பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா, சர்வேஷ் சஷி ஆகியோரின் யோகா நிறுவனத்தில் ஐஸ்வர்யா தனுஷ் (aiswarya) முதலீடு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். வை ராஜ வை, மூணு உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் சர்வா யோகா நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டல் மூலம் யோகாவால் உண்டாகும் பலனை எடுத்துரைக்கும் நிறுவனமாகும்.
2016ம் ஆண்டு யோகா ஆர்வம் கொண்ட தொழில் முனைவரான சர்வேஷ் சஷியால் தொடங்கப்பட்ட சர்வா, யோகா, மன அமைதி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சேவைகளை நேரடியாக மற்றும் டிஜிட்டல் மூலம் வழங்கி வருகிறது. இதன் நிறுவனர்கள் யோகா நிபுணர் சர்வேஷ் சஷி மற்றும் இந்தி நடிகை மலைக்கா அரோரா. இந்த நிறுவனத்தில் நடிகை மலைக்கா அரோரா, நடிகர் ஷாகித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா பிட்நெஸ் மையங்கள் உள்ளன.
கதைக்கு தேவைப்பட்டால் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பேன் : விமர்சனங்களுக்கு ரகுல் பதிலடி!
சமீப காலமாக தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் இந்த நிறுவனத்தில் ஐஸ்வர்யா தனுஷ் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா தனுஷ், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் தினசரி போராடி வருகிறோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை பார்த்து வருகிறேன்.
ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்துக்கு நினைவூட்ட வேண்டும் என்பது சர்வாவின் குறிக்கோள். நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இது தான் என கூறிய அவர் இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும் எங்களின் திவா யோகா மீதான ஆர்வம் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும் போது எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது. எங்களின் முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன் என்று ஐஸ்வர்யா தனுஷ் (aiswarya) கூறியுள்ளார்.
அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
ஐஸ்வர்யா தனுஷ ஐக்கிய நாடுகள் சபையின் பாலின சமத்துவ மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தூதர் என்ற முறையில் பெண்களுக்கான உடல் தகுதி மற்றும் மன நலனை வலியுறுத்தி வருகிறார். இந்த பொறுப்பு சர்வாவின் திவா யோகாவுடன் அவர் கைகோர்ப்பதற்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இந்த பிராண்டை பிரபலமாக்க அவர் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல், ஐஎஸ்எல், புரோ கபடி போன்று டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காக தொடங்கப்பட்டது, அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர். இதன் 3வது சீசன் இம்மாதம் 25ம் தேதி முதல் டெல்லியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், புனேரி பல்டன், மவேரிக்ஸ் கொல்கத்தா, யு மும்பா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் சென்னை லயன்ஸ் அணியை திரைப்பட இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா வாங்கியுள்ளார். சென்னை அணியில் நட்சத்திர வீரர் சரத் கமல், யாஷினி சிவசங்கர், அனிர்பன் கோஷ், மதுரிகா பட்கர், டியகோ அபோலோனியா, பெட்ரிசா சோல்ஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பீட்டர் ஏஞ்ஜல், முரளிதரராவ் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நட்சரத்திர ஆட்டக்காரர் சத்யன் ஞானசேகரன் தபாங் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இப்போட்டியில் தனது அணியாளருடன் ஐஸ்வர்யா (aiswarya) பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இந்த வருடம் நடைபெறும் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.