logo
ADVERTISEMENT
home / Celebrity Life
எடையை குறைத்த நடிகை ஹன்சிகா…. குட்டை உடையில் நடத்திய க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

எடையை குறைத்த நடிகை ஹன்சிகா…. குட்டை உடையில் நடத்திய க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்   போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய கால கட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். நடிகை ஹன்சிகா (hansika) தமிழ் சினிமாவில் பப்ளி ஹீரோயினாக அறிமுகம் ஆனார். 

twitter

ADVERTISEMENT

முக்கியமாக ஓகே ஓகே படத்திற்கு பின் இவரை தமிழ் சினிமாவே குட்டி குஷ்பு என்று பெயர் வைத்து கொண்டாடியது. இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார். 

27 வயதாகும் இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இவர் கொஞ்சம் குண்டாக இருப்பது தான் இவரின் பாசிட்டிவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மார்க்கெட் இழந்து வளரும் நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 

முதல் முத்தத்தின் போது என் உதடுகள் உறைந்து விட்டன.. ‘தலைவி’ கங்கணாவின் காதல் அனுபவங்கள் !

மேலும், தன் மார்க்கெட் இழக்க உடல் எடை தான் காரணம் என்று தீவிர உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து உள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று உடல் எடையை குறைத்து வந்திருந்தார்.

ADVERTISEMENT

twitter

தற்போது மீண்டும் கிட்டத்தட்ட 20-18 கிலோ வரை ஹன்சிகா மோத்வானி (hansika) தனது உடல் எடையை குறைத்துவிட்டார். இதனால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். பல்வேறு ஸ்லிம் நடிகைகளுக்கு மத்தியில் ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் குட்டையான உடையில் குழந்தைதனமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழு கொழு ஹன்சிகாவா இது? என அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

twitter

இதனிடையே சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே அருளுடன் விளம்பர படங்களில் ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். 

தர்ஷன் வெளியேற்றம் தற்செயல் அல்ல. சேனலின் கடைசி நிமிட பாரபட்சம்.. நிரூபிக்கும் ட்வீட் !

ADVERTISEMENT

இந்த நிலையில் அருள் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவியது. இதுகுறித்து நடிகை ஹன்சிகா தனது டிவிட்டர் பக்கதில் பதிலளித்துள்ளார். 

அதில் ஊடகத்தில் வெளியான செய்தியை ஷேர் செய்துள்ள ஹன்சிகா, அந்த தகவல் உண்மையில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தற்போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளுடன் நடிக்க நடிகை ஹன்சிகா (hansika) மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

03 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT