரத்தில் இருந்து பல வகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் சதாவேரிகிரிதா,பாலகிரிதா, நாராயண தைலம், விஷ்ணு தைலம்,பிரமேக மிகிர தைலம் போன்றவை முக்கியமானவை.

நச்சுக்களை நீக்குகிறது

இதில் இருக்கும் அதிகமான பொட்டாஷிய சத்து வயிற்றில் உள்ள ஊளை சதைகளை குறைக்கிறது. வயிற்றில் எவ்வளவு தீய விளைவுகளை கொடுக்கும் பொருள்கள் இருந்தாலும் இதில் உள்ள சிறப்பு மூலப்பொருள் அதனை அழகாக கரைத்து எடுக்கிறது. கொழுப்பு சத்தே இல்லாத அற்புதமான தாவர உணவு இந்த தண்ணீர் விட்டான் கொடி.

 

முகத்தை நிமிடங்களில் முழு நிலவு போல பிரகாசிக்க வைக்க சிம்பிள் குறிப்புகள் !

ADVERTISEMENT

pixabay,pexels,shutterstock

டயட் மற்றும் ஜீரணம்

தண்ணீர் விட்டான் தாவரம் வயிற்றில் உள்ள கெடுதல் விளைவிக்கும் பேக்டீரியாக்களை அழிப்பதால் குடல் பகுதி சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும் இருக்கிறது. சிறுநீரக தொற்றுக்களை தடுப்பதில் உதவி செய்கிறது. மலச்சிக்கலை நீக்கி ஜீரணமண்டலத்தை மேம்படுத்துகிறது. உடல் இளைப்பதற்கு இந்த தாவரம் அற்புதமாக உதவி செய்கிறது.

ஆஸ்ட்ரியோ போரோஸிஸ் மற்றும் ஆஸ்ட்ரியோ ஆர்த்ரைடிஸ் குணமாகும்

தண்ணீர் விட்டான் தாவரத்தில் உள்ள வைட்டமின் கே , எலும்புகள் தேய்மானம் மூலம் ஏற்படும் மூட்டு வலிகளை போக்க உதவி செய்கிறது. சரியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் கே தேவைப்படுகிறது. ஆஸ்டியோகால்சின் எனும் மூலப்பொருள் எலும்புகளின் உறுதிக்கு உதவுகின்றன. அவை இந்த தாவரத்தில் அதிகம் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

பயன்கள்

ஏற்கனவே குறிப்பிட்டபடி தண்ணீர்விட்டான் செடி உடலுக்கு பலவகையான நன்மைகளை வழங்குகிறது

வீட்டு உபயோகம்

 • இதில் உள்ள இளம் தண்டுகள் மூலம் பலவகையான பசி தூண்டும் உணவுகளை சமைக்க முடியும். பக்க உணவாகவும் சமைக்க முடியும்.
   
 • கோழிக்கறி, மாட்டிறைச்சி, மீன் போன்ற அசைவ பொருள்களில் இந்த தாவரத்தை சேர்த்து கொண்டு சமைக்கலாம்.

 

 • இத்தாவரத்தின் கூர் நுனிகளை நன்கு வெட்டி சூப்போ ஸ்ட்யூவோ தயாரித்து சாப்பிட முடியும்.
   
 • இதில் உள்ள பிளேவர்களை குளிர்ந்த பானத்துடன் இணைத்து கொள்ளலாம். குளிர்ந்த சாலட்டுகளில் பயன்படுத்தலாம்.
          
 • ஆம்லெட்டுகள் செய்யும் போது இந்த தாவரத்தை சேர்க்கையில் அழகான நிறம் மற்றும் மணம் இரண்டும் கிடைக்கும்.

ADVERTISEMENT

pixabay,pexels,shutterstock

மருத்துவ பயன்பாடு

 • இந்த தாவரத்தின் இலைகளை அரைத்து அந்த சாற்றை தடவினால் சரும கொப்புளங்கள் போன்றவை குணமாகும். அம்மை நோய்க்கு அருமருந்தாகும். தீக்காயங்கள் குணமாகும்.

 • இந்த தாவரத்தின் வேரை அரைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் தெளிவாகவும் முகம் பொலிவாகவும் மாறும்.
   
 • தண்ணீர்விட்டான் தாவரம் மன அழுத்தத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்.
   
 • இந்த தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் மருத்துவ எண்ணெய் ஸியாடிகா வலிகள், கீழ்முதுகு தண்டு பிரச்னைகள், வீக்கங்கள் போன்றவற்றை குணமாக்குகிறது. பக்கவாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது.
   
 • இதன் வேர்கள், புற்று நோய் கட்டிகள், நரம்பு மண்டல குறைபாடுகள், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சிறுநீர் சூடாகுதல் போன்ற உடல் நோய்களை குணப்படுத்துகிறது. உடல் பலவீனம் சோம்பல் ஆகியவற்றை சரி செய்கிறது.
   
 • ஆயுர்வேத மருந்துகளில் இந்த தண்ணீர்விட்டான் கொடி அற்புதமாக நிரம்பி இருக்கிறது.
   
 • இதனை சமைத்து சாப்பிடுவதன் மூலம் குடல் கழிவுகள் சிரமம் இல்லாமல் வெளியேறுகின்றன.
   
 • அதிகமான மது அருந்தியதால் ஏற்படும் காலை நேர மயக்கத்தை போக்க இந்த தாவரத்தின் தண்டு மற்றும் வேர்கள் உதவி செய்கின்றன.

pixabay,pexels,shutterstock

மற்ற பயன்கள்

பெரும்பாலும் இவை தக்காளி செடியுடன் ஊடு பயிராக இருக்கிறது. இதனால் தக்காளியை தாக்கும் கிருமிகளை எதிர்க்கிறது. ஆகவே தக்காளி பழங்கள் இந்த செடியின் பாதி பயனை கொண்டுள்ளன.

ADVERTISEMENT

பக்க விளைவுகள்

தண்ணீர் விட்டான் தாவரத்தை சாப்பிடுவதால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால் அளவுக்கதிகமாக அமிர்தத்தையே சாப்பிட்டாலும் அது நஞ்சாகலாம். அந்த வகையில் சில பக்கவிளைவுகள் இதோ

 • அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்
 • சிறுநீரில் ஒரு வித வாடை வரும்
 • வாயு தொல்லை ஏற்படும்

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகள் இந்த தாவரத்தை சாப்பிடுவது குழந்தை வளர்ச்சிக்கும் குழந்தை குறையின்றி பிறக்கவும் உதவி செய்கிறது. ஆனாலும் அதிக அளவு சாப்பிட கூடாது. உங்கள் மருத்துவரை ஆலோசித்து அதன்பின்னர் அந்த அளவுகளில் சாப்பிடுங்கள்.

ADVERTISEMENT

pixabay,pexels,shutterstock

எங்கே கிடைக்கும்

புதிய இளம் தண்டுகள் சந்தைகளில் கிடைக்கும். காய்கறி கடைகளில் இருக்கும். விவசாயிகள் வசந்த காலங்களில் இதனை விற்பனை செய்வார்கள். ஊறுகாய்கள் மற்றும் கேன் தண்டுகள் ஆகியவையும் விற்பனைக்கு உண்டு.

சுவாரஸ்ய உண்மைகள்

இந்த தாவரத்தின் பச்சை நிற வகை அதிக பயன்பாட்டுக்குள் இருக்கிறது. கலிஃபோர்னியாவில் இந்த தாவரம் விளையும் பகுதிகளில் விதைக்கும் போது அதனை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர்.

அதைப்போலவே மிச்சிகன், இவாசாம், போன்ற பல ஜெர்மன் நாடுகளில் இதனை விதைக்கும் சமயங்களில் பெரிய விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !இன்ஸ்டன்ட் முதல் எஸ்ப்ரெஸ்ஸோ வரை – உங்களுக்கு பிடித்த காஃபிய சொல்லுங்க ! உங்களப்பத்தி நாங்க சொல்றோம்!

13 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT