ஒப்பனை மற்றும் வழக்கமான தோல் பராமரிப்பு வழிகள் மட்டுமே உங்களை பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது மிகவும் தவறான சிந்தனையாகும். எனில், நாம் சிந்திக்கும் சிந்தனைகள் மற்றும் நடந்துகொள்ளும் விதங்களில் மட்டுமே நாம் உண்மையில் ஒரு அழகிய கவர்ச்சிகரமான தோற்றத்தை அடைய முடியும்.
உங்களின் சிந்தனை மற்றும் செயல்கள் உங்கள் உள் அழகை நோக்கி பங்களிக்கிறது. இதுவே வெளிப்புற தோற்றத்தின் அமைப்பை விட முக்கியமானதாகும். எனவே ஒரு குறைபாடற்ற தோற்றத்தை பெற இங்கு நாங்கள் உங்களுக்கு ஐந்து ரகசியங்களை அளிக்க உள்ளோம். இது மற்றவர்கள் உங்களை எதிர்க்காத அளவிற்கு ஒரு ஈர்க்கவைக்கும் தோற்றத்தை அளிக்க உள்ளது!
1. ஆழ்ந்து கவனித்துக் கேட்பவராக இருங்கள்
எப்போதும் மற்றவர்கள் பேசுவதை நன்கு கேட்டு பழகுங்கள். இதுவரை நீங்கள் அதை பயிற்சி செய்யாவிட்டால் இனிமேல் பழகிக் கொள்ளுங்கள். எந்த ஒரு உரையாடலிலும் கேட்பது பேசுவதைப் போலவே முக்கியமானதாகும். மற்றவர்கள் அதாவது உங்கள் நண்பர்கள் மற்றும் பார்ட்னர் சொல்வதை நீங்கள் கேட்பதை அவர்கள் அறியும்போது அவர்கள் இயல்பாகவே உங்களுடன் நெருக்கமாகவும் சவுகரியமாகவும் உணருவார்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது-
- மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும் அதற்கு பின் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம்
- அலுவலகத்திலும் மற்றவர்கள் பேசுவதை கவனித்து குறித்துக்கொண்டு பிறகு உங்கள் விவாதத்தை முன் வைக்கலாம்
- பொறுமையாகவும் தயவுடனும் பேசுங்கள்
2. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்
மனிதர்கள் இயல்பாகவே அவர்களை சிரிக்க வைக்கும் நபர்களிடம் ஈர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் நீங்கள் ஒரு தீவிரமான சிந்தனையில் பதில் அளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை!
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை –
- ஒரு தீவிரமான சூழ்நிலையை தளர்த்த நகைச்சுவையான பதில்களை அளியுங்கள்
- கிண்டல் செய்தாலும் அதை நேர்மறையாக இருக்கும்படி பயிற்சி செய்து பழகுங்கள்
- நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களைப் புண்படுத்துவதை தவிர்க்கவும்
- இது எந்த ஒரு சூழ்நிலையையும் சரிப்படுத்த உதவும்
3. நுண்ணறிவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி திறன்
அனைத்து சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளுடன் உங்களை புதுப்பித்துக் கொள்வது உங்களை ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாக சித்தரிக்கும். இந்த விஷயத்தில் யாருடனும் ஒரு புதிய உரையாடலை தொடங்க இது உதவும். இது உங்கள் மீது நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியின் மீது நீங்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறீர்கள் என்று அனைத்து காரணிகளையும் காண்பிக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை-
- உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்
- எதிர்மறையை தவிர்த்து , நீங்கள் பேசும் தலைப்பைப் பற்றி நேர்மறையான நோக்கத்தில் மட்டுமே பேசுங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள நிறைய புத்தகங்களை படிக்கவும்
4. பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மை
பலர் தங்கள் தவறை ஏற்க மாட்டார்கள். சூழ்நிலையை பொருட்படுத்தாமல், உங்கள் தவறை பொறுப்பேற்கும் குணம் அவசியம். நீங்கள் நம்பகத்தன்மையுடன் இருக்கும் போது அது உங்கள் தைரியத்தையும் நல்ல மனதையும் காட்டுகிறது . இது மற்றவர்களை உண்மையாக உங்களை நோக்கி ஈர்க்க வைக்கும் ஒரு மிக அழகிய காரணியாகும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை-
- எதுவாக இருந்தாலும் உண்மையை மட்டுமே பேசுங்கள்
- உங்களிடம் இல்லாததைப் பற்றி வருத்தப்படுவதா அல்லது புகார் செய்வதை நிறுத்துங்கள்
- உங்களை சுற்றி இருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் மிகுதியான விஷயங்களையும் பார்த்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
5. தனக்குத் தானே முன்னுரிமை கொடுப்பது
தினசரி அடிப்படையான ஒரு சுய பாதுகாப்பு மற்றும் சுய முன்னுரிமை மிகவும் அவசியமான ஒன்றாகும். தனக்காக நேரத்தை ஒதுக்கி முன்னுரிமை கொடுக்கும் பெண்கள் மற்றவர்களின் பார்வையில் கவர்ச்சியாகவும் நம்பிக்கை தக்கதாகவும் காணப்படுவார்கள் .
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை –
- உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி புத்தகத்தை படிப்பது, உடற்பயிற்சி அல்லது ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை தினமும் பழகி வாருங்கள்.
- இவை அனைத்தும் அடிப்படையான பழக்கவழக்கங்கள் ஆகும்.
- இது நிச்சயம் உங்களை யாராலும் தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை (attractive look) அளிக்கும் என்பது உறுதி. இதனால் மற்றவர்கள் உங்கள் நட்பை எதிர்பார்த்து தானாகவே உங்களிடம் சேருவார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு சரிபார்ப்பு பட்டியல் புத்தகத்தை வைத்துக்கொண்டு மேல் கூறிய வாழ்க்கை முறையை அடுத்து 30 நாட்களுக்கு அல்லது ஒரு மாதத்திற்கு பயிற்சி செய்து பழகுங்கள். அதற்கு பின் உங்களின் மூளை தானாகவே இதை தினமும் செய்யத் திட்டமிடும்.
முயற்சித்து பாருங்கள் !
மேலும் படிக்க – உங்கள் தனிமையின் நேரத்தை டிவி பார்ப்பதை தவிர சுவாரஸ்யமாக கழிக்க சில வழிகள்
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.