logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
நீண்ட நாள் காதலை உடனே கரெக்ட் பண்ண நச்சுனு 10 டிப்ஸ்

நீண்ட நாள் காதலை உடனே கரெக்ட் பண்ண நச்சுனு 10 டிப்ஸ்

அவரை நீங்கள் சமீபத்தில் சந்தித்திருக்கலாம் அல்லது கொஞ்ச காலமாகவே அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரை ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டாக நீங்கள் நினைப்பதில்லை. அதற்கும் மேலாக, அவருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள். அவருக்கும் அதே ஆசை இருக்கிறதென்று நம்புகிறீர்கள். அவர் வெட்கப்படுவதால் சொல்வதற்கு கூச்சப்படுவதாக நினைக்கிறீர்கள். அதனால் நீங்களே முதலில் போய் அவரிடம் பேச நினைக்கிறீர்கள். ஆனால் அது சரியாக இருக்குமா என்று தெரியாமல் குழம்புகிறீர்கள்.

கல்யாணம் செய்துகொள்வதற்கு முன் ஆணும் பெண்ணும் பேசி பழகிப் பார்ப்பது இன்று அநேக நாடுகளில் ரொம்ப சகஜம். அப்படியானால், ஆணிடம் பெண் முதலில் தன் காதலைச் சொல்லலாமா? இங்கு மறுபடியும் குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரின் உணர்ச்சிகள் முகம்காட்டலாம்.

முதலில் ஒரு பெண் தன் காதலைச்(Love) சொல்வது பலருக்கு அதிர்ச்சியாகவோ புண்படுத்துவதாகவோ இருக்குமா?
பெண் நினைத்தால் எந்தப் பையனையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ காதலில் விழவைக்க முடியும்? ஆனால், பசங்க..? ‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க… ப்ளீஸ்!’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடமே காலில் விழாத குறையாகக் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

நல்லவன் போல நடிப்பது: ”காலங்காலமா நம்ம பசங்க பண்றதுதான். ஆனா, இது ரொம்பத் தப்புங்க. நாம கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்ம கேரக்டரை நேர்மையா சொல்லிடணும். ‘நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிறவன்’தான் மோசமான ஆளா இருப்பான்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் தெரியும்!”

அழகான பொண்ணாச்சேனு தயக்கம்: ”இது மட்டும் இருக்கவே கூடாது பாஸ். தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கானு, அவ ரேஞ்சுக்கு சல்மான் கானையும் சிம்புவையுமா தேட முடியும். அந்தப் பொண்ணு படிக்கிற இடத்துல, பழகுற இடத்துல யார் இருக்காங்களோ, அவங்கள்ல ஒருத்தனைத் தான் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும். ஸோ, தயக்கம் தவிர்!”

பார்த்தவுடனேயே காதல் சொல்வது: ”ஒரு பொண்ணைப் பார்த்ததும் நமக்கு பல்பு எரியலாம். ஆனா, காதலை(Love) உடனே சொல்லக் கூடாது. ஏன்னா, லவ்வுங்கிறதே ஒரு லாங் டைம் ப்ராசஸ். அதே சமயம் ‘இதயம்’ முரளி ரேஞ்சுக்கு இழுத்துட்டே இருக்கவும் கூடாது. ஒருவேளை அந்தப் பொண்ணு அடுத்த ஃப்ளைட்ல அமெரிக்கா போறானா, அப்ப யோசிக்காம… உடனே லவ் சொல்லிடு!”

காதலுக்கு ஓ.கே. சொல்லலைனா…: ”அக்செப்ட் பண்ணிட்டா ஓ.கே. இல்லைன்னா, ‘நோ பிராப்ளம்’னு விட்டுடணும். கட்டாயப்படுத்தினா காதல் வர்றதைவிட, கண்டுக்காமவிட்டா பின்னாடி காதல் வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம்.”

ADVERTISEMENT

ஈகோவுக்கு வளைந்து கொடுப்பது: ”எந்தப் பொண்ணுகிட்டயும் சின்னதாவோ பெரிசாவோ ஒரு ஈகோ இருக்கும். அந்த ஈகோவை க்ளாஷ் பண்ணிட்டு கரெக்ட் பண்றதுலதான் த்ரில்லே இருக்கு. ‘நம்ம ஈகோவையே காலி பண்ணவன் இவன்’னு பொண்ணு மனசுல ஒரு நினைப்பு வந்தால்தான், உங்க மேல காதல்(Love) அதிகரிக்கும்.”

வசதியான காதலன்: ”தன் லவ்வர் பைக், கார், ஐபோன் வெச்சிருக்கணும்னு தெளிவான பொண்ணுக யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்த்தா, அந்தப் பொண்ணு நம்ம லைஃபுக்கு வேண்டாம் நண்பா!”

பொசஸிவ்னெஸ்:காதல்(Love), கல்யாணத்துக்கு அப்புறமும் வாழ்க்கை முழுக்கக் கடைபிடிக்க வேண்டிய லைஃப்லாங் ரூல் இது. நம்ம லவ்வர் கிட்ட இன்னொரு பொண்ணைப் பத்தி பாசிட்டிவோ, நெகட்டிவோ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசக் கூடாது. வேணும்னா, நம்ம அம்மா பத்தி, அவங்க அம்மா பத்திப் பேசிக்கலாம்!”

வெளியே அழைத்துச் செல்வது: ”பெண்களுக்கு பிரைவஸிதான் பிடிக்கும். கூட்டமான இடங்கள் பிடிக்காதுன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, கூட்டமான இடங்களுக்குப் போறப்போ, அவங்களை நாம எப்படிப் பாதுகாப்பா கூட்டிப் போயிட்டு வர்றோம், பத்திரமாப் பார்த்துக்குறோம்னு அவங்க கவனிப்பாங்க!”

ADVERTISEMENT

கலகல பேச்சு: ”இதுதாங்க ரொம்ப முக்கியம். இதை மட்டுமே வெச்சுதாங்க என் பொழப்பு ஓடுது. காமெடினு நினைச்சுட்டு நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா, அதை அவங்க ரசிக்கிறது முக்கியம். சிலருக்கு மொக்கை போட்டாக்கூடப் பிடிக்கும். சிலருக்கு ஃபீலிங்ஸாப் பேசினா பிடிக்கும். எது பிடிக்கும்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசுங்க!”

அடிக்கடி ஐ லவ் யூ: ”அது கட்டாயம். தினமும் குறைஞ்சது 100 தடவையாச்சும் ‘லவ் யூ… லவ் யூ…’ சொல்லிட்டே இருக்கணும். அதுதான் உங்க காதலின் ஹெல்த்துக்கான விட்டமின்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
23 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT