நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இந்த வருடம் நடைபெறும் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இந்த வருடம் நடைபெறும் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற போவது யார் என கணித்து பிரபலாமான ஜோதிடர் பாலாஜி ஹாசன் நயன்தாரா (nayanthara) திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் தற்போதைய கண்கவர் காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகின்றனர். கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ள நயன்தாரா தற்போதும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

twitter

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாரா கஜினி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார் நாளுக்கு நாள் நயன்தாராவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வந்தது வயது ஆக ஆக அவரது அழகும் அதிகரித்தே கொண்டே வருகிறது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன் மீது வரும் விமர்சனங்கள் அனைத்தையும் தாங்கி கொண்டு திரையில் தனது திறமையை நிரூபிப்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். 

மேலும் படிக்க - விவாகரத்துக்குப் பின்பான வாழ்க்கை.. முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்த அமலா பால் !

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா, தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர்.

twitter

இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இருவரும் ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். அந்த விழாவில் என் வருங்கால கணவருக்கு நன்றி என நயன்தாரா மேடையில் கூறினார். இருவரும் காதலிப்பாக செய்திகள் வந்த போதிலும் அதனை அவர்கள் மறுக்கவில்லை. 

மேலும் படிக்க - கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில் பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?

மேலும் இவர்கள் ஒரே வீட்டில் லிவிங் டூகெதர் முறையில் வசிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே அமிர்தர்ஸ் பொற்கோவிலுக்கு சென்று இருவரும் சாமி கும்பிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பதிவிட்டார். தொடர்ந்து நயன்தாராவின் 34வது பிறந்தநாளின் போது கேக் வெட்டி விமர்சையாக கொண்டாடிய படங்களையும் ஷேர் செய்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். தற்போது கமிட் ஆகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்தவும் வரும் நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

twitter

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏற்கனவே அமெரிக்க பாரிஸ் என வலம் வந்தனர். இதனிடையே மற்றொரு ரொமான்டிக் ட்ரிபிள் இந்த ஜோடி இருந்தனர். முக்கிய சுற்றுலா தலமான சண்டோரி நகருக்கு சென்று மகிழந்தனர். நடிகர் விஜயுடன் பிகில் படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றார் விக்னேஷ் சிவன்

அப்போது நயன்தாராவிற்கு (nayanthara) எடுக்கப்பட்ட விமான டிக்கெட்டை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் நான் வாழ்நாளில் செல்ல நினைத்த உலகிற்கு பறந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அங்கு நயன்தாராவின் புகைப்படத்தில் விக்னேஷின் உருவம் பதிந்திருக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர், சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது என்று கமெண்ட் செய்திருந்தனர். மற்றொரு புறம் அவர்களது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் அந்த படங்களை பகிர்ந்தனர்.

 

நடிகர் விஜய்யுடன் நடித்துள்ள பிகில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் நயன்தாரா மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா (nayanthara) திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என சேலத்தை சேர்ந்த பாலாஜி என்ற ஜோதிடர் கணித்து கூறியுள்ளார். 2019ம் ஆண்டு உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் முதல் இடங்களுக்கு வரும் என்று கூறியிருந்தார்.

twitter

இதுவரை கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும் என்றும் முன்கூட்டுயே கணித்து கூறினார். அவர் சொன்னதுபடியே நடந்ததால் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் (nayanthara) ஜாதகத்தை கணித்து கூறிய அவர், நயன்தாரா – விக்னேஷ் திருமணம் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும், அடுத்த ஐந்து மாதத்திற்குள் நயன்தாராவின் திருமணம் குறித்த அப்டேட் வரும் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்க - மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.