
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமானவர் ‘ஜாக்குலின்’ (jacqueline). பல சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர், மிகவும் பிசியாக இயங்கி வந்த நிலையில் சில மாதங்களாக டிவி நிகழ்ச்சிகளில் காண முடிவதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடந்து நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பியுள்ளார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘தேன்மொழி பி.ஏ’ என்ற சீரியலில் ஜாக்குலின் நடிக்கிறார். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், வீட்டில் செல்ல மகளாக சுதந்திரமாக வளரும் இவர் ஊராட்சி தலைவராக ஆகிறார். இதனால் அந்த ஊரை சேர்ந்த பெரிய மனிதர் இவரை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
இதை வைத்து மருமகளை கொடுமை படுத்த நினைக்கிறார் மாமியார். ஆனால் அவருக்கு சிரித்தவாரே செம மொக்கை கொடுக்கிறார் ஜாக்குலின். இந்த சீரியலுக்கு ‘தேன்மொழி பி.ஏ’ என பெயரிட்டுள்ளனர். இதில் ஜாக்குலின் மிகவும் குறும்புத்தனமான பெண்ணாக நடித்துள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக அறிமுகமாகி நடிகர், நடிகைகளாக மாறி வாழ்க்கையை மாற்றினார்கள். அதில் முக்கியமாக சிவகார்த்திகேயன், டிடி, மாகாபா ஆனந்த், விஜே.விக்னேஷ் ஆகியோர் தன் திறமையால் முன்னேறினார்கள்.
பிக் பாஸ் ஜூலிக்கும் வைஷ்ணவிக்கும் டஃப் ஃபைட் கொடுத்த மீரா மிதுன்.. ஒருவழியாக வெளியேறினார்
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன், ஜாக்குலின் (jacqueline) கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். ரக்ஷன் ஏற்கனவே சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்த நிலையில் ஜாக்குலின் (jacqueline) விஜய் டிவியின் தேன்மொழி சீரியலில் நடித்துள்ளார். கூடிய சீக்கிரமே இந்த சீரியல் ஒளிப்பரபாகும் என்ற வீடியோ வெளியாகியுள்ளது.
கணவருடனான மோதலால் பிக் பிஸ் வீட்டிற்கு வந்தாரா மதுமிதா?
ஓகே ஓகே படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி ரோலில் அறிமுகமானார் மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் இருந்து ஜாங்கிரி மதுமிதா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். தற்போது இவர் விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார்.
கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மதுமிதாவுக்கு திருமணம் நடந்தது. இவரது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதத்திலேயே திடீர் என பிக்பாஸ் வீட்டிற்குள்சென்றார். இது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் மதுமிதாவுக்கு , அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த சந்தேகம் வர முக்கிய காரணம் இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள திருமணம் ஆன பிரபலங்கள் அவர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளை மிஸ் செய்வதாக கூறுவது உண்டு. ஆனால் மதுமிதா ஒரு முறை கூட அவருடைய கணவர் பற்றிய இதுபோல் எதுவுமே கூறியது இல்லை. எனவே மதுமிதா ஏதோ மன கஷ்டத்தோடு தான் பிக்பாஸ் வீட்டில் உள்ளார் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
எனினும் முந்தைய சீசன்களிலும் மதுமிதாவை அழைத்த போது அவர் நிராகரித்து விட்டதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதால் மதுமிதா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து மதுமிதாவோ அல்லது அவருடைய கணவரோ இதுகுறித்து சொன்னால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறாக நடந்ததாக மீரா குற்றச்சாட்டு, கண்ணீர் விட்ட சேரன் : பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian