logo
ADVERTISEMENT
home / Astrology
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

இன்று வியாழக்கிழமை பஞ்சமி திதி ஊரட்டாதி நட்சத்திரம். தை மாதம் 16ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

இன்று நிலையான நாள். எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் சொல்லுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரியால் மன உளைச்சல் அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம் 

ADVERTISEMENT

இன்று பொறுமையாக இருப்பது நல்லது. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்

சுறுசுறுப்பான நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.

முகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் !

ADVERTISEMENT

கடகம்

இன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த செயலிலும் தெளிவாக செயல்பட முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும் முகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். தடைபட்ட காரியங்கள் உடனே முடியும் நாள்.

ADVERTISEMENT

கன்னி

உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

youtube

ADVERTISEMENT

துலாம் 

வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களிடம் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள் புதுமை படைக்கும் நாள்.

ADVERTISEMENT

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை… வீட்டிலேயே செய்து கொடுங்கள்!

தனுசு

பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

ADVERTISEMENT

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்கள் நலமாக அமையும். விருந்தினர் வருகை யால் வீடுகளைக் கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மீனம் 

ADVERTISEMENT

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுங்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. லேசாக தலைவலி உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா..?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!   

ADVERTISEMENT

 

29 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text