logo
ADVERTISEMENT
home / Self Help
உங்கள்  தனிமையின் நேரத்தை  டிவி பார்ப்பதை தவிர சுவாரஸ்யமாக கழிக்க  சில வழிகள்

உங்கள் தனிமையின் நேரத்தை டிவி பார்ப்பதை தவிர சுவாரஸ்யமாக கழிக்க சில வழிகள்

மனித வாழ்வில் மிகவும் மோசமான ஒன்று தனிமை. இன்று பல பெண்கள் தனிமையை கழிக்க தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். டிவி ரிமோட்டை கையில் வச்சு அமுக்கிட்டே சலிச்சு போகுது நமக்கு. அதை சற்று மாற்றலாமா ? நமக்கு பிடித்த மாதிரி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. டிவி (tv) பார்ப்பதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் உள்ளனர். இதில் எது உங்களுக்கு சிறந்தது என்று பாருங்கள்,பழகுங்கள்…

அர்த்தமுள்ள சந்திப்பு :

pexels-photo-339620

டைம் கிடைக்கும் போது, நமக்கு பக்கத்துல இருக்க ஆதரவற்ற இல்லம், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், நோய்யுற்றவர்கள்  என இருப்பவர்கள் யார் என அறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவினால், நமக்கும் நேரத்தை அழகானதாக செலவிடுவதோடு, பிறர் துயர் போக்கி அவர்களின் புன்னகைக்கு தவிடலாம். .  .

சிறு தேவைகளை பார்ப்பது :

நமக்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை, நாமே நடந்து சென்று வாங்கலாம்.  இதுனால நேரம் போவதோடு, நம்முடைய சின்ன சின்ன தேவைகளுக்கு யாரையும் நாடாமல், நாம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

ADVERTISEMENT

பிடித்த படத்திற்கு செல்வது :

உங்களுக்கு மிகவும் பிடித்த படமோ அல்லது ஏதேனும் புதிய படமோ அதை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பார்க்கலாம். இதன் மூலம் ஒரு  மூன்று மணி நேரம், மனதில் எந்த ஒரு பாரம் இல்லாமல் நேரத்தை கழிக்கலாம்.

ஏதேனும் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எடுத்து படிங்க:

pexels-photo-864938

டெக்னாலஜி எவ்ளோ வளந்தாலும், மறுக்க முடியாத வாக்கியம்

                “புத்தகம் ஒரு சிறந்த நண்பன் “

ADVERTISEMENT

ஆக வீட்டிற்கு அருகாமையில் உள்ள நூலகத்தில் உங்கள் பெயரை பதிந்து உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்க செலவிடுங்கள், புத்தகம் எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறிவு திறனை வளர்ப்பதோடு, மனதை இளமையாக வைத்துக்கொண்டு இருக்க இப்பழக்கம் உதவும். கிண்டில், ஈ புக்னு போகாம, கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படியுங்கள்.

பிடித்ததை சமைத்து சாப்பிடவும் :

குடும்பம் மொத்தத்துக்கும் சமைக்கும் நாம், நம்முடைய விருப்பமான உணவை சாப்பிட கூட மறந்து விட்டோம். ஆகையால், நேரம் (time)  கிடைக்கும் போது, பிடித்த சமையலை நீங்களே ஈடுபாடோடு வீட்டிலே செய்து பாருங்கள்.

மேற்கொண்டு படிங்க :

கற்க வயதில்லை என்பது போல, கல்விக்கு எல்லை இல்லை. இன்று பல ஆன்லைன் கோர்ஸ் இருக்கிறது. நேரம் கிடைத்தால் வீணடிக்காமல் புதிய புதிய கோர்ஸ்ல சேர்ந்து படிங்க. இது, வெறும் பொழுது போக்கு மட்டும் அல்லாமல், உங்கள் தகுதியும் திறமையும் மேம்பட உதவும்.

உங்கள் ஹாபி ஒன்றை தேர்ந்தெடுங்கள்  :

hands-enamel-red-color-37731

ADVERTISEMENT

பொழுபோக்கை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஹாபி..

ஸ்டாம்ப் சேகரிப்பது, உலக நாடுகளின் பணம் சேகரிப்பது, பின்னல்,தையல் ,தோட்ட கலை, போன்றவையில் நம் மனதிற்கு பிடித்ததை தேர்வு செய்து மன திருப்தி அடையலாம்.

தியானம் – ஒரு தெளிவுக்காக :

தியானம், யோகா போன்றவை செய்யும் பழக்கத்தை வளர்ந்து, நேரம் கிடைக்கும் போது அதில் நம்மை ஈடு படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் உடல், மன வலிமை பெற்று, நல்ல எண்ணங்கள், சிந்தனை என்று வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும். தன்னம்பிக்கை, மன அமைதியும் கிடைக்கும்.

சுத்தம் செய்யுங்கள் :

நேரம் கிடைத்தால் உங்கள் அறையை சுத்தம் செய்யுங்கள், நறுமணம் தவழ வையுங்கள். அதுமட்டும் அல்லாது, உங்கள் அலமாரியில் இருக்கும் துணிகளை அழகாக அடுக்கி வையுங்கள்.

ADVERTISEMENT

பொழுதுபோவதும் அல்லாமல், வீடு சுத்தமாவதோடு வீட்டை  பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.

சுற்றுலா திட்டமிடல்:

pexels-photo-970203

அடுத்த விடுமுறை நாட்கள் கிடைத்தால் எந்த எந்த இடத்திற்கு செல்லலாம், அதற்கான செலவு, தங்குமிடம், உணவு போன்றவை ஏற்பாடு செய்ய திட்டமிடுங்கள்.

புது நட்பு :

நேரம் கிடைத்தால் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்கா, கடை, போன்ற பொது இடத்திற்கு நடந்து செல்லுங்கள்.  புதிய மனிதர்களை பார்க்க நேர்ந்தால் நட்பு பாராட்டி பழகி கொள்ளுங்கள். ஆரோக்கியமான விஷயங்களை உரையாடுங்கள்.இதன் மூலம் மனசுக்கு ஜாலியாக இருக்கும்..

ADVERTISEMENT

மசாஜ் :

பார்லர், ஆயுர்வேத,மருத்துவம் என்று பல நிலையங்கள் வந்துவிட்டது. முகம் உடல் போன்ற மசாஜ் செய்து கொள்வதால் ரத்தம் ஓட்டம் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் அடையும். உடல் வலி உடல் அலுப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.

அருங்காட்சியகம் :

woman-1283009 960 720

உங்கள் ஊரில் உள்ள அருகாட்சியகம் சென்று பார்க்கும் போது, காட்சிகள் மூலம் அறிவையும் அனுபவமும் பெறலாம்.

பல அறிய விஷயம் அறிந்து கொள்வதோடு,  ஆக்கப்பூர்வ பொழுதுபோக்காக அமையும்.

ADVERTISEMENT

வீட்டு வேலை :

எப்போதுமே வீட்டில் சின்ன சின்ன பழுது வேலைகள் இருக்கத்தான் செய்யும் ஒழுகும் குழாய், வேலைசெய்யாத மின் இயந்திரம்,கழிவறை கறை போன்ற வேலைகளை நாமே நேரம் கிடைக்கும் போது சரி செய்யலாம்.

நேரம் பொன்போன்றது!! நல்ல முறையில் பொழுதை கழிக்க (spend) தெரிந்தவர்களுக்கு மட்டுமே…

நமக்கு நேரம் பொன்னா ?? மண்ணா?? நம் கையில் தான் உள்ளது.

படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ,பேக்செல்ஸ்   

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

16 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT