logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
வள்ளியே..சர்க்கரை வள்ளியே ! இந்த கிழங்கில் இத்தனை நன்மைகளா ! படித்தால் இதை சாப்பிடாம இருக்க முடியாது ! – (Benefits And Side Effects of Sweet Potato In Tamil)

வள்ளியே..சர்க்கரை வள்ளியே ! இந்த கிழங்கில் இத்தனை நன்மைகளா ! படித்தால் இதை சாப்பிடாம இருக்க முடியாது ! – (Benefits And Side Effects of Sweet Potato In Tamil)

 நாம் அதிகம் அறிந்திராத சர்க்கரை வள்ளிக்கிழங்கின்(sweet potato) மறுப்பக்கம் என்னவென்றால் உலகில் உள்ள முக்கிய உணவுகளில் 7வது முக்கிய உணவாக இருப்பது சர்க்கரை வள்ளி கிழங்குதான். பூமிக்கு அடியில் வேரில் முளைத்து வரும் இந்த கிழங்கு பெரிய வகை கிழங்குகளில் ஒன்று.

தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப சர்க்கரை வள்ளி கிழங்கு ( sweet potato ) தனது நிறத்தை மாற்றி அமைத்து கொள்ளும். வெள்ளை மஞ்சள் சிவப்பு மற்றும் அடர்நீலம் போன்ற நிறங்கள் கொண்டிருக்கும். இதில் இந்தியாவில் விளைவது சிவப்பு நிற சர்க்கரை வள்ளி கிழங்குகள்.

உருளை கிழங்கு போல இல்லாமல் சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரம்தான் சர்க்கரை வள்ளி கிழங்கு. மார்னிங் க்ளோரி வகை தாவரமான இது பார்க்கவும் அப்படியே இருக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மட்டுமல்லாமல் அதன் இலைகளும் அதிக சத்துக்கள் கொண்டவை. இலைகளில் விட்டமின் கே, சி, இரும்பு , பொட்டாஷியம் சோடியம் மற்றும் போரேட்கள் உள்ளன.

ADVERTISEMENT

சிறப்பு குணங்கள்

சரித்திரம்

ஆரோக்கியமான உடலுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு எப்படி உதவுகிறது

நன்மைகள்

ADVERTISEMENT

பக்க விளைவுகள்

 Benefits and Side effects of sweetpotato in tamil

சர்க்கரை வள்ளி கிழங்கின் சிறப்பு குணங்கள் (Special Qualities Of Sweet Potato)

இது கிழங்கு வகையை சேர்ந்தது என்றாலும் குறைவான கொழுப்புகளை உடையது என்பதால் இது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வழக்கமான கிழங்குகளில் மாவு சத்து மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து மற்றும் மாவு சத்து இரண்டுமே உள்ளது. அதனால் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுக்கும் வகையில் இதன் பண்புகள் உள்ளன. இதில் உள்ள பீட்டா கெரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரோக்கியமான உடலுக்கு உறுதி அளிக்கின்றன.

இதையும் படியுங்கள் ஜாதிக்காய் என்றால் என்ன

ADVERTISEMENT

நமது உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்க்காமல் போனால் நமக்குத்தான் நஷ்டமே தவிர சர்க்கரைவள்ளி கிழங்கிற்கு எதுவும் ஏற்பட போவதில்லை. சமைக்கும் சமயத்தில் இதில் இருக்கும் ஒரு என்சைம் மாவு சத்துக்களை சர்க்கரையாக மாற்றி விடுகிறது.

மற்ற காய்கறிகளை விட மூன்று மடங்கு அதிகமான சக்தி வாய்ந்தது சர்க்கரை வள்ளி கிழங்கு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் மற்ற உணவுகள் விட்டு சென்ற நச்சு பொருள்களை இதில் உள்ள புரத சத்து அடியோடு நீக்க உதவுகிறது.

இதனை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். வேக வைத்து, பொரித்து வறுத்து என பலவிதங்களில் சமையலை எளிமையாக்குகிறது சர்க்கரை வள்ளி கிழங்கு. பெரும்பாலும் தமிழ் பெண்கள் இதனை வேக வைத்து மட்டுமே சாப்பிடுகிறார்கள்

Benefits and Side effects of sweetpotato in tamil

ADVERTISEMENT

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சரித்திரம் (History Of Sweet Potato)

சர்க்கரை வள்ளி கிழங்கு அமெரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்தது. ஆரம்பத்தில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இந்த செடி பயிரிடப்பட்டது.பின்னர் மெக்சிகோவிலும் பரவியது. மெக்சிகோ தீவுகளில் இதன் பெயர் ஆக்சி என்பதாகும்.

கொலம்பஸ் தனது கடல் பயணத்தின் முடிவில் ஸ்பெயினிற்கு கொண்டு வந்த கிழங்குதான் சர்க்கரை வள்ளி கிழங்கு. இதன் சுவை ஸ்பெயினிற்கு பிடித்து போகவே இதனை பயிரிட ஆரம்பித்தது. அதன்பின்னர் ஸ்பெயினில் இருந்து ஆசியாவிற்கு மாலுமிகள் கொண்டு வந்து சேர்த்தனர்.

16ம் நூற்றாண்டில் இது இந்தியாவிற்கு வந்தடைந்தது.

ஆரோக்கியமான உடலுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு எப்படி உதவுகிறது (How Sweet Potato Helps To Keep You Have A Healthy Body)

இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.

ADVERTISEMENT

இதன் தோலை நீக்காமல் சாப்பிடும்போது விட்டமின் ஏ சத்து முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.

Also Read: ஜாதிக்காயினால் கிடைக்கும் நற்பலன்கள் (Benefits Of Nutmeg)

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து (High Nutritious Value)

சர்க்கரை வள்ளி கிழங்கு மற்ற கிழங்குகளை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால் அதிகமான அளவில் ஊட்ட சத்துக்கள் கொண்டுள்ளது. சிலர் மலிவான விலையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்குவது உடல்நல கேடு என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சேகரித்து வைத்துள்ள ஊட்டசத்துக்கள் (Rich In Nutrients)

ஒரு சர்க்கரை கிழங்கு சாப்பிடுவதன் மூலம் ஒருநாளைக்கு நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களில் வைட்டமின் ஏ சத்து நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது. இது தவிர பி மற்றும் சி விட்டமின்கள் கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகியிருக்கும் ஓட்ஸ் உணவில் உள்ள அதே அளவு நார்ச்சத்து சர்க்கரை வள்ளி கிழங்கில் இருக்கிறது. நம் உடலில் உடலில் உள்ள நச்சுத்தன்மை (toxins) நீக்கி விடும் அற்புத மருந்து சர்க்கரை வள்ளி கிழங்கு. இது தவிர இரும்பு சத்து மற்றும் பொட்டாசியமும் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ளதால் இது உடலுக்கு நண்பன் என்றும் கூறலாம்.

ADVERTISEMENT

Benefits and Side effects of sweetpotato in tamil

நோய்களை குணமாக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு (Sweet Potato For Healing Diseases – Benefits Of Sweet Potato)

கொலஸ்ட்ரால் இல்லாத ஒரே கிழங்கு (No Cholesterol)

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மற்ற கிழங்குகளை போல கொலஸ்டரால் இல்லை, அதனால் அனைவரும் பயம் இன்றி சாப்பிடலாம். தவிர நார்ச்சத்து இருப்பதால் ஒன்று எடுத்துக் கொண்டாலும் போதுமானதாக இருக்கும்.

கரு உருவாக உதவும் கிழங்கு (Good For Pregnancy)

சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறப்பு குறை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இதில் உள்ள போலேட் எனும் அபூர்வ குணம் கரு உருவாக காரணம் ஆகிறது. இது மருத்துவ அதிசய கிழங்கு என்றால் மிகையில்லை.

உள்ளுறுப்பு வீக்கங்களை குணப்படுத்துகிறது (Cures Internal Organs)

இதில் உள்ள வைட்டமின் பி, சி, மற்றும் பொட்டாஷியம் , நார்ச்சத்துக்கள் போன்றவை உடலுக்குள் ஏற்படும் வீக்கங்களுக்கு அருமருந்தாகிறது. ஆன்டி ஆக்சிடண்ட்களும் உள்ளதால் வீக்கங்களை விரைவில் சரி செய்கிறது.

எப்போதும் இளமையை தக்கவைக்கிறது சர்க்கரை வள்ளி கிழங்கு  (Youthful Skin)

கிடைத்த இளமையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள சர்க்கரை வள்ளி கிழங்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் இதற்கு உதவுகின்றன. மேலும் சிறுவயதில் முதிர்ந்த தோற்றம் உடையவர்களுக்கும் இது அற்புதமாக வேலை செய்து இளமை தோற்றத்தை கொடுக்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கில்  ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால்  பிரீராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.

ADVERTISEMENT

Benefits and Side effects of sweetpotato in tamil

கேன்சரை தடுக்கும் கிழங்கு (Helps In Preventing Cancer)

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து கான்செர் கழகத்தின் ஆராய்ச்சியின் முடிவில் சிவப்பு சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள ஆந்தோசியானின் ட்யூமர் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக கூறியிருக்கிறது. இதற்காக கீமோ தெரபிக்கு முன்பாக ஒரு சில கேன்சர் நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு மருந்தாக கொடுக்கப்பட்டது. அதனால் இதன் ஆராய்ச்சி முடிவுகள் உறுதியாகின.

நுரையீரல் பிரச்னைகளுக்கு அருமருந்து (Good For Lung Problems)

இதில் உள்ள பி 6 புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூச்சு பிரச்னையை நீக்குகிறது. நுரையீரலின் காற்று குழாய்களில் ஏற்படும் ஒருவித நோயான எம்பைசீமாவை சர்க்கரை வள்ளி கிழங்கு ஏற்படாமல் காக்கிறது. மேலும் தொண்டை புற்று நோய் ஏற்படாமலும் காக்கிறது.

அல்சருக்கு அருமருந்து (Good for Alzar)

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கொட்டி கிடைக்கும் இயற்க்கை சத்துக்களான இரும்பு, பொட்டாசியம், மக்னேசியம் போன்ற தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் அல்சரால் ஏற்படும் பாதிப்புகளை அறவே நீக்குகிறது.

ADVERTISEMENT

ஜீரண மண்டலத்திற்கு நண்பன் (Good For Digestive System)

சர்க்கரை வள்ளி கிழங்கின் நார்ச்சத்துக்கள் பச்சை காய்கறிகளை போலவே உடலின் ஜீரண சக்திக்கு நண்பனாக இருக்கிறது. மலசிக்கல் தான் உடலின் மற்ற சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஒரு கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதால் மலசிக்கல் தீரும்.

Benefits and Side effects of sweetpotato in tamil

ஆர்தரைடிஸ் வலிகளை அறவே நீக்கும் கிழங்கு (Good For Arthritis Patients)

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கெரோட்டின், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தாது உப்புகள் மக்னேசியம் மற்றும் ஸிங்க் போன்றவை மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு மருந்தாக செயல்பட்டு வலிகளை அறவே நீக்குகிறது.

நீரிழுவு நோய்க்கு தீர்வாகும் சர்க்கரை வள்ளி கிழங்கு (Soution For Water Logging)

இதனை பெயரிலேயே இனிப்பு இருப்பதால் சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிட கூடாது என்று பலபேர் நினைக்கிறார்கள். உண்மையில் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் க்ளுகோஸினை மெதுவாக ரத்தத்தோடு கலக்க வைக்கிறது. இன்சுலின் சுரப்பதற்கும் உதவி செய்கிறது. அளவாக மாவு பொருள்களுக்கு பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டு வரலாம்.

ADVERTISEMENT

இதய நோய்க்கு விடை தரும் கிழங்கு (Answer To Heart Diseases)

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாஷியம் நம் உடலில் உள்ள சோடியத்துடன் இணையும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் சாத்தியங்களை குறைக்கிறது. ஆகவே இதனால் இருதய நோய்கள் ஏற்படாமல் காக்க முடியும்.

Benefits and Side effects of sweetpotato in tamil

கண்பார்வைக்கு நன்மை அளிக்கும் கிழங்கு (Good For Eyesight)

சர்க்கரை வள்ளி கிழங்கில் கெரோட்டின்கள் அதிகமாக இருப்பதால் இது நமது கண் பார்வையை பாதுகாக்க உதவுகிறது. பீட்டா கெரோட்டின் லியூட்டின் மற்றும் ஸிக்ஸஸின் போன்றவை நம் பார்வைக்கு பலம் ஊட்டுகிறது.

மூளையை சுறுசுறுப்பாக்கும் கிழங்கு (Keeps Your Brain Active)

மூளையின் செல்களை தட்டி எழுப்பும் மாங்கனீஸ் மற்றும் கொலைன் கலவைகள் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொட்டி கிடக்கின்றன அதனால் மூளைக்கு தகவல்களை கடத்தும் நியுரோமீட்டர்கள் சுறுசுறுப்பாகின்றன. ஆகவே உங்கள் நினைவுகள் பலமாக இருக்கும். மறதிகள் குறையும்.

ADVERTISEMENT

சருமம் மற்றும் கூந்தலுக்கான கிழங்கு (Good For Skin And Hair)

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள கெரட்டின் சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் நமது தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Benefits and Side effects of sweetpotato in tamil

 

சர்க்கரைவள்ளி கிழங்கின் பக்கவிளைவுகள் (Side Effects Of Sweet Potato)

ரத்த சர்க்கரை அதிகமாகலாம் (May Increase Level Of Blood Sugar)

அதிக அளவில் சர்க்கரை வள்ளி கிழங்கை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். 100கிராம் கிழங்கு என்பதுதான் சரியான அளவு.

வாய்வு தொல்லை (Flatulence Trouble)

அதிக அளவில் நாம் எந்த கிழங்கு வகையை சாப்பிட்டாலும் வாய்வு தொல்லைகள் ஏற்படும். அது கிழங்குகள் இயற்கை குணம். உருளை கிழங்கு போல இல்லாவிட்டாலும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT

சிறுநீரக சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாது (Shouldn’t Be Eaten By People With Kidney Problem)

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அதிக ஆக்ஸலேட்கள் கிட்னி தொடர்பான சிக்கல் உள்ளவர்களுக்கு நன்மை தராது. இவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை தவிர்ப்பது நல்லது.

பீட்டா பிளாக்கர் எடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கு ஒருபுறம் இதயத்திற்கு நோய்கள் வராமல் காக்கிறது. எனினும் ஒருவகை இதயநோய் ஏற்பட்டவர்கள் பீட்டா பிளாக்கர்களை மருந்தாக எடுப்பார்கள். அவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு கெடுதல்தான் செய்யும். ஆகவே அவர்கள் இதனை தவிர்ப்பது சிறப்பு.

 படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

பிரசவத்திற்கு பின்பு வரும் உடல் பருமனை குறைக்க வேண்டுமா

ADVERTISEMENT

உங்கள் பசியை போக்க குறைந்த கார்ப்ஸ் கொண்ட நொறுக்கு தீனி வகைகள்

Benefits and Side effects of sweetpotato in tamil

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo Benefits and Side effects of sweetpotato in tamil ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

ADVERTISEMENT

 

 

05 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT