Bigg Boss

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

Swathi Subramanian  |  Aug 12, 2019
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

பிக்பாஸ் சீசன் 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா வெளியேற்றபட்டனர். பின்னர் சில காரணங்களால் சரவணன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு பிக் பாஸ் சூப்பர் பவர் கொடுத்தார். மேலும் பல்வேறு டாஸ்க்கில் நடுவராக கஸ்தூரி நியமிக்கப்பட்டார். 

கஸ்தூரிக்கு பவர் கொடுத்த பிக் பாஸ் : வித்தியாசமான தண்டனைகளால் தவிக்கும் ஹவுஸ் மேட்ஸ்

பேஷன் ஷோ டாஷ்க்கிலும்  அவரே நடுவராக இருந்தார். பிரிஷ்மா ஸ்பான்ஸர் செய்த இந்த டாஸ்கில் கவின்-லாஸ்லியா, தர்ஷன் – ஷெரின் , சாக்ஷி-சாண்டி, சேரன்-மதுமிதா ஜோடியாக கேட் வாக் செய்தனர். அதில் தர்ஷன், சாக்ஷி வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பபட்டனர். எனினும் கவின்-லாஸ்லியா ஜோடியை பெரும்பாலோனோர் விரும்பினர். சமூக வலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்கள் அதிகம் வலம் வந்தது. 

கடந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைவான ஓட்டுக்களை பெற்று சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த சில வாரங்களாகவே அவர் வெளியேறி விடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. ஆனால் தொடர்ந்து தப்பித்து வந்தவர், நேற்று ஒரு வழியாக வெளியேறி விட்டார். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் நல்லவராக காணப்பட்டார் சாக்‌ஷி. கவினுடன் நெருங்கிப் பழகியதால் பல்வேறு பிரச்சினையில் சிக்கினார். அவர்கள் இருவரும் பழகிய விதத்தைப் பார்த்து காதலர்கள் என்றே அனைவரும் நினைத்தனர். 

ஆனால் எதிர்பாராத விதமாக லாஸ்லியா கவினுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் சாக்‌ஷி வில்லியானார். சாக்லேட் பிரச்சினையில் சாக்‌ஷியையே அனைவரும் திட்டினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்‌ஷி வெளியேற வேண்டும் என பார்வையாளர்க என்னத் தொடங்கினர். கடந்த வாரம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எவிக்சனில் இருந்து சாக்‌ஷி தப்பினார். ஒரு வழியாக நேற்று பிக் பாஸ் வீட்டில் குறைவான ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அவர் வெளியேறினார். 

பின்னர் அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களுடன் பேசும் வாய்ப்பு சாக்ஷிக்கு அளிக்கப்பட்டது. அப்போது கவின் சாக்ஷி மற்றும் அவர் தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது குறிக்கிட்டு பேசிய சாக்ஷியின் தந்தை, “ஏன் சாரி கேட்கிறீர்கள்” என்று சாக்ஷியின் தந்தை கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவின், சாக்ஷியை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டேன் என்றார். அதற்கு சாக்ஷியின் தந்தை இது வெறும் விளையாட்டு தானே இதற்கு ஏன் சாரி கேட்கிறீங்க என்றார். அப்போது கவின் சோகமாக உட்காந்து இருந்தார்.

அடுத்தவர் காதலனை காதலிக்கும் லாஸ்லியா மற்றும் அபிராமி இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன ?

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விற்று வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அழகான எதிர்மறை எண்ணங்களை விட்டு வெளியேறி, வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. எல்லா பெண்களும் வலுவாகவும், தைரியமாகவும் இருங்கள். நீங்கள் வீழ்ந்துவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார். நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவர்களின் இதயங்களை தட்டி எழுப்பலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பிக் பாஸில் இருந்து சாக்ஷி வெளியேறியதை நினைத்து ஷெரின் நாமினேஷன் நடைபெறும் பெறும் போது அழுதார். அதுகுறித்த மீம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சாக்ஷி, இந்த உலத்திலேயே உன்னை தான் நான் அதிகம் விரும்புகிறேன். நீ என்னை அதிகம் புரிந்து வைத்துள்ளாய் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் அதிரடியாக மீண்டும் வனிதா (vanitha) நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீடு வனிதாவின் பிரிவுக்கு பின்பு களை இழந்து விட்டது. வனிதாவின் துணிச்சலான பேச்சு, அடிக்கடி சண்டை தினம் ஒரு பிரச்சனை என வனிதாவிற்காகவே தினமும் பிக் பாஸை பார்த்து வந்த கூட்டம் வனிதா சென்ற பிறகு எபிசோட்டை பார்ப்பதையே விட்டு விட்டது. தர்ஷன், மதுமிதாவிடம் அவர் செய்த பிரச்சனைகளுக்காக பலரும் வனிதாவை திட்டினார்கள். 

இதனால் அவர் நாமினேட் செய்யப்பட்டு பிக் பாஸ் இல்லத்தில் இருந்து 3வது வாரமே வெளியேறினார். அவர் சென்ற பிறகு மீரா அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் மீராவுடன் ஒப்பிடுகையில் வனிதா (vanitha) எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றியது. வனிதா இருந்திருந்தால் கவின் – சாக்‌ஷி- லாஸ்லியா முக்கோண காதலுக்கு எப்பவோ முற்றுப்புள்ளி வைத்திருப்பார் என்ற பேச்சுக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!

இது பிக் பாஸின் காதுக்கு சென்றதோ என்னவோ தெரியவில்லை. நேற்று கெஸ்டாக வனிதா பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்தார். குடும்ப குத்து விளக்காக வந்த வனிதாவை சேரன் மாலை போட்டு வரவேற்றார். வந்தவுடன் சக போட்டியாளர்களின் காதில் ரத்தம் வராத குறையாக பேசித் தீர்த்து விட்டார். குறிப்பாக லாஸ்லியாவின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதில் குறியாக உள்ளார். அதேபோல் கவினையும் சாரமாரியாக விளாசினார் வந்த வேலையை மட்டும் பார்க்காமல் காதல் என்று ஏன் நேரத்தை வீணாக்குறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

முக்கியமாக வொர்த்தே இல்லை என கவினை பார்த்து வனிதா (vanitha) கூறும் போது கவினின் முகத்தில் ஈயாடவில்லை. சாக்ஷி போய்விட்டார் இனிமே நம்ம ரூட்டு க்ளியர் என்று நிம்மதியாக இருந்த கவினும், லாஸ்லியாவும் வனிதாவின் வருகையால் பேய் அறைந்தது போல் இருந்தனர். மற்றவர்கள் விட்டு கொடுக்கும் டைட்டில் தான் உனக்கு வேண்டுமா? மற்றவர்கள் பிச்சை போட வேண்டுமா என தர்ஷனிடம் கேள்வி எழுப்பினார்.  

இந்த கேள்வியால் அதிர்ந்த தர்ஷன் இல்லை என்று தலையை ஆட்டினார். அண்ணா என்பதற்காக விட்டுக்கொடுத்து செல்ல இது என்ன கிழக்கு சீமையிலே படமா? விட்டுகொடுத்து போறதுக்கு இவர் அப்பா, அது பொண்ணு என்றால் வீட்டுக்கு கிளம்புங்க என்று சேரன் மற்றும் லாஸ்லியாவை குறிப்பிட்டு பேசினார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் முகன் ராவ், அபிராமி, கவின், லாஸ்லியா மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், அபிக்கு அட்வைஸ் செய்கிறார். அப்போது முகெனுக்கு தில்லு இருந்தால் முன்னாடி அப்படி இருந்துச்சி, உன்ன பார்த்த உடனே எனக்கு உன்னை பிடித்திருப்பதாக தோன்றுகிறது என்று சொல்லி இருந்தால் தப்பே கிடையாது. நீ தான் பின்னாடி ஓடிக்கிட்டு இருக்க. கடைசியில் நீ ஜீரோ ஆகிட்டு இருக்க, அவன் ஹீரோ ஆகிட்டு இருக்கான். நீ என்னடா என்னை லவ் பண்றது எனக்குத் தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இரு. துர்கா யாரு அது குறித்து ஏதேனும் சொன்னானா என வினவினார். அதற்கு அபி, யார் துர்கா? என்று அப்பாவியாக கேள்வி கேட்பது போல புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Bigg Boss