logo
ADVERTISEMENT
home / Bigg Boss
கோவத்தில் கத்திய அபிராமி! சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகென் : வனிதாவால் ரணகளம்!

கோவத்தில் கத்திய அபிராமி! சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகென் : வனிதாவால் ரணகளம்!

பிக் பாஸ் (biggboss) வீட்டிற்குள் கெஸ்ட்டாக வனிதா மீண்டும் நுழைந்துள்ளார். அவர் இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சின்ன சின்ன பிரச்சனையெல்லாம் ஊதி பெரிதாக்குவார். சண்டையை மூட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பார் என அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் வந்துள்ள நிலையில் வந்த உடனேயே அனைத்து போட்டியாளர்களையும் தனது பேச்சால் ஒரு வழியாக்கிவிட்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில், முகென் மற்றும் அபிக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கினார். 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

twitter

ADVERTISEMENT

பிக் பாஸ் (biggboss) வீட்டிற்க்குள் கவின் – சாக்‌ஷி பிரச்சனைக்கு அடுத்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருவது முகென்-அபி சர்ச்சை தான் இருந்தது. கடந்த வாரம் இது குறித்து கமல் தெளிவு படுத்தினார். உங்கள் காதல் முகென் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது என கமல், அபியிடம் கூறினார். அதற்கு அபியும் தடையாக இருக்க மாட்டேன் என ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து நடந்த எவிக்சனில் வீட்டை விட்டு என்னை வெளிய அனுப்புங்க பிக் பாஸ், எனக்கு பைத்தியம் பிடிக்குதுன்னு கதறினார். 

மேலும் எவிக்‌ஷன் போதும் தன்னை தானே எவிக்ட் செய்துகொண்டார்.  இருந்தாலும் அதனை பிக்பாஸ் ஏற்கவில்லை. பின்னர் இந்த பிரச்னை சற்று சமூகமானது. ஆனால் மீண்டும் வந்த வனிதாவின் பிரச்னை தலை தூக்கியது. வனிதா வந்தது முதல் அபிராமியிடம், முகென் குறித்து பற்ற வைத்து கொண்டிருந்தார். முகெனின் காதல் குறித்து அபிராமியிடம் இல்லாததையெல்லாம் சொல்லி முகென் மீது வெறுப்பை ஏற்படுத்தினார். வனிதாவின் மகுடிக்கு மயங்கிய அபிராமி, முகென் மீது வெறுப்பானது அவர் பேச்சிலேயே தெரிந்தது. 

twitter

ADVERTISEMENT

நள்ளிரவு வரை வனிதா, அபியிடம் பேசி கொண்டிருந்தார். நீ அழகா இருக்கிறாய், ஏன் அவன் பின்னால் தேவை இல்லாமால் சுற்றி திரிகிராய். முகெனை நீ தான் நல்லவனாய் காட்டி கொண்டிருக்கிறார் என்று வனிதா அபிராமியிடம் கூறினார். அப்போது அருகில் இருந்த கஸ்தூரி ஏன் இந்த பிரச்னை குறித்து பேசி கொண்டே இருக்கிறீர்கள். இதனை விட்டு விடுங்கள் என்று கூறினார். எனினும் அபி மற்றும் வனிதா, முகென் குறித்து பேசி கொண்டே இருந்தனர். 

இதனால் அபி, முகென் மீது வெறுப்பானார். இதனை தொடந்து அபிராமி, நேரடியாக முகெனிடம் இது குறித்து பேசினார். அப்போது அனைத்து ஹவுஸ் மேட்சும் உடன் இருந்தனர். பெண்கள் அணியினர் அபிராமிக்கு ஆதரவாகவும், ஆண்கள் அணியினர் முகெனுக்கு ஆதரவாகவும் பேசினர். மேலும் இந்த பிரச்சனையில் முகென் மீதும் தவறு இருப்பதாக கூறினர். உனக்கு வெளியே காதலி இருக்கும் போது அபியை விட்டு நீங்கள் விலகி இருக்க வேண்டும் என மதுமிதா முகெனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு முகென் வந்த போதே அபியிடம் எனக்கு காதலி இருப்பதாக நான் கூறினேன். 

பின்னர் நண்பர்களாக தான் நாங்கள் பழகினோம். ஆனால் அபிக்கு என் மீது பொஸசிவ் வந்தது. அதனால் நான்  அபிக்கு அட்வைஸ் செய்தேன் என்று கூறினார். பின்னர் அனைவரும் இந்த பிரச்சனையில் தங்களது கருத்து குறித்து பேசினார்கள். அப்போது அபிராமி மிகவும் கோவமாக கத்தினார். என் மேலே தேவையில்லாமல் பழி போடுகிறீர்கள் என கத்தினார். நீ என்னிடம் இருந்து விலகி செல்லவில்லை என்று முகெனை பார்த்து கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையில் சண்டை முளைத்தது. முகென் தன்னுடைய கருத்தை நிலை நிறுத்த முடியாமல் தவித்தார்.

ADVERTISEMENT

twitter

வனிதா இடையில் புகுந்து ஆட்டத்தை கலைத்தார். அபிராமி அழுது அழுது கண்ணீர் வடித்தார். மது திடீரென உணர்வு ரீதியாக கேள்விகளை முன்வைத்தார். மற்றவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பேசி கொண்டிருந்தனர். தர்ஷன், சாண்டி, கவின் உள்ளிட்டோர் முகெனுக்கு ஆதவாக பேசினர். உன் நட்பை நான் மதிக்கிறேன் என்று ஒரே வார்த்தையில் முகென் கூறினார். ஆனால் அபி சமாதானமாக போக முன் வரவில்லை. பெருத்த சத்தத்துடன் முகெனை திட்டினார் அபிராமி. இதனால் ஆவேசமடைந்த முகென், தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்தார். ஆனால் அடிக்கவில்லை. 

முட்டிக்கொண்ட வந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் அழத் தொடங்கிவிட்டனர். முகெனை சேரன், கவின், சாண்டி, வனிதா ஆகியோர் சமாதானப்படுத்தினர். இதற்கிடையில் கஸ்தூரிக்கும் கவினுக்கும் சச்சரவு எழுந்தது. மற்றொரு புறம் வெளியே தன் மீது பழி சுமத்தி புலம்பிக் கொண்டிருந்தார் அபிராமி. என்னை விட்டு விடுங்கள். நான் வெளியே செல்கிறேன் என்று அழுதார். மக்களின் அன்பை பெறுவதில் நான் தோற்று விட்டேன். நாம் ஒரு முட்டாள் என்று அழுது புலம்பினார் அபிராமி. அவரை ஷெரீனும், லோஸ்லியாவும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

கஸ்தூரிக்கு பவர் கொடுத்த பிக் பாஸ் : வித்தியாசமான தண்டனைகளால் தவிக்கும் ஹவுஸ் மேட்ஸ்

ADVERTISEMENT

twitter

இந்த பிரச்னையை நீயா நானா போட்டி போல கையாள நினைத்த கஸ்தூரியை கவின் கோவமாக பேசி கொண்டிருந்தார். அதேபோல் வனிதாவால் தான் இந்த பிரச்னை பெரிதானதை உணர்ந்த சாண்டி, வனிதாவை கோவமாக பேசினார். தனது குட்டு உடைந்துவிட்டதை அறிந்த வனிதா, அபிராமி கெட்டவள் என்பது போல் அவளை பற்றி எனக்கு தெரியும். அதனால் தான் முகெனின் தவறை சுட்டிக்காட்டுகிறேன் என பிளேட்டை மாற்றி போட்டு நல்லவர் போல் நடித்தார். இதனால் பிக் பாஸ் வீடு அதகளமானது. 

அடிக்கடி அபிராமியிடம் முகேன் கூறும் அந்தக் காதலி இவர் தானாம்! வெளியான புகைப்படம் !

ADVERTISEMENT

பின்னர் அனைவரும் நார்மல் ஆகினர். சிறிது நேரத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களுக்கு முகினிடம் மன்னிப்புக் கோரினார் அபிராமி. முகெனும் அதனை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் மன்னித்து விட்டேன் என்பது போல தலையை ஆட்டினார். அதனை தொடந்து அபிக்கு, வனிதா மற்றும் சேரன் அட்வைஸ் செய்தனர். பிறகு லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்குக்கான மணி அடித்தது. உடனே பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியது. வனிதா விருந்தினராக மாறினார். அனைவரும் அவரை மேடம் மேடம் என்று அழைக்க தொடங்கினர். டாஸ்கிற்கு ஏற்றபடி அவர்களுடைய கதாபாத்திரங்களை விளையாடத் தொடங்கினர் ஹவுஸ்மேட்ஸ்.

மேலும் அனைத்து போட்டியாளர்களும் கஸ்தூரிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்களுக்கு அவரை பிடிக்கவே இல்லை. இந்த வாரம் அவரை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் பலரும் கஸ்தூரியை நாமினேட் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோவில், ஆண்கள், பெண்களை இந்த வீட்டில் பயன் படுத்தி கொள்கிறீர்கள் என்று கூறுகிறார். வனிதா மேடம் வந்த உடனே என்ன சொன்னாங்க? 

இங்க ஆண்கள், பெண்களை அடிமை படுத்துறீங்கன்னு. அவங்க சொன்னது உண்மையாக இன்று நடந்து விட்டது. இந்த வீட்ல ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கறீங்க. உங்க கிட்ட நியாயம் இல்ல என்றார். அடிமை எல்லாம் சொல்லாதீங்க, அதெல்லாம் பெரிய வார்த்தை என கவினும், சாண்டியும் கூற அப்போ யூஸ் பண்ணிக்கறீங்க என கூறுகிறார். மேலும் வனிதா கூறியது போல இந்த வாரம் கமல் சார் 10 நிமிஷம் கதவை திறந்து வைத்தா வெளியே போற முதல் ஆள் நானா தான் இருப்பேன் என கூறுகிறார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

13 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT