Celebrity Life

எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் : விஷாலை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் வரலட்சுமி!

Swathi Subramanian  |  Jun 14, 2019
எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் : விஷாலை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் வரலட்சுமி!

தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கு நடிகர் விஷாலுக்கு இல்லை என்று வரலட்சுமி சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமா பிரபலங்களில் விஷால் மற்றும் வரலட்சுமி(varalakshmi) நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு கசிந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அனிஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ், Twitter

ஒய்வு பெற்ற நீதிபதி பரந்தாமன்  தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 7 மணி மாலை 5 மணி வரை  தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

விஷால் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு  இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிடுகிறார் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மஞ்சள் தேநீர் – பல நற்பலன்களை கொண்ட ஓர் அற்புத பானம்

பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ், Twitter

தேர்தல் தொடர்பாக அனைத்து அணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் விஷால் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சரத்குமார் மற்றும் ராதாரவியை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர். இருவரது சுயநலத்தால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டு அவர்களது முகத்தை காட்டியிருந்தனர். இதற்கு பல்வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி (varalakshmi), இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் தற்போது முற்றிலுமாக பொய் விட்டது. என் தந்தையின் கடந்த காலத்தை விமர்சித்துள்ளதை பார்த்து நான் வருந்துகிறேன். நீங்கள் கூறிய குற்றச்சாட்டை உங்களால் நிரூபிக்கவே முடியாது.

தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை

சட்டம் தான் உயர்ந்தது என்று இப்போது வரை நீங்கள் கூறி வருகிறீர்கள், அந்த சட்டத்தின் படி குற்றச்சாட்டை நிரூபிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என் அப்பா குற்றவாளியாக இருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். நீங்கள் வெளியிட்டுள்ள கீழ்த்தரமான வீடியோ உங்கள் தரத்தை காட்டுகிறது. ஏதேனும் வகுப்பிற்கு சென்று உங்கள் தரத்தை வளர்த்து கொள்ளுங்கள் என்று கடுமையாக (varalakshmi) சாடியுள்ளார்.

உங்களை குற்றம் சொல்ல முடியாது நீங்கள் வளர்ந்த விதம் அப்படி போல என்றும் உங்களது பொய்களையும், இரட்டை வேடங்களையும் அனைவரும் அறிவார்கள் என்பதால் உங்களை சாது போல காட்டி கொள்ள வேண்டாம் என  (varalakshmi) கூறியுள்ளார். நீங்கள் சாதுவாக இருந்தால் பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் உங்களை விட்டு விலகி சென்று மற்றொரு அணியை உருவாக்கி உங்களை வீழ்த்த முயற்சி செய்ய மாட்டார்கள். எனது தந்தையை இழுவுபடுத்தி பேசி வீடியோ வெளியிடாமல் இதுவரை நீங்கள்  செய்த சாதனைகள் குறித்து விவரித்து தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கலாம்.

ஆல்யா மானஸா வா இது ! அடையாளமே தெரியலை! ஆல்யாவின் அபூர்வ புகைப்படம் !

மற்றவர்கள் உங்களை பற்றி தவறாக பேசும் போது கூட உங்கள் மீது மரியாதை வைத்து, உங்களுக்கு நல்ல தோழியாக இதுவரை இருந்து வந்தேன். ஆனால் தற்போது அதை நீங்களே கெடுத்து விட்டீர்கள். திரைக்கு வெளியேயும் நீங்கள் நல்ல நடிகர் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறுவது போல உண்மை வெல்லும். என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக விஷாலை கண்டித்து, வரலட்சுமி (varalakshmi) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Celebrity Life