
எடை குறைக்க வேண்டும் என்பது எல்லோருடைய நியாயமான ஆசைதான் என்றாலும் அதனை வெளியே தெரியாமல் செய்து கொள்ளவே விரும்புவார்கள். ஏன் என்றால் டயட்டிங், உடற்பயிற்சி என எல்லாம் செய்தும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை . இதனால் மற்றவர்கள் கிண்டல் கேலிக்கு ஆளாகலாம்.
ரகசியமாக எடையைக் குறைப்பதால் (weightloss) பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
திடீரென ஒரு நாள் நாம் மெல்லிடையாளாக வலம் வரும்போது நம் குடும்பத்தார் உட்பட அனைவருமே ஆச்சரியம் அடைவார்கள்.
Also Read: உடல் எடையை குறைப்பதற்காக சிறந்த உடற்பயிற்சிகள் (Best Exercises)
இப்படி ஒரு ஆச்சர்யத்தை உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நீங்கள் தர வேண்டும் என்று விரும்புகிறீர்களா. அப்படி என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 12 குறிப்புகளை பின்பற்றுங்கள். மூன்றே மாதத்தில் நீங்கள் உடல் இளைத்து பொலிவாக மாறியிருப்பீர்கள். ( தினமும் பின்பற்ற வேண்டியது முக்கியம். 2 நாளுக்கு ஒருமுறை எல்லாம் வேலைக்காகாது.)
தினமும் நீங்கள் காலை உணவை சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
பழங்கள் காய்கறிகள் உங்கள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும்.
சரியான இடைவெளிகளில் அவசியமான அளவு மட்டுமே உணவை உண்ண வேண்டும்.
சோம்பேறித்தனம் உடல் எடை குறைப்பிற்கு எதிரி. எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பது போன்று இல்லாமல் சுறுசுறுப்பாக நடைஉடையாக இருக்க வேண்டும்.
உடலுக்கு தேவையான நீரை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அடிக்கடி பசிக்காது.
என்ன மாதிரி உணவுகளை உண்ணலாம் என்று பட்டியல் போட்டு அதற்கேற்ற வாறு சரியான இடைவெளியில் அந்த உணவை உண்ணுங்கள்.
சிறிய தட்டை பயன்படுத்துங்கள். இதனால் உண்ணும் உணவின் அளவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இதனால் அதிக நேரம் சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படும். மூளை சமாதானமாகும்.
நொறுக்குத் தீனிகள், சாக்லேட் போன்றவற்றை தவிர்த்து நட்ஸ்களை உங்கள் நொறுக்குத் தீனியாக்குங்கள். சாலட்களை தயாரித்து சாப்பிடுங்கள்.
மது மற்றும் போதை பொருட்களை நிறுத்தி விடுங்கள். நிதானமாக இல்லாத போது நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எப்படி நமக்கு தெரியப் போகிறது.
உணவுகளை சரியான வேளைகளில் சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மூன்று மாதங்களுக்கு இதனை செய்து பாருங்கள். நிச்சயம் ஆச்சர்யப்படும் வகையில் உங்கள் உடலின் எடை முன்பை விடக் குறைந்திருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.