கஸ்தூரிக்கு பவர் கொடுத்த பிக் பாஸ் : வித்தியாசமான தண்டனைகளால் தவிக்கும் ஹவுஸ் மேட்ஸ்

கஸ்தூரிக்கு பவர் கொடுத்த பிக் பாஸ் : வித்தியாசமான தண்டனைகளால் தவிக்கும் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத விதமாக சரவணனை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டார். அதே நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷனும் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு கிப்ட் பாக்ஸ் மூலம் உள்ளே வந்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏற்கனவே வெளியில் பிக் பாஸ் போட்டியாளர்களை அவர் கண்டபடி விமர்சித்து வந்தார். தற்போது நேரடியாகவே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தான் கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டார். சேரன் இருக்கும் தைரியத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறினார்.

பிக் பாஸில் ஆண்களாக வேடமணிந்து கலக்கிய மதுமிதா, அபிராமி.. அதிரடியாக நுழையும் கஸ்தூரி!

twitter

பின்னர் லாஸ்லியாவை கலாய்த்த கஸ்தூரி (kasthuri) நீங்கள் ஏன் எப்போதும் ஒரு இடத்தில் நிற்காமல் ஆடி கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டார். லாஸ்லியா ஆடித்தான் ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். வெளியில் இருக்கும் போது லாஸ்லியாவைப் பற்றி நிறைய விமர்சித்திருந்தார் கஸ்தூரி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவரைப் பிடிக்கும் என்றும், இப்போது மனது மாறி விட்டது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து இந்த வாரம் யாரும் ஜெயிக்கு செல்ல வேண்டாம் என கூறிய பிக் பாஸ்,  கஸ்தூரிக்கு சிறப்பு பவர் கொடுத்தார். அதாவது கஸ்தூரி என்ன சொன்னாலும் அதனை போட்டியாளர்கள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. சும்மாவே ஆடுவார் கஸ்தூரி. இதில் சிறப்பு பவர் கிடைத்தால் கேட்கவா வேண்டும். வீட்டில் உள்ள போட்டியாளர்களை ஒரு வழி படுத்தி எடுத்து விட்டார். தர்ஷனுக்கு நிழலாக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்றும் மதுமிதாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தார் கஸ்தூரி.

twitter

இந்த பனீஷ்மென்ட்டை இருவருமே விளையாட்டுத்தனமாகவே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக மதுமிதா, தர்ஷனுக்காக எக்கி எக்கி குடை பிடித்து தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார். கஸ்தூரி கேட்ட கேள்விக்கு செம கிண்டலாக பதில் ஒன்றைக் கூறினார் ஷெரீன். கஸ்தூரிக்கு அது சரியான நோஸ்கட்டாகப் போய் விட்டது. இதனை மனதில் வைத்து கொண்ட கஸ்தூரி, ஷெரீனுக்கு பாத்ரூமில் வைத்து தோப்புக்கரணம் போடும் தண்டனை கொடுத்தார்.

அடுத்தவர் காதலனை காதலிக்கும் லாஸ்லியா மற்றும் அபிராமி இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன ?

twitter

ஏற்கனவே கஸ்தூரி (kasthuri) வருகையால் சாக்‌ஷிக்குத் தான் பிரச்சினை அதிகம் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் பாத்ரூமில் சாக்‌ஷியை தலைகீழாக நிற்க வைத்து விட்டார். பாவம் வேறு வழியில்லாமல் அவரும் நின்றார். இதனையடுத்து கவினுக்கு கொடுத்த தண்டனை சற்று வித்தியாசமானது. அதாவது கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுதும்படி பனீஷ்மென்ட் கொடுத்தார். இந்த தண்டனை கவினுக்கு தான் பொறுந்தும் என்று கூறி அந்த தண்டனையை அவருக்கு வழங்கினார் கஸ்தூரி. கவினும் ஏன் எதற்கு என கேட்காமல் அதனை செய்து முடித்தார். 

கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே பிரேக்கப் ஆன பிறகு, கவின் முதலில் சாக்ஷி பெயரை நாமினேட் செய்தார். அதனை கண்டித்த கஸ்தூரி, இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம். ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டிருந்தார். இதனால் கவின் மீது கஸ்தூரியும் கோபத்தில் உள்ளார் என்பது தெளிவானது. இந்நிலையில் கவினை மன்னித்துவிடு என மூக்கால் எழுத வைத்து கஸ்தூரி தண்டனை வழங்கியுள்ளார்.

twitter

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில் கவின், கஸ்தூரி, சேரன், மதுமிதா உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது காதல் பிரச்சினை தொடர்பாக கவினை விமர்சித்தார் கஸ்தூரி. இந்த 45 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்த கஸ்தூரி (kasthuri) ,  இதுகுறித்து கவினிடம் கேள்வி கேட்கிறார். "நான்கு பெண்களை லவ் பண்றது ஒரு காமெடின்னு உங்களுக்கு தோணிருக்குல்ல" என முகத்துக்கு நேராக கேட்கிறார். அப்போது குறுக்கிடும் சேரன், கவின் காமெடிக்காக இதை செய்யவில்லை என்கிறார். 

பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!

கவினுடையே எதிர்பார்ப்பு ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு உள்ளது. ஆனால் ரியாலிட்டி வடிவேலு மாதிரி தான் உள்ளது என செம கலாய் கலாய்க்கிறார் கஸ்தூரி. அதற்கு அட்லீஸ்ட் வடிவேலு அளவிற்கு உள்ளதே என கெவின் சகிப்புடன் கூறுகிறார் . இதேபோல் ஒரு பெண் நான்கு பசங்கள ஒரே நேரத்தில் காதலித்தால் காமெடியாக பார்ப்பீர்களாக? என கஸ்தூரி கவினிடம் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் கவின் தலைகுனியும் வீடியோ வெளியாகியுள்ளது. 

இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், கவின், சேரன், சாண்டி, சாக்ஷி மற்றும் லாஸ்லியா உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். அப்போது பேசும் கஸ்தூரி, பத்தவச்சுட்டேயே பரட்டை என ஒருவர் பற்றவைப்பதற்காக... பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக கஸ்தூரி வந்திருக்கிறார். கவினுக்கு பேர்ல வின் இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்லியாவை தான் விரும்புகிறது... அது என்ன காரணத்தால் என தெரியவில்லை என்று பாடலாக படிக்கிறார். அதற்கு யாரோ பின் இருந்து பத்தவச்சுட்டேயே பரட்டை என கூற, கஸ்தூரியோ எல்லாரும் லாஸ்லியாவிற்கு ஒரு 'ஓ' போடுங்கள் என கூறுகிறார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.